Wednesday, February 29, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-சில அதிரி புதிரி கேள்விகள்

  • ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த திங்கள்(FEB 27,2012) அன்று ஆரம்பித்தே விட்டது விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி"நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக "கையில் ஒரு கோடி" நிகழ்ச்சியை சன் டிவி நடத்தவுள்ளது 
  • சூர்யா நடத்துவது இந்நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றி விட்டது.ஆனால் கேள்விகள் நிச்சயம் பங்கு பெறுபவர்களை லட்சாதிபதி ஆவது ஆக்கி விடும் அதற்கு விஜய் டிவி க்கு வாழ்த்துக்கள் .(!)
  • நேற்றைய நிகழ்ச்சியை தீபிகா என்ற பங்கேற்பாளர் சிறப்பாக கொண்டு சென்றார் பறக்கும் முத்தங்களும் பாடலும் சிரிப்புமாய் கொண்டு சென்றார் 
  • நிகழ்ச்சியை பார்க்கும் போது அவ்வப் போது விவேக்கின் கோடீஸ்வரன் கலாய்ப்பு நிகழ்ச்சி  ஞாபகம் வந்தது எனக்கு !

அப்படிப்பட்ட அதிரி புதிரி கேள்விகள் கடந்த இரு தினங்களில்  உங்கள் பார்வைக்கு கீழே!

  • 2012 இல் வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பை பூர்த்தி செய்க.-----------சொதப்புவது எப்படி ?
A)நட்பில்  B)வாழ்க்கையில் C)காதலில் D)உறவில்

(இதற்கு விடை தெரிய   பங்கேற்ற அன்பர் AUDIENCE-LIFELINE தேர்ந்தெடுத்தார்)

  • திருமணமானவர்கள் கொண்டாடும் முதல் தீபாவளியை எப்படி அழைப்பார்கள்?

A)கை தீபாவளி B)கால் தீபாவளி C)தலை தீபாவளி D) மூக்கு தீபாவளி

  • நீங்கள் செய்வதை அப்படியே இன்னொருவர் செய்தால் அதை எப்படி அழைப்பார்கள்?

A)கொசு அடிச்சான் காப்பி B)ஈ அடிச்சான் காப்பி C)நாய்  அடிச்சான் காப்பி D)பேய் அடிச்சான் காப்பி

  • (கோ படத்தின் "என்னமோ ஏதோ" பாடல் ஒலிக்கிறது.)கேள்வி இது தான்.நீங்கள் கேட்ட இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?
A)போக்கிரி B)மஜா C)கோ D)எந்திரன்

  • டிசெம்பர்  2011 இல் தமிழகத்தை மிகவும் பாதித்த புயல் எது ?
A)பிஜ்லி B)தானே C)அக்னி

(இந்த  கேள்விக்கு அன்பர் PHONE A FRIEND -LIFELINE தேர்ந்தெடுத்தது மிகவும் கொடுமை தானே!)


இந்த  கேள்விகள் எல்லாம் பார்க்கையில் லட்சாதிபதி ஆவது ஆகி விடுவோம் தானே நாம் பங்கேற்றால் !


உங்கள் பார்வைக்கு:


Monday, February 27, 2012

காதலில் சொதப்புவது எப்படி?-விமர்சனம்

"காதலில் சொதப்புவது எப்படி"-படத்தை பற்றிய எனது எண்ணங்கள் இங்கே !



 " நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை 
திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு   வாழ்த்துக்கள் பாலாஜி. அந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு !



கதையின் கரு 

  • ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள்  என்பதே கதை.
  • சித்தார்த்தும் அமலாபாலும் போட்டி போட்டு கொண்டு நடித்திருக்கின்றனர்

நெகடிவ் க்ளைமாக்ஸ் இல்லை.சுவிட்சர்லாந்து டூயட் இல்லை.தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை உடைத்து எரிந்திருக்கிறது  இப்படம்.


"இத சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா!"என அமலாபால் சித்தார்த்திடம் சொல்லும் அழகே தனி!

" ஏங்க லவ் பண்றது இவ்வளவு கஷ்டமா இருக்கு"என நம்மை பார்த்து சித்தார்த் கேட்பதும் நியாயம் தான்

"பாசத்தையும்  சரி வெறுப்பையும் சரி பொண்ணுங்க காட்டுற அளவுக்கு  பசங்களால என்னைக்குமே காட்ட முடியாது "போன்ற ஜீவனுள்ள  வரிகள் படத்தோடு இணைய வைக்கின்றது நம்மை !


கிளைக்  கதைகள்

  • அமலா பாலின் தாய் தந்தை காதல் ஓர் அழகு கவிதை.விவாகரத்து பெற விருக்கும் அமலா பாலின் தந்தை தனது மனைவிக்கு  மகளிடமே லவ் லெட்டர் கொடுத்து அனுப்புவதும்  அந்த வளையோசை பாடலும் அழகு
  • அண்ணா என அழைத்தவளையே விடாமல் காதலிக்கும் நண்பன்,சித்தார்த்துக்கும் அமலா பாலுக்கும் சமரசம் செய்ய முயன்று அடிவாங்கும் அந்த குண்டு நண்பன் என வரும் கிளை கதைகள் அனைத்தும் அருமை 
 இயக்குனருக்கும் நடிக்க ஆசை போல படத்தில் சில காட்சிகளில் தலை காட்டுகிறார் பாலாஜி

அழைப்பாயா அழைப்பாயா பாடலும் சித்தார்த் பாடிய பார்வதி பார்வதி பாடலும் ஈர்க்கிறது

ஆண்கள் தான் ஈகோவை விட்டு கொடுக்கணும் என்ற உண்மை தான் படத்தின் முடிவு

உங்கள் பார்வைக்கு :

Tuesday, February 21, 2012

கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

கடவுள் ,வேண்டுதல்

 லட்ச கணக்காணோர் எழுதிய
வங்கி தேர்வில் என்னை
தேர்வு செய்ய வேண்டினேன்
அவ்வாறே செய்தார் கடவுள்
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான்!



அலுவலகத்தில்
எனக்கெதிராய் செயல்படுபவர்களை
எனக்கு ஆதரவாய்
செயல்பட வேண்டுகிறேன்
அவ்வாறே செய்கிறார் கடவுள்
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !


அதிகாலையில் எழுந்திரிக்க
அலாரம் வைப்பதில்லை நான்
அவரிடம் சொல்கிறேன்
எழுப்புகிறார் குறிப்பிட்ட நேரம் முன்பே !
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

இழுபறியில் இருக்கும் என
நினைத்த தேர்வு முடிவுகளில்
என்னை தேர்வு பெற செய்யுங்கள்
என வேண்டுகிறேன் அதையும்
செய்கிறார் எனது உழைப்பு கண்டு !
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

இன்னும் எத்தனயோ
செய்தார் செய்கிறார் செய்வார்
ஆனால் நான் என்ன செய்தேன்
அவருக்கு !ஒன்றுமில்லை
கடவுளுக்கு  வேலை வைக்கிறேன் நான் !


(இக்கவிதை கர்த்தருக்கு நான் செலுத்தும் சாட்சி கவிதை .எனது வாழ்க்கை சம்பவங்கள்.சிறப்பான கருத்துக்கள் அளிக்க வேண்டுகிறேன் )


உங்கள் பார்வைக்கு :