Social Icons

Pages

Wednesday, July 11, 2012

நான் ஈ (NAAN EE) -எந்திரனை மிஞ்சியது எப்படி ?

மெல்லிய உணர்வுபூர்வமான காதல் வழிந்தோடும் படங்கள் நிச்சய வெற்றி பெறுவது உண்டு .

SHORT TERM MEMORY LOSS என்ற கருவை கொண்டிருந்தாலும் சூர்யா -அசின் இடையேயான காதல் காட்சிகளுக்காகவே கஜினியை பார்ப்பதுண்டு இன்னும் .

NAAN EE,NAAN E,SAMANTHA
அதே போல சில காட்சிகள் என்றாலும் நாணி (நாயகன் ) சமந்தா காதல் காட்சிகள் அவ்வளவு அழகு
வில்லன் சுதீப்புடன் பேசிக்  கொண்டே நானிக்கு நோட்டமிடும் போது மிளிர்கிறார் சமந்தா
"வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்"

"நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை  சீவிடும்  பெண் சிலையே !"
என்ற கார்க்கியின் வரிகள் போதாதா அவர்கள் காதலை சொல்ல !

நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து  வில்லனை பழிவாங்குவது தான்  கதை


எந்திரனை மிஞ்சும் கிராபிக்ஸ்

 • ஈயாக பிறப்பெடுப்பது, மத்த ஈக்களை கண்டு பறக்க நினைப்பது என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது
 • ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா  கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால்  மனித இனம் படும் சின்ன  சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
 • சமந்தா விடும் கண்ணீரில் ஈ நான் தான் ஈயாக மறு பிறப்பு எடுத்து இருக்கிறேன் நாணி என எழுதுவது கலக்கல்
 • ரஜினியின் எந்திரனை  மிஞ்சும் அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன .சில காட்சிகள் கிராபிக்ஸ் தானா  என யோசிக்க வைக்கிறது
ஈயின் நாயகன் சுதீப் 

SUDEEP,SUDHEEP

 • இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
 • ஈக்கு பயந்து ஹெல்மெட் மாட்டி கொண்டு மீட்டிங்கிற்கு வருவது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக ஈயை விரட்டுவது (ஓட்டுவது )என மனிதர் கலக்குகிறார்
சில காட்சிகளில் வந்தாலும் சந்தானம் கதையோடு ஒன்றுகிறார் .
இறுதியில் ஈ இறந்து மீண்டும் ஈயாக I AM BACK  என வருவது கலக்கல் .

குழந்தைகள் மட்டும் அல்லது அனைவரும் பார்க்க வேண்டிய  அருமையான படம் இந்த நான் ஈ 

 உங்கள் பார்வைக்கு :
13 comments:

 1. ///SHORT TERM MEMORY LOSS என்ற கருவை கொண்டிருந்தாலும் சூர்யா -அசின் இடையேயான காதல் காட்சிகளுக்காகவே கஜினியை பார்ப்பதுண்டு இன்னும்///

  நான் தியேட்டர்ல மட்டும் 11 டைம் பார்த்திருக்கேன் இந்த படத்தை.. அப்பிடி என்ன இந்த படத்தில இருக்குன்னு கேக்காதீங்க சொல்ல தெரியல..ஒன்லி பீலிங்க்ஸ் ஆப் இந்தியா ஹி ஹி (TM 3)

  ReplyDelete
 2. அருமையாக கூறியுள்ளீர்கள் சொந்தமே!
  சில நாட்களாய் முகநூலில் இப'படத்தின் பெயர் அடிபட்டது.இன்று அறியக்கிடைத்தமை சந்தோஷம்.!!
  வாழ்த்துக்கள் சொந்தமே..!
  முதல்முதலாய் முடிவாய்!!!! ..!!!!

  ReplyDelete
 3. Varalaaru friend has short term memory loss I guess...He forgot seeing the movie previously ..hahaha...

  ReplyDelete
 4. ரெவெரி said...
  Varalaaru friend has short term memory loss I guess...He forgot seeing the movie previously ..hahaha...
  ///

  என்னமோ சொல்ல நினைச்சேன்..அதுக்குள்ளே மறந்துட்டனே... உண்மையிலேயே short term memory loss நமக்கு இருக்குதான் போலிருக்கு ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 5. திண்டுக்கல் தனபாலன்//வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. @வரலாற்று சுவடுகள் //அப்படிப்பட்ட ரசனையான காதல் காட்சிகள் அதான்

  ReplyDelete
 7. @Athisaya//வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. @ ரெவெரி//வருகைக்கு நன்றி வரலாறே பதில் அளித்து விட்டார் பாருங்கள்

  ReplyDelete
 9. @ வரலாற்று சுவடுகள் //காதல் படுத்தும் பாடு அவ்வளவு தான் அன்பரே

  ReplyDelete
 10. < PREM.S said...
  @ வரலாற்று சுவடுகள் //காதல் படுத்தும் பாடு அவ்வளவு தான் அன்பரே >

  உண்மை நண்பரே!

  ReplyDelete
 11. ஆம் நானும் கண்டேன் ... மிகவும் தரமான ஒரு என்டர்டைனர் படம் ..
  சுதிப்பின் நடிப்பும் , சமந்தாவின் அழகுக்கும் மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் ...

  உங்களின் படம் பற்றிய பார்வையும் தரமாக இருக்குங்க அன்பரே ..

  ReplyDelete
 12. பல தடங்கல்களுக்குப் பிறகு 3 நாட்கள் முன்பு தான் படத்தைப் பார்த்தேன்..

  உண்மையிலேயே அருமை!!

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Sample text

Sample Text

test banner

Sample Text

 
Blogger Templates