டெஸ்ட் தொடரை இழப்பதற்கு முன்பு ஒருமுதல் இடம் இழந்த இந்தியா என்ற பதிவு போட்டிருந்தேன் .டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த நாம் இப்போது ஒரு தின தொடரையும் 0-3 என்ற கணக்கில் இழந்திருக்கிறோம் .இது பற்றிய எனது உணர்வு ..
காயம் அடைந்ததாய்
சொல்லிக்கொண்டவர்கள்
காயம் அடைந்தவர்கள்
எல்லோரும் பங்கேற்பர்
வர விருக்கும்
CHAMPIONS LEAGUE தொடரில் ..
என்ன மாயமோ இது ?
எல்லாம் பணம் தானா ?
0-4 என்ற கணக்கில்
டெஸ்ட் தொடரை இழந்தோம்
௦-3 என்ற கணக்கில்
ஒரு தின தொடரை இழந்திருக்கிறோம்
ஒரு தின தொடரை இழந்திருக்கிறோம்
இப்போது..
இனி இழப்பதற்கு ஏது ?
உலக சாம்பியன் என்று
மார்தட்டி அதிக நாட்கள் இல்லை ..
அதற்குள் ஒரு வெற்றி கூட
இல்லாமல் தாயகம்
திரும்பி இருக்கிறது இந்தியா
அதிர்ஷ்டமும் இல்லை நமக்கு
வெற்றியும் இல்லை
இந்த ஒரு தின தொடரில் ..
மழை கூட நமக்கு
சாதகமாய் இல்லை.
டிராவிட்டும் ஒய்வு பெற்று
விட்டார் இனி யாரை நம்பி
வெளிநாட்டு சுற்று பயணங்கள்?
மேற்கிந்திய தீவுகள் தொடர்
முடிந்தவுடன் நாம் வங்க தேசத்திற்கு
சென்றிருக்க வேண்டும்
என்று சொன்னாலும் சொல்வார் தோனி ..
டெஸ்ட் தொடரை விட
ஒரு தின தொடரில் நமது
பேட்டிங் சிறந்து இருப்பது
மட்டுமே ஆறுதல் ..
டெஸ்ட் ,இருபது ஓவர்
ஒருதின போட்டி என
முத்தாய்ப்பு தோல்விகள்
உலகச் சாம்பியனுக்கு ...
நாம் சாம்பியனா என்ன ?..