Monday, July 9, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி(NVOK) -முடிவை எட்டியது ஏன் ?

NVOK,NEENGALUM VELLALAAM ORU KODI
  • ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி  27,2012 அன்று ஆரம்பித்த விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி"நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைகிறது . 
  • சுமார் 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்க பட்ட இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான கேள்விகளால் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது 
  • டி.ஆர் .பி ரேட்டிங் சரிய தொடங்கியதும் நடிகர்கள் ,விஜய் டிவி நட்சத்திரங்கள் என நிகழ்ச்சியை வேறு பாதைக்கு கொண்டு சென்றனர் 
  • அதிக  பட்சம் 12,50,000 பரிசுத்தொகை பெற பட்டு இருக்கிறது
  • குறைந்த பட்சம் 0 பெற்றார் +2 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவர் 
NVOK
  • நட்சத்திரங்கள்  பங்கு பெற்ற தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றி பெற தொகையை வழங்கும் நிகழ்ச்சிகளில் அதிக பட்சம் 6,40,000 பெற்றவுடன் நிகழ்ச்சிக்கான நேரம் முடிந்தது என சூர்யா சொல்லியதை காண முடிந்தது (ஏனோ?)
  • இந்த வார இறுதியோடு முடியும் இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் ,ராதா,குஷ்பூ ,சுகாசினி ஆகியோர் பங்கேற்கின்றனர் 
  • இரட்டையர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் போடப் பட்டது .தற்போது விண்ணப்பித்தவர்கள் பங்கேற்காமல் நிகழ்ச்சியை முடிப்பது ஏன் என்று தெரிய வில்லை.
  • விஜய் டிவி பாணியில் சன் டிவியும் தனது சீரியல் நாயகிகளை வைத்து சன் குடும்பம் நட்சத்திரங்கள் என கையில் ஒரு கோடி நிகழ்ச்சியை ஓட்டி கொண்டிருப்பது தனிக்கதை .அந்த நிகழ்ச்சிக்கும் முடிவுரை விரைவில் வர வாய்ப்பு உண்டு 

உங்கள் பார்வைக்கு :