காலை நிகழ்ச்சிகள்
FM போல வடிவமைக்க பட்டு FM இல் பேசுவது போலவே புதிதாக காலை நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன .ரேடியோவில் பேசுவது போல RJ க்கள் பேசுகின்றனர் .பூபாளம் ,இனியவை இன்று போன்றவை குறிப்பிடத்தக்கவை .
இனியவை இன்று ..
இனியவை இன்று கண்டிப்பாக பார்க்க மறக்காதீர்கள் .அதிலும் கொஞ்சி கொஞ்சி பேசும் ஆனந்தியை பார்க்க தவறாதீர்கள் .தினமும் அன்றைய நாள் பற்றியும் அதற்க்கு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேட்டி எடுக்கிறார்கள் .அது மட்டுமல்லாமல் கார்ட்டூன் மூலம் அலசும் ஒரு பகுதியும் உண்டு ..தமிழில் புதிதாக தெரிந்து கொள்ளவும் ஒரு பகுதி உண்டு ...இறுதியாக தினமும் ஒரு WEBSITE அறிமுகபடுத்துகிறார்கள்
பேப்பர் தோசை
செய்திகளை பேச்சு வழக்கில் அளிக்கும் புதிய செய்தி தொகுப்பு தோசை சுடுவது போல செய்திகளை சுட்டு தருகிறார்களாம் .புதுமையாக இருந்தாலும் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது .ஆனாலும் வித்தியாசம் இருக்கிறது
இதற்கென்றே ஒரு பாட்டும் உண்டு
சீரியல்கள்
சிம்ரன் நடிக்கும் அக்னி பறவை ,இயக்குனர் சமுத்திரக்கனி யின் காயிதம் ,கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா,சோனியா அகர்வாலின் மல்லி போன்ற பல நெ(கொ)டுந்தொடர்கள் இங்கும் உண்டு ...
இரவு நிகழ்சிகள்
கேலி பாதி கிண்டல் பாதி ,அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா போன்ற நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை
ஞாயிறு நிகழ்ச்சிகள்
ஞாயிறுதோறும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது புது யுகம் .அதில் கானமும் காட்சியும் ,திரைக்கு அப்பால் ,மேளம் கொட்டு தாலி கட்டு ,ரிஷிமூலம் போன்றவை குறிப்பிடத்தக்கவை
கானமும் காட்சியும்
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த சரவணன் "செந்தில் " தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி .புது படங்களின் பாடலகள் பற்றி அதை எழுதியவர்கள் பற்றி அலசும் நிகழ்ச்சி .சிறப்பாகவே இருக்கிறது
மேளம் கொட்டு தாலி கட்டு
நடிகை சினேகா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி .திருமணம் ஆக இருப்பவர்களுக்கு எல்லா செலவுகளையும் அளிக்க திருமணம் நடத்தி வைக்க உதவும் ஒரு gameshow.சினேகா சிறப்பாக தொகுத்து வழங்குகிறார்
ரிஷிமூலம்
நடிகை அபிராமி தொகுத்து வழங்கும் நீயா நானா டைப் விவாத நிகழ்ச்சி.அபிராமியின் தெளிவான தமிழ் உச்சரிப்புக்காகவே இதை பார்க்கலாம் .அபிராமி தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்த வில்லை என தோன்றுகிறது ..
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
புதிய தலைமுறை தொலைகாட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியை அப்படியே இங்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் .ஒவ்வொரு உணவும் அதன் பூர்விகம் செய்யும் முறை அனைத்தையும் தெளிவாக கூறும் நிகழ்ச்சி .கண்டிப்பாக பார்க்கலாம்
நட்சத்திர ஜன்னல்
நட்சத்திரங்களை பேட்டி காணும் நிகழ்ச்சி நடிகை சங்கீதா தொகுத்து வழங்கும் koffee with dd டைப் நிகழ்ச்சி.திவ்ய தர்ஷினி போல சங்கீதாவால் தொகுக்க முடிய வில்லை அவருக்கு வருவதை பண்ணுகிறார் .இதற்காக சங்கீதா சன்னின் சூப்பர்குடும்பம் நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார்
SUNDIRECT இல் புது யுகம் ..
நம்ம டவுன் நம்ம டிவி என்ற caption ஏதோ சொல்ல முற்பட்டது.முதலில் SUNDIRECT இல் இந்த CHANNEL ஒளிபரப்பபட்டது ஒரு ஆச்சர்யம் தான் .கூடிய விரைவில் நீக்க படும் அபாயம் இருக்கிறது .இதோடு நீக்கப்பட்ட புதிய தலைமுறையும் SUNDIRECT இல் இப்போது வருகிறது .தனது வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்ற பயமோ என்னவோ !
மொத்தத்தில் புதுயுகம் கொஞ்சம் புதுசு தான் ...