கடந்த வாரம் அந்த சீரியல் இறுதி நாள் என்று செம பில்டப் குடுத்து கொஞ்ச மாதம் பாக்காத சீரியலை பார்க்க வைத்து விட்டனர் .முடிந்ததா சீரியல் என்றால் தொடரும் என்று போட்டு இன்னும் கொஞ்சம் இழுக்க ஆரம்பித்து விட்டனர்
என்ன நடந்தது ?
பல மாத( ?) சண்டைக்கு பிறகு ஒரு வழியாக சரவணன் மீனாட்சி இருவரும் அவரது ரசிக பெருமக்கள் சேர்ப்பது போல் ஒரு மகா மொக்கையை அமைத்து இருந்தார்கள் .அப்பாடா ஒரு வழியாக முடிந்தது என்று நினைத்தால் மீனாட்சியின் அண்ணன் தமிழ் வில்லனாகி மீண்டும் கதையை தொடர வழி (லி ) வகுக்கிறார்
அது போதாது என்று மீனாட்சி பார்ட் 2 வில் கனடாவில் நடக்கும் கூத்துக்களை பாருங்க என மறைமுகமாக (நேர்முகமாக தான் ) என்று நினைத்து கொண்டு சொல்கிறார்
எப்பொழுது முடியும் :
இப்பொழுது இருக்கும் நிலைமையை பார்த்தால் சீரியல் இப்போதைக்கு முடிவது போல் தெரிய வில்லை .இது 6 மதனகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய சீரியல் .அதன் caption காதல் டு கல்யாணம் வரை .கல்யாணம் முடிந்ததும் அந்த caption யை கல்யாணம் முதல் காதல் வரை என அப்படியே உல்டாவாக்கினர் பின்னர் எடுத்து விட்டனர் .எப்ப முடியுங்க நாங்க வேற வேலை பார்க்கிறோம்னு சொல்ல வைத்த சரவணன் மீனாட்சி குழுவிற்கு நன்றி
சரவணன் மீனாட்சி பற்றிய எனது முந்தைய பதிவுகள் :