Sunday, June 2, 2013

விஜய் அவார்ட்ஸ் ஓர் பார்வை

கிட்டத்தட்ட4 மணி நேரம் நடந்ததை  10 மணி நேரம் காட்ட விஜய் டிவியால் தான் முடியும் என நினைக்கிறேன் .விஜய் அவார்ட்ஸ் சென்ற வெள்ளி ,சனி 6 to 11 என வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு இருந்த நிகழ்ச்சி

  • RED  CARPET  எனப்படும் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து விழா உள்ளே செல்ல ஏற்பாடு செய்து இருந்தனர்  பின்னர் திவ்யதர்ஷினி கேள்வி கேட்டு உள்ளே அனுப்புவது என கலக்கலாக  திகழ்ந்தது 
  • நகைச்சுவை தவிர பெரும்பாலான பிரிவுகளில் விஜயின் துப்பாக்கி படம் வென்றது .விஜயே தன்னை விட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் தனுஷ் கூட இருக்கிறார் என்றார் .இதை தனுஷ் twitter இல் புகழ்த்து தள்ளியது தனிக்கதை 
  • விக்ரம் ,சூர்யா ,அஜித் போன்ற வர்களுக்கு எந்த விருதும் கிடைக்க  வில்லை 
  • சாருக் ra one இல் இருந்து ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டார் .விஜயை GOOGLE GOOGLE  பாடலுக்கு ஆட அழைத்தார் .விஜயும் ஒரு நடன அசைவை கஷ்டப்பட்டு (?) ஆடினார் 

  • சித்தார்த் பாடிய பாடல்களுக்கு சமந்தாவின் வெக்கம் தான் மேல் உள்ள படத்தில் உள்ளது .பல காதல் பாடல்களை கலக்கலாக பாடினார் சித்தார்த் 
  • சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற தாமரை உணர்ச்சிவசப்பட்டு கற்பழிப்பு ஆபாசம் இரட்டை அர்த்த வசனங்களை  சினிமாவில் நீக்க வேண்டும் என்று சொல்லி சென்ற சில நிமிடங்களில் சரத்குமார்  மகள் வரலட்சுமி பிஸ்தா பாட்டுக்கு ஒரு கெட்ட  ஆட்டம்  போட்டார் .மாதவனும் கோபிநாத்தும் டபுள் மீனிங்கில்  (SINGLE  மீனிங் தான்   )கலாய்த்தனர்  .என்ன ஒரு முரண் ?
  • ஆர்யா நயன்தாராவுக்கு திருமணம் என பரபரப்பு ஏற்படுத்தி அது  ராஜா  ராணி பட PROMOTION என உப்பு சப்பில்லாமல் முடித்தனர் 
  • நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஷாருக்கான் வந்திருந்தார்
  • விழாவுக்கு அழைப்பு புதுமையாக ஓவியங்கள் மூலம் அளித்தது  விஜய் டிவி 
VIJAY AWARDS
  • BEST FIND OF THE YEAR என்ற ஒரு விருது ஆண்ட்ரியா புகழ் அணிருத்துக்கு வழங்க பட்டது (கொலை வெறி பாடலுக்காக )
  • BEST ACTOR விருது தனுஷுக்கு வழங்க பட்டது 3 படத்திற்காக !
  • சூர்யாவின் மாற்றானுக்கு எந்த விருதும் கிடைக்க வில்லை .எனினும் சத்ய ராஜுக்கு விருது குடுக்க சிவக்குமார் வந்திருந்தார் 
  • விஸ்வரூப பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக கமல் தனது குருவிற்கு  மரியாதை அளித்தார் 
  • முதல் முறையாக SHORT FILM க்கும் விருது வழங்கப்பட்டது 
இன்னும் பல இந்நிகழ்ச்சியில் களை  கட்டியது .தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஆண்டுகள் விருது கொடுப்பது ஆச்சர்யம் தான் .விஜய் அவார்ட்ஸ் உடன் போட்டி போட்ட சன் குடும்ப விருதுகள் ,இசையருவி விருதுகள் ஓரிரண்டு ஆண்டுகளில் காணமல் போனது குறிப்பிடத்தக்கது .