- தொடர்ந்து அந்நிய மண்ணில் ஆறாவது டெஸ்ட் தோல்வியை கண்டு இருக்கிறது இந்திய அணி.இம்முறை இன்னிங்க்ஸ் மற்றும் 68 வித்தியாசத்தில் தோல்வி .இங்கிலாந்து மண்ணில் தொடர் தோல்விகளை கண்டு பின்னர் இந்திய மண்ணில் இங்கிலாந்தை வென்றது.
சச்சினின் 100 வது சதம் எப்போது ? |
- சச்சின் 100 வது சதம் அடிக்க நீண்ண்ண்ண்ண்ண்ட காலமாய் முயன்று வருகிறார் .அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்படுவது இந்த 100 வது சதத்தினால் தான்..
- சிட்னி டெஸ்டில் இந்திய சுவர் ராகுல் டிராவிட் பெரிதாக விளையாட வில்லை .நல்ல தொடக்கம் அமைய வில்லை .சேவாக் தொடர்ந்து ஏமாற்றுகிறார்.பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் நமது வீரர்கள் சொதப்பினர் முதல் இன்னிங்சில் ...ஆஸ்திரேலியா அசத்துகிறது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ..
- அஸ்வின் விளையாடுவதை கூட கோக்லியும் டிராவிட்டும் தோனியும் விளையாடுவது இல்லை .தமிழக வீரர் அஸ்வின் பேட்டிங்கில் அசத்தி வருகிறார் சமீப காலங்களில்.
அஸ்வினின் அரை சதம் |
- இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடும் இந்திய அணி அந்நியமண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறது .மீதமிருக்கும் 2 டெஸ்டிலும் வென்று தொடரை சமன் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல .உள்ளூரில் புலி வெளியூரில் எலி தானா இந்தியா ?