Friday, July 20, 2012

பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ?

பில்லா -2,AJITH
 தமிழ்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்க வேண்டும் என்று கூக்குரல் கொடுப்பவர்கள் மற்றும்  அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்க கூடிய படம் தான் இந்த பில்லா -2 .

சாதாரண அகதி எப்படி பல பேரை கொல்லும் பில்லாவாக மாறுகிறான் என்பது தான் கதை

 பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ?
  • 3குத்து பாட்டு 2டூயட் என்ற தமிழ் படங்களின் பார்முலா நம்பி படம் பார்க்க வருவதாக இருந்தால் இது உங்களுக்கான படம் இல்லை
  • காதல் ரசம் கொட்டும் காட்சிகள் இல்லை.டூயட் கூட இல்லை.
  • ஒரே ஒரு வில்லனை தொடக்கத்தில் இருந்து அழிக்க முயன்று கடைசியில் அழிக்கும் தமிழ்படம் இல்லை இது.ஏகப்பட்ட வில்லன்கள் ஒவ்வொருவரையும் சில காட்சிகளுக்குள் போட்டு தள்ளி  போய்(நடந்து) கொண்டே இருக்கிறார்
பில்லா 2,அஜித்
  • நகைச்சுவை காட்சிகள் அங்கங்கே இணைக்க பட்டு இருக்கும் என நினைத்தால் அது இங்கு இல்லை.நகைச்சுவைக்கே இடம் இல்லை 
  • நாயகன் வில்லத்தனம் செய்தால்   இறுதியில் இறப்பான் என்பதை மங்காத்தா விற்கு பிறகு இதிலும் உடைத்து எரிந்து விட்டார்கள் .பலபேரை கொன்று விட்டு இனிமேல் தான் ஆரம்பம்  என அஜீத்  கடைசியில் சொல்வது போதாதா ?(இது பில்லா1ன் முன்பகுதி என்பதால் இறக்காமல் இருக்கலாம் )
  •  இறுதி காட்சியில் வந்து யு ஆர் அண்டர் அரெஸ்ட் என்று சொல்லும் போலீஸ் இங்கு இல்லை 
  • ஆடியோவில்  இருந்த "இதயம் இதயம்" மெலடி பாடல் படத்தில் இல்லை ஏனோ!      
  • பில்லா பாடல்கள் பற்றிய எனது பிரத்யேக பதிவு கீழே 

    • படம் தொடங்கியது முதல் இறுதிவரை யாரையாவது கொன்று கொண்டே இருக்கிறார் அஜீத்  அத்தனை ரத்தம் வன்முறை
    இன்னும்  பல இல்லக்கள் இப்படத்தில் .மொத்தத்தில் இது வழக்கமான தமிழ்படம் இல்லை .ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்ட தமிழ்படம் இது
    எனக்கு ரஜினியின் பில்லா மட்டுமே பிடித்தது  உங்களுக்கு!

    உங்கள் பார்வைக்கு :

     
    யார் போலடா நீ