Tuesday, October 31, 2017

எந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் !

ரஜினி ,2.0,EMY JACKSON,RAJINI,2.0 SONGS LYRICS

முந்தைய பதிவான DNCMEmBW4AAdwXw
2.0 பாடல்கள் என் பார்வையில் ...

பதிவுக்கு அமோக ஆதரவளித்த வாசகர்களுக்கு நன்றி .இந்த பதிவு எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வரிகளை  தமிழில் முழுமையாக தருகிறது படித்து இன்புறுங்கள் !
என் உயிரின் உயிரே பேட்டரியே 
எனை நீ பிரியாதே 
என் உயிரின் உயிரே பேட்டரியே 
துளியும் குறையாதே !
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே !

ரத்தம் இல்லா  கன்னம் தன்னில்
முத்தம் வைக்கட்டா ?
புத்தம் புது ஜாவா ரோஜா பூக்க 
செய்யட்டா !

சுத்தம் செய்த டேட்டா 
மட்டும் ஊட்டி விடட்டா ?
ஹே  உன் பஸ்ஸின்  கண்டக்டர் நான் 
                                                                                                         -என் உயிரின் உயிரே பேட்டரியே {2}
என் சென்சாருக்கு உணர்வும் உணவும் நீ 
என் கேபிள் வழி பரவும் தரவும்  நீ 
என் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ
என்னுள் எல்லாம் நிறையும் நிலவும் நீ !

என் போகும் வடிவே
என் கடவு சொல்லே !
என் பணிமடி
கணினி ரஜினி நீ

இளகும் இளகும்
இரும்பும் நீ!
இன்றே உருகி ஒன்றாய்
ஆவோம் நாம் !

ஆ  வா !என் அவா
நீ தானே  நீ
ஏவாள் என் ஏவாள்
நீ தான் இனி !
LOVE YOU FROM
ZERO TO INFINITY
                                                                                                 -என் உயிரின் உயிரே பேட்டரியே {4}
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே !
முந்தைய பதிவு 
 DNCMEmBW4AAdwXw
பாடல் கேக்க 


Saturday, October 28, 2017

2.0 பாடல்கள் என் பார்வையில் ...

2.0,RAJINI

காலா பாடல்கள் வருவதற்குள் 2.0 பாடல்கள் வந்ததில் மகிழ்ச்சி தான் .மொத்தம் 3 பாடல்கள் 2 நேற்று வெளியிடப்பட்டது   மதன் கார்கி இரண்டு பாடல்களை எழுதி கவிபேரரசு வைரமுத்துக்கு இடம் அளிக்காமல்  செய்து விட்டார்  .தனது அப்பாவின் இடத்தை பிடித்து விட்டார் சங்கர் படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுத !அந்த பாடல்கள் பற்றிய எனது பார்வை இங்கே !

எந்திர லோகத்து சுந்தரியே !


EMY JACKSON,RAJINI,2.0

இசை                       ரஹ்மான்
வரிகள்                   மதன் கார்க்கி

பாடியவர்கள்      SID SRIRAM, SHASHAA TIRUPATI

இந்திர லோகத்து சுந்தரி என்பார்கள் இங்கே அதை எந்திர லோகத்து சுந்தரி என மாற்றி இருப்பதன் மூலம் இப்பாடல் இரண்டு ரோபோட்க்கு இடையேயான காதல் பற்றிய பாடல் போல் தெரிகிறது .எமி ஜாக்சன் ரோபோ getup அதை உறுதி செய்கிறது

பாடலில் சில வரிகள் 

"என் உயிரே  உயிரே பேட்டரியே  எனை நீ பிரியாதே

என் உயிரே  உயிரே பேட்டரியே  துளியும் குறையாதே "

"என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
மின்சார சம்சாரமே !"

"என் சென்சார்க்கு  உணர்வும் உணவும் நீ

என் கேபிள் வழி பரவும் கனவும்  நீ "    இந்த வரிகள் ரோபோ காதலை அப்பட்டமாக சொல்கிறது



ராஜாளி நீ காலி 


இசை                       ரஹ்மான்
வரிகள்                   மதன் கார்க்கி

பாடியவர்கள்      BLAAZE,ARJUN CHANDY ,SID SRIRAM

பாடலில் சில வரிகள் 

'Isaac Asimov  பேரன்டா 
சுண்ட காச சூரனடா  'என பாடல் தொடங்குகிறது 
Isaac Asimov யாரென விக்கி அடித்ததில் அவர் SCIENCE FICTION கில்லாடி என தெரிகிறது 

"மாசு நான் பொடிமாசு 
வெடிச்சா கலக்கும் பட்டாசு" என இளைய ஹீரோகளுக்கு சவால் விடுகிறார் 

நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டிருக்கும் பாடல் கேட்க தூண்டினாலும் முந்திய பாடலை  போலவே இருப்பது பாடல் பாடியவர் ஒருவர் என்பதால் தான் என நினைக்கிறேன்


மொத்தத்தில் இரண்டு பாடல்களும் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தும் என்பதில் ஐயமில்லை

பாடல்கள் கேக்க கீழே