Wednesday, January 18, 2012

சீறுகின்றாள் செந்தமிழ்த் தாய் !


 தமிழ் பேச
கூச்சப்படும் தமிழா !
நான் செந்தமிழ் தாய்
பேசுகிறேன்

ஆங்கிலம் இணைப்பு மொழி
தானே !ஏன் உயிர்ப்பாக
நினைக்கிறாய் ?


ஆங்கிலத்தை அரவணை
தவறில்லை! தமிழை  ஏன்
துறவறம் கொள்ள செய்கிறாய் ?

என்னை கொன்று போடும்
தமிங்கலத்தில் பேசும் நீ
செந்தமிழ் பேச
நா தழுதழுப்பது ஏன் ?

உன் தாயும் நானும்
ஒன்றல்லவா -உன் தாய் மொழி அல்லவா
நான் !

நாளைய உலகில்
தமிழ் இருக்கட்டும்
இறக்கச் செய்திடாதே !
(* ஈகரை வலைத்தளம் சமீபத்தில் நடத்திய கவிதைபோட்டிக்காக நான் எழுதிய கவிதை இது ..)


உங்கள் பார்வைக்கு :