Friday, February 18, 2011

கோப்பை நமதே !


பெட்டிக்கடை முதல்
நட்சத்திர ஹோட்டல்கள்
வரை எங்கும் எதிலும்
பேச பட இருக்கிறது
உலக கோப்பை கிரிக்கெட்
நாளை முதல் ..


14 அணிகள் மல்லுகட்டும்
போதிலும் கோப்பை வெல்ல
நமக்கு வாய்ப்பு அதிகமோ !
அனுபவ படை இளம் படை என
சரி விகித வீரர்களை கொண்டதால் ...


பயிற்சி ஆட்டங்களில்
சிங்கங்களை
துரத்தி வெற்றி கண்டோம்
பயமிருக்கிறது வங்கதேசத்திடம்
அலட்சியமாக விளையாடி
தோற்று விடுவோமா என்று ..

வெல்வோம் சச்சினுக்கு
கோப்பையை பரிசாய்
கொடுப்போம் கனா காண்போம்
நனவாக்குவது வீரர்கள் கையில் ..
கோப்பை நமதே !




Thursday, February 3, 2011

உன்னை தொலைத்த நாள் முதல் ...


தனிமை எனக்கு
பிடித்த ஒன்று தான்
ஆனால் நீ இல்லாத தனிமை
கொடுமை அல்லவா!


நீ இருந்து விடுவாய்
நான் இல்லாமல் ...
என்னால் இருக்க
முடிய வில்லையே
ஒருகணம் கூட
நீ இல்லாமல் ...

என் உறுப்புகள்
செயல் இழந்ததாய்
உணர்கிறேன்
உன்னை தொலைத்த
நாள் முதல் ..

இப்போது வேறொரு
கள்வனின்
கரங்களில் நீ ..
உன்னை எப்படி வைத்து
கொள்வானோ என்ற
ஆதங்கத்தில் நான் ...

தினம் தினம்
உன்னை பார்க்காமல்
புழுங்கி கொண்டிருக்கிறது
என் மனம்...

உன்னை தொற்றுகிருமிகள்
தாக்கி விட்டால்
பதறி போவேன் நான்
உடனே விடுவிப்பது தான்
என் முதல் வேலை !

எங்கு தொலைந்து
போனாய் என்னை விட்டு ?
எப்படி இருக்கிறாய்
என் இனிய கைபேசியே ?
என் கரம் படாமல் ...


(எனது கைபேசி (CELL PHONE) கடந்த ஞாயிறு அன்று இரவு மதுரை வருகையில் சேலம் பேருந்தில் தொலைந்து விட்டது .அதை ஒட்டி நான் எழுதிய கவிதை இது )