Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Sunday, May 26, 2013

சச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா ?


சூதாட்டம் ,MATCH  FIXING ,SPOT FIXING  என பல விசயங்கள் அடிபட்டாலும் 
இறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .
  • மும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 125/9 எடுத்து தோல்வி யடைந்தது .தோணி மட்டும் 63 ரன்கள் எடுத்தார் 
  • இதுவரை நடந்த ஆறு சீசன் களில் 5 இல் இறுதி போட்டியில் இருந்திருக்கிறது சென்னை .அதில் இரண்டை  வென்று உள்ளது 
  • எப்போதும் சிறந்த OPENING இன்னிங்க்ஸ் தரும் ஹஸ்ஸி 0 எடுத்து வெளியேறவும் சென்னை அவ்வளவு தான் என முடிவாயிற்று .யார் கண்டார் இந்த போட்டியிலும் SPOT FIXING  நடந்ததோ என்னவோ ?
  • சச்சின் தனது கடைசி IPL இது என நேற்று தெரிவித்தார் .இது மிக சரியான முடிவு .ஆனால் டிராவிட் IPL இல் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது 
  • சில புள்ளி விவரங்கள் கீழே :


கொசுறு :

முன்னதாக விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை வென்று விடும் என்ற நினைப்பில் நான் EDIT செய்த போட்டோ கீழே .அதில் 3TITLES என்பதற்கு பதில் 2 TITLES என்று மாற்றினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் .

பதிவின் தலைப்பு கூட இப்படி வைத்து இருந்தேன் IPL 7:சென்னை VS ? கணிப்பு இப்போதே !

CSK WON IPL 6



Saturday, May 26, 2012

விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்தது சென்னை

விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது சென்னை.

சென்னையின்  இமாலய வெற்றி இலக்கான 223 ரன் இலக்கை  துரத்த முடியாமல் 136 ரன்களுக்குள் சுருண்டது டெல்லி



போட்டியின் சில சுவாரசியங்கள் :

  • இரு சதங்கள் IPL இல் கண்ட முதல் இந்தியன் என்ற பெயரை பெற்றார் முரளி விஜய்
  • 13 போட்டிகளில் விளையாடி 294 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் .இந்த சதமே அவரது சிறப்பான ஆட்டம் இந்த IPL இல் ,113(58)
  • அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்
  • இந்த  IPL 5 இன் அதிக பட்ச ஸ்கோர் இன்றைய 222 ரன்கள் தான் .
  • டெல்லியில் ஜெயவர்த்தனே மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார் 55(38)
  • ஷேவாக் 1 ரன்களுடன் வெளியேறினார் 

லீக் போட்டிகளில் முதல் இடத்தில்  இருந்த டெல்லியை இறுதி இடத்தில் இருந்த சென்னை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது கொல்கத்தாவுடன் விளையாட ..

உங்கள் பார்வைக்கு :

 

பில்லா -2 (BILLA-2) பாடல்கள் ஓர் அலசல்


Thursday, May 24, 2012

மும்பையை முடக்கியது சென்னை

நேற்று  நடந்த PLAYOFF ELIMINATOR போட்டியில் மும்பையை எளிதாக வீழ்த்தி முடக்கியது சென்னை .வரும் வெள்ளி அன்று இறுதி போட்டிக்கான தகுதி போட்டிக்கு டெல்லியுடன் விளையாடுகிறது சென்னை .



போட்டியின் சில சுவராசியங்கள்

  • ஆரம்பத்தில் படுமந்தமாக விளையாடினாலும் தோனியின் இறுதி கட்ட அதிரடியால் 188 ரன்கள் வெற்றி இலக்காக நியமித்தது சென்னை 
  • மும்பை அணியால் 149 ரன்களையே எடுக்க முடிந்தது .38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது மும்பை
  • சென்னையின் டோனி -பிராவோ  இணை 29 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது 
  • பிராவோ  14 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார்


  • இந்த IPL இல் தோனி யின் முதல் அரை சதம் இந்த போட்டியில் தான் 51*(20)
  • சச்சின் 11 ரன்களை மட்டுமே எடுத்தார் 
  • மும்பையின் ஸ்மித் மட்டும் 38 ரன்கள் எடுத்தார்
இதன் மூலம் இறுதி போட்டியில் விளையாடுவதற்கான தகுதி போட்டியில் டெல்லியுடன்  மோதுகிறது சென்னை .இதில் வெற்றி பெறும் அணி கொல்கத்தாவை இறுதி போட்டியில் சந்திக்கும் .





உங்கள்  பார்வைக்கு :
 


Monday, May 21, 2012

அதிர்ஷ்டத்தில் நுழைந்தது சென்னை PLAYOFFக்கு..

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சென்னை பக்கம் தோனி பக்கம் உண்டு IPL இல் ..அது இந்த முறையும் நடந்து விட்டது .PLAYOFF இல் நுழையுமா இல்லையா என்ற கேள்விக்கு பெங்களூர் டெக்கானிடம்   தோற்றதும்  விடை கிடைத்து விட்டது 
IPL 5 DHONI,CHENNAI SUPER KINGS



  • டெக்கானின் 133 ரன்  இலக்கை துரத்த முடியாமல் தோற்றது ஆச்சர்யம் தான் .கெயில் இன்னும் கொஞ்சம் நின்றிருந்தால் வெற்றி பெற்று இருக்கும் 10 பந்துகளுக்கு 27 ரன்களுடன் வெளியேறினார்.
  • கோலி 42, திவாரி 30 எடுத்தும் பின்னர் வந்த வீரர்களின் ஆட்டத்தால் இலக்கை துரத்த முடியாமல் சென்னை அணிக்கு வழிவிட்டு விலகியது பெங்களூர் .
  • முன்னதாக டெக்கானின் டும்னி இல்லையேல் டெக்கான்  இதைவிட குறைவான இலக்கையே நிர்ணயத்திருக்கும்74(53)
  • முதல் மூன்று இடங்களுக்கு போட்டி அவ்வளவாக இல்லை நான்காவது இடத்துக்கு மல்லுக்கட்டிய அணிகளில் கடைசியில் டெக்கானின் புண்ணியத்தால் சென்னை PLAYOFF க்கு நுழைந்து  இருக்கிறது .
  • 8 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை ,பெங்களூர் ,பஞ்சாப் அணிகளில்  NET RUN RATE +0.100 ஆக இருப்பதால் அதிர்ஷ்டத்தில் சென்னை PLAYOFF இல் நுழைந்து விட்டது .மற்ற இரு அணிகளின் ரன் ரேட் - இல் ..

இறுதிகட்ட புள்ளி நிலவரம் கீழே 

IPL 5 STANDINGS


PLAYOFF போட்டிகள் விவரம் கீழே 

IPL 5 PLAYOFF MATCHES


மும்பை யை சென்னை Eliminator சுற்றில் சந்திக்கிறது .இதில் தோற்கும் அணி இறுதி போட்டியில்  ஆட முடியாது .வெற்றி பெறும் அணி இன்னொரு போட்டியில் விளையாடி இறுதி போட்டியில் சந்திக்கும்  

உங்கள்  பார்வைக்கு :


Saturday, May 12, 2012

தாதா இனி IPL கோதாவில் இல்லை !

கொல்கத்தா தாதா என அழைக்கப்படும் சௌரவ் கங்குலி நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்க படவில்லை ,இனி வரும் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு IPL போட்டியிலும்  புனே அணிக்கு கங்குலி இல்லை என புனே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

நேற்றை போட்டி வரை அந்த அணி 8  வது இடத்தில்  உள்ளது .இதனால் கடுப்படைந்த புனே அணி நிர்வாகம் அவருக்கு கட்டாய ஒய்வு கொடுத்துள்ளது

கங்குலி ,புனே

கங்குலி இந்த IPL இல் விளையாடிய விதம் கீழே

  • 13 போட்டிகளில் விளையாடி உள்ள கங்குலி 261 ரன்கள் எடுத்துள்ளார் .அதிக பட்சம் 45. 
  • ஒரு அரை சதமும் காணவில்லை
  • 13 போட்டிகளில் விளையாடி 8 ஓவர்கள் மட்டுமே பந்து  வீசி உள்ளார் .2 விக்கெட்  மட்டுமே எடுத்துள்ளார்
  • தொடக்க போட்டிகளில் சிறப்பாக வழிநடத்திய கங்குலி தொடர்ந்து போட்டிகளில் தோல்வி கண்டதால் ஆட்டம் கண்டுள்ளார் 

தோனியை இழுத்த கங்குலி

  • தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு ஏற்க முடியாது.அணியில் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வில்லை .
  • கடந்த உலக கோப்பையில் டோனி கடைசி வரை பார்மில் இல்லை .இருப்பினும் மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தான்  கோப்பை வெல்ல முடிந்தது என்றார் .
  • IPL 5 முடியும் வரை நான் தான் அணி தலைவனாக தொடர்வேன் என நகைச்சுவை செய்துள்ளார்  அவரை நீக்கிய பிறகு ,,
எது எப்படியோ கண்களை பிதுக்கி கொண்டு மைதானத்தில் அவர் ஆடும் அழகை  இனி ரசிக்க முடியாது IPL இல் .தாதா இனி IPL கோதாவில் இல்லை ..


உங்கள்  பார்வைக்கு :

Wednesday, April 4, 2012

IPL -5 ஆரம்பம் -ஹாட்ரிக் அடிக்குமா சென்னை?

IPL-5,DHONI,CHENNAI SUPER KINGS
IPL-5 இன்னும் சற்று நேரத்தில்(APRIL 4,2012, 8 PM)தொடங்க விருக்கிறது .கடந்த 2 முறை கோப்பையை வென்ற சென்னை இம்முறையும் வென்று ஹாட்ரிக் அடிக்குமா ? மே 27  அன்று தெரிந்து விடும் யாருக்கு கோப்பை என்று ?
  • சினிமா நட்சத்திரங்கள் புடை சூழ நேற்று  ஆரம்பமான IPL தொடக்க விழாவே சொல்லியது இந்த IPL எத்தனை பிரம்மாண்டம் என்று !
  • கடந்த முறை பங்கேற்ற  கொச்சி டாஸ்கர்ஸ் இப்போது இல்லை .மொத்தம் 9 அணிகள்.76 ஆட்டங்கள் .ஒவ்வொரு  அணியும் மற்ற அணியுடன் 2 முறை மோத வேண்டும் .
  • சென்னை  அணிக்கு அதன் கேப்டன் தோனி யின் அதிர்ஷ்டம்  IPL இல் கை கொடுத்தது .இந்த முறை இந்திய அணியின் கேப்டன் ஆக  அவரது  சமீப  தொடர்ந்த தோல்விகள் இதில் மாறுமா ?
  • இறுதி  நேரத்தில்  சச்சின் கேப்டன் பதவியை துறந்ததால் சச்சின் சிறப்பாக விளையாட  வாய்ப்பு உண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ..
  • போன சீசனில் அனைத்து அணிகளும் கைவிட்ட நிலையில் புனே வாரியர்ஸ் அணிக்காக இறுதியில் களமிறங்கிய பெரிதாக சாதிக்காத   கங்குலி இப்போது கேப்டன் அவ்வணிக்கு!
  • டெஸ்ட்  கிரிக்கெட் அணி போன்று உள்ள ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் டிராவிட் .முதல் IPL க்கு பிறகு பெரிதாக எதையும் சாதிக்க வில்லை அவ்வணி .
அணிகள்   மற்றும் அதன் தலைவர்கள் கீழே !

IPL TEAMS

 TEAMS & CAPTAINS



CAPTAIN
CHENNAI SUPER KINGS
M.S DHONI
DECAN CHARGERS
KUMAR SANGAKARA
DELHI DAREDEVILS
SHEWAG
KINGS XI PUNJAB
GILCHRIST
KOLKATTA KNIGHT RIDERS
GAUTAM GAMBIR
MUMBAI INDIANS
HARBAJAN SINGH
PUNE WARRIORS
GANGULY
ROYAL CHALLENGERS BANGALORE
VETTORI
RAJASTAN ROYALS
DRAVID



இதுவரை நடந்த போட்டிகளின் வெற்றியாளர்கள் 


IPL வெற்றியாளர்கள்



வெற்றியாளர்
IPL-1
RAJASTHAN ROYALS
IPL-2
DECAN CHARGERS
IPL-3
CHENNAI SUPER KINGS
IPL-4
CHENNAI SUPER KINGS
IPL-5
?


உங்கள் பார்வைக்கு :


Friday, March 16, 2012

சச்சினின் 100 வது சதம்- ஓர் பார்வை


சச்சினுக்கு வாழ்த்துக்கள் 100 வது சதம் கண்டதற்கு !

  • சச்சினின்  100 வது சதம் நீண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்தே விட்டது .
  • இதுவரை 51 டெஸ்ட் சதங்கள்  மற்றும் 49 ஒரு தின சதங்கள் என மொத்தம் 100 சதங்கள் கண்டுள்ளார் 
  • அவரது 100 வது சதம் வங்க தேசத்திற்கு எதிராக அமைந்து  விட்டது.(AUSTRALIA விற்கு எதிராக அடித்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும் )
  • டெஸ்ட் அந்தஸ்து  பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதம் கண்டுள்ளார்
  •  6  இரட்டை சதங்களை விளாசி இருக்கிறார் டெஸ்டில் .ஒரு தின கிரிக்கெட்டில் 10 அணிகளுக்கு எதிராக சதம் கண்டுள்ளார் . 
நன்றி:யாஹூ கிரிக்கெட்
  • ஒரு தின கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் (தற்போது சேவாக் 219).
  • முச்சதம் அவருக்கு இதுவரை எட்ட வில்லை .அதையும் விரைவில் எட்டுவார் .
  • ஒரு  தின போட்டிகளில் 2000 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்
டெஸ்ட் மற்றும் ஒருதின கிரிக்கெட்டில் அவரது சதங்கள் கீழே பட்டியலாக (WIKIPEDIA வில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்டன )

சச்சினின் சதங்கள் TEST vs  ODI  ஓர் பார்வை 



TEST
ODI
மொத்த சதங்கள்
51
49
முதல் சதம்
இங்கிலாந்திற்கு எதிராக
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
அதிக பட்சம்
  248*வங்கதேசத்திற்கு எதிராக            
200*தென் ஆப்பிரிக்காவிற்க்கு எதிராக
90களில் ஆட்டமிழந்தது
9 தடவை
20 தடவை


முந்தைய கிரிக்கெட் பதிவு :இந்திய அணியின் சுவர் ஒய்வு- சச்சின் ?



Saturday, March 10, 2012

இந்திய அணியின் சுவர் ஒய்வு- சச்சின் ?


  • "இளம் வீரர்களுக்கு வழி விட்டு விலகுகிறேன் "-இது இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட் நேற்றைய ஓய்வு அறிவிப்பின் போது சொன்னது.இது மீடியாக்களுக்கு நல்ல செய்தி ஆகி விட்டது.
  • டிராவிட்டை போன்றே இளம் வீரர்களுக்கு வழிவிட்டு பிற மூத்த வீரர்கள் விலக வேண்டும் என்று மறைமுகமாகவும் மேலும் சில பத்திரிகைகள் பகிங்கரமாக சச்சின் ,லக்ஷ்மன் அணியை விட்டு  விலக வேண்டும் என கொக்கரிக்கின்றன.

  • ஏறக்குறைய சச்சின் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்.ஓய்வு பெறா விட்டாலும் இப்போது ஒன்றிரண்டு போட்டிகளில் தான் அவரை காண முடிகிறது .முக்கிய போட்டிகள் தவிர மற்ற போட்டிகளில் ஒய்வு  தான் ,.உலக கோப்பைக்கு பிறகு தற்போதைய ஆஸ்திரேலியா சுற்று பயணத்தில் தான் சச்சின் .ஆனால் இந்த ஓய்வு இவர் விரும்பி இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
  • கங்குலியை வலுக்கட்டயாமாக ஓய்வு பெற வைத்ததை போல் சச்சினையும் ஓய்வு பெற செய்ய ஒரு கூட்டம் காத்து கொண்டிருக்கிறது .என்னை பொறுத்த வரை ஒரு நாள் போட்டிகளில் உலக கோப்பையை தற்போது வென்ற போதே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அது சிறப்பாக இருந்திருக்கும் .இப்போது அவரை ஓய்வு பெற சொல்லும் நிலை ஏற்பட்டிருக்காது .சச்சின் 100 வது சதத்துகாக காத்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்காது 
  • வழக்கமாக ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடும் லக்ஷ்மன் இப்போது அங்கும் கோட்டை விட்டது அவரையும் ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சு எழும்ப காரணமாகிருக்கிறது 
  • சச்சின் 100 வது சதம் அடிக்கட்டுமே! அடித்த அந்த போட்டியிலேயே ஓய்வு பெற வேண்டும் அது தான் அவருக்கு சிறப்பு என்பது என் எண்ணம் .



Saturday, January 28, 2012

சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா

  • மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,ஒட்டு மொத்த இந்திய அணியின் ஆட்டம்  ஆகியவற்றால் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தொடரை பறிகொடுத்திருக்கிறது இந்தியா
எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக சிறப்பாக விளையாடும் லட்சுமனும் சோடை போனார்.திராவிடும் பெரிய அளவில் சோபிக்கவில்லை
  • விராட் கொக்லியின் சதம் இளம் வீரர்களை டெஸ்ட்  அணியில் சேர்க்க வேண்டும் என்பதை காட்டுகிறது 
  • சச்சினின் 100 வது சதம் எப்போது என காத்திருந்து மோசம்  போனது இந்த தொடரிலும்!.அவர் சதத்தை விட இந்தியாவின் வெற்றி தேவைப்படுகிறது இப்போது !

பல  மாதங்களாய் பார்மில் இல்லாத ஆஸ்திரேலியாவின்  பாண்டிங்கை சிறப்பான பார்முக்கு (ஆட்டத்திறன்)  கொண்டு வந்ததே நமது பந்து வீச்சாளர்களின் சாதனை இந்த தொடரில் !
  • ஒரு டெஸ்டையாவது சமன் (drawn) செய்ய கூட முடியாத வகையில் சுருட்டி வீசி விட்டது ஆஸ்திரேலியா இந்தியாவை !
  • உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா என்பது உண்மையாகி விட்டது 
  • 2-0 என்ற கணக்கில் வீழ்ந்த  சமயத்தில் நான் எழுதிய பதிவு உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா

உங்கள்  பார்வைக்கு :


*தமிழின் சிறந்த கவிதை தளங்கள் -2

*பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக !

Saturday, January 7, 2012

உள்ளூரில் புலி வெளியூரில் எலியா இந்திய அணி?

  • தொடர்ந்து அந்நிய மண்ணில்  ஆறாவது டெஸ்ட் தோல்வியை கண்டு இருக்கிறது இந்திய அணி.இம்முறை இன்னிங்க்ஸ் மற்றும் 68 வித்தியாசத்தில் தோல்வி .இங்கிலாந்து மண்ணில் தொடர் தோல்விகளை கண்டு பின்னர் இந்திய மண்ணில் இங்கிலாந்தை  வென்றது.


சச்சினின் 100  வது  சதம் எப்போது ?

  • சச்சின் 100   வது சதம் அடிக்க நீண்ண்ண்ண்ண்ண்ட காலமாய் முயன்று வருகிறார் .அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்படுவது இந்த 100 வது சதத்தினால் தான்..


  • சிட்னி டெஸ்டில் இந்திய சுவர் ராகுல் டிராவிட் பெரிதாக விளையாட வில்லை .நல்ல தொடக்கம் அமைய வில்லை .சேவாக் தொடர்ந்து ஏமாற்றுகிறார்.பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் நமது வீரர்கள் சொதப்பினர் முதல் இன்னிங்சில் ...ஆஸ்திரேலியா அசத்துகிறது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ..

  • அஸ்வின்  விளையாடுவதை கூட கோக்லியும் டிராவிட்டும் தோனியும்  விளையாடுவது இல்லை .தமிழக வீரர் அஸ்வின் பேட்டிங்கில் அசத்தி வருகிறார் சமீப காலங்களில்.
அஸ்வினின் அரை சதம்

  • இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடும் இந்திய அணி அந்நியமண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறது .மீதமிருக்கும் 2 டெஸ்டிலும் வென்று தொடரை சமன் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல .உள்ளூரில் புலி வெளியூரில் எலி தானா  இந்தியா ?

Thursday, December 8, 2011

சேவாக் -சச்சின் 200 ஓர் ஒப்பீடு ..

ஒரு தின கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் மற்றும்
ஒரு தின கிரிக்கெட்டில் இரண்டாவது இரட்டை சதம் கண்ட வீரர் என்ற பெருமையை பெறுகிறார் இந்திய வீரர் சேவாக் .இருவருமே  இந்தியர்கள் என்பது  நமக்கு பெருமை .



சச்சின் மற்றும் சேவாக்கின் இரட்டை சதம் ஓர் ஒப்பீடு  கீழே !

*கடந்த 2010 ல் சச்சின் தென் ஆப்பிரிக்கா விற்கு எதிராக ஒரு தின கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்

தற்போது  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக  சேவாக் இரட்டை சதம் கண்டிருக்கிறார்


*ஒரு தின கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை பெற்று உள்ளார் சேவாக் (219)

சச்சினின்  200 ரன்கள் சாதனையை முறியடித்தார் சேவாக்

*சச்சின் ஆட்டமிழக்கவில்லை அந்த போட்டியில் ..

சேவாக் ஆட்டமிழந்து 219 ரன்கள் எடுத்தார்


*சச்சினின் 200 இல் 25 பௌண்டரிகளும் 3 சிக்சர்களும்  அடக்கம் .147 பந்துகளை  எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார்

சேவாக்கின் 219 இல் 25 பௌண்டரிகளும் 7 சிக்சர்களும்  அடக்கம்.149 பந்துகளை
எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார்

Sunday, September 18, 2011

உலகச் சாம்பியனா நாம் ?

டெஸ்ட் தொடரை இழப்பதற்கு முன்பு ஒருமுதல் இடம் இழந்த இந்தியா என்ற  பதிவு போட்டிருந்தேன் .டெஸ்ட் தொடரை 0-4  என்ற   கணக்கில்  இழந்த நாம் இப்போது ஒரு தின தொடரையும்  0-3 என்ற கணக்கில் இழந்திருக்கிறோம் .இது பற்றிய எனது உணர்வு ..



 காயம் அடைந்ததாய் 
சொல்லிக்கொண்டவர்கள் 
காயம் அடைந்தவர்கள் 
எல்லோரும்  பங்கேற்பர்
வர விருக்கும் 
CHAMPIONS LEAGUE தொடரில் ..
என்ன மாயமோ இது ?
எல்லாம் பணம் தானா ?

 0-4  என்ற  கணக்கில்  
டெஸ்ட் தொடரை இழந்தோம் 
௦-3 என்ற  கணக்கில்
ஒரு தின தொடரை இழந்திருக்கிறோம்
இப்போது..
இனி இழப்பதற்கு  ஏது  ?

உலக சாம்பியன் என்று 
மார்தட்டி அதிக நாட்கள் இல்லை ..
அதற்குள் ஒரு வெற்றி கூட 
இல்லாமல் தாயகம் 
திரும்பி இருக்கிறது இந்தியா 

அதிர்ஷ்டமும் இல்லை நமக்கு 
வெற்றியும் இல்லை 
இந்த ஒரு தின தொடரில் ..
மழை கூட  நமக்கு 
சாதகமாய் இல்லை.


டிராவிட்டும் ஒய்வு பெற்று 
விட்டார் இனி யாரை நம்பி 
வெளிநாட்டு சுற்று பயணங்கள்?
மேற்கிந்திய தீவுகள் தொடர் 
முடிந்தவுடன் நாம் வங்க தேசத்திற்கு 
சென்றிருக்க வேண்டும் 
என்று சொன்னாலும் சொல்வார் தோனி ..

 
டெஸ்ட் தொடரை விட 
ஒரு தின தொடரில் நமது 
பேட்டிங் சிறந்து இருப்பது 
மட்டுமே ஆறுதல் ..

டெஸ்ட் ,இருபது ஓவர் 
ஒருதின போட்டி என
முத்தாய்ப்பு தோல்விகள் 
உலகச் சாம்பியனுக்கு ...
நாம் சாம்பியனா என்ன ?..






Sunday, August 14, 2011

முதல் இடம் இழந்த இந்தியா

அந்தோ பரிதாபம் !
உலக சாம்பியன் என்று
மார்தட்டி நடந்தவர்கள்
தலைகுப்புற விழுந்ததை
பார்த்தீரா!

தோனியின் படை
புறமுதுகு இட்டு ஓடியது
ஏன் ?
மேற்கிந்திய தீவுகள்
அணியிடமே
திணறி வெற்றி பெற்ற போது
நாம் முதல் இடத்துக்கு
தகுதியா என்ற
கேள்வி எழாமல் இல்லை

இப்போது இங்கிலாந்து 3-0
என்ற கணக்கில் நம்மை
வீழ்த்தி வெற்றி
கூப்பாடு போடுகிறது ..
நம்மால் 300 ரன்களை
கூட ஒரு இன்னிங்க்சில் எடுக்க
முடியவில்லையே !

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில்
முதல் இடத்தை இழந்து
விட்டோம் அடுத்த
நான்காவது டெஸ்டிலும்
தோற்றால் மூன்றாம்
இடம் தான் !

அதிக போட்டிகள் தான்
வீரர்களை காயம் அடைய
செய்கிறது என்றால் IPL இல்
அதிக போட்டிகள் தானே
அங்கு எப்படி விளையாடுகீறீர் !

தேசத்திற்கு எதிரான
போட்டிகளில் ஓய்வு
எடுத்து விட்டு IPL இல்
விளையாடுவது முறை தானா!

தோனி மீண்டும் பழைய
நிலைக்கு வந்து இருப்பது மட்டுமே
அறுதல் இந்த டெஸ்டில் ..

ஆறுதல் வெற்றியாவது
பெறுவீரா பார்ப்போம்
நான்காவது டெஸ்டில் ...

Friday, February 18, 2011

கோப்பை நமதே !


பெட்டிக்கடை முதல்
நட்சத்திர ஹோட்டல்கள்
வரை எங்கும் எதிலும்
பேச பட இருக்கிறது
உலக கோப்பை கிரிக்கெட்
நாளை முதல் ..


14 அணிகள் மல்லுகட்டும்
போதிலும் கோப்பை வெல்ல
நமக்கு வாய்ப்பு அதிகமோ !
அனுபவ படை இளம் படை என
சரி விகித வீரர்களை கொண்டதால் ...


பயிற்சி ஆட்டங்களில்
சிங்கங்களை
துரத்தி வெற்றி கண்டோம்
பயமிருக்கிறது வங்கதேசத்திடம்
அலட்சியமாக விளையாடி
தோற்று விடுவோமா என்று ..

வெல்வோம் சச்சினுக்கு
கோப்பையை பரிசாய்
கொடுப்போம் கனா காண்போம்
நனவாக்குவது வீரர்கள் கையில் ..
கோப்பை நமதே !