Saturday, May 12, 2012

தாதா இனி IPL கோதாவில் இல்லை !

கொல்கத்தா தாதா என அழைக்கப்படும் சௌரவ் கங்குலி நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்க படவில்லை ,இனி வரும் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு IPL போட்டியிலும்  புனே அணிக்கு கங்குலி இல்லை என புனே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

நேற்றை போட்டி வரை அந்த அணி 8  வது இடத்தில்  உள்ளது .இதனால் கடுப்படைந்த புனே அணி நிர்வாகம் அவருக்கு கட்டாய ஒய்வு கொடுத்துள்ளது

கங்குலி ,புனே

கங்குலி இந்த IPL இல் விளையாடிய விதம் கீழே

  • 13 போட்டிகளில் விளையாடி உள்ள கங்குலி 261 ரன்கள் எடுத்துள்ளார் .அதிக பட்சம் 45. 
  • ஒரு அரை சதமும் காணவில்லை
  • 13 போட்டிகளில் விளையாடி 8 ஓவர்கள் மட்டுமே பந்து  வீசி உள்ளார் .2 விக்கெட்  மட்டுமே எடுத்துள்ளார்
  • தொடக்க போட்டிகளில் சிறப்பாக வழிநடத்திய கங்குலி தொடர்ந்து போட்டிகளில் தோல்வி கண்டதால் ஆட்டம் கண்டுள்ளார் 

தோனியை இழுத்த கங்குலி

  • தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு ஏற்க முடியாது.அணியில் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வில்லை .
  • கடந்த உலக கோப்பையில் டோனி கடைசி வரை பார்மில் இல்லை .இருப்பினும் மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தான்  கோப்பை வெல்ல முடிந்தது என்றார் .
  • IPL 5 முடியும் வரை நான் தான் அணி தலைவனாக தொடர்வேன் என நகைச்சுவை செய்துள்ளார்  அவரை நீக்கிய பிறகு ,,
எது எப்படியோ கண்களை பிதுக்கி கொண்டு மைதானத்தில் அவர் ஆடும் அழகை  இனி ரசிக்க முடியாது IPL இல் .தாதா இனி IPL கோதாவில் இல்லை ..


உங்கள்  பார்வைக்கு :