முற்றுபுள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொக்கி நிற்கும்
அசைகின்ற சொத்துகள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்.
கால் முளைத்த பூவே :
மகாலக்ஷ்மி ஐயர் ,ஜாவேத் அலி,நின்சி வின்சென்ட் ஆகியோர் பாடியுள்ளனர்
ரசித்த வரிகள்
நிலவு எரிகையில் விரல்கள் திரும்புதோ
நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ
ஏனேனோ எனை ஏனோ உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
பாடல் கேக்க
ரெட்டைக்கதிரே:
கிரிஷ் மிலி ,பாலாஜி பாடியுள்ளனர்.ஒட்டி பிறந்த இரு சூர்யாக்களை பற்றிய பாடல் என நினைக்கிறேன்
ரசித்த வரிகள்
இவன் ஒரு பக்கம் அவன் மறு பக்கம் இது எதுவோ
பூவும் தலயும் சேர்ந்த பக்கம் பொதுவோ
பாடல் கேக்க
நாணி கோனி:
விஜய் பிரகாஷ் ,கார்த்திக் ,ஸ்ரேயா கோஷல் மற்றும் ஜசீல் பாடியுள்ளனர் .
ரசித்த வரிகள்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
நீராய் நீராய்
நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய்
என் தாகம் தாண்டி நூறாய் ..
பாடல் கேக்க
யாரோ யாரோ
கார்த்திக், பிரியா ஹிமேஷ் பாடியுள்ளனர்
இது மெல்லிய சோக பாடல்.ஏழாம் அறிவு பட பாடல் யம்மா யம்மா காதல் பொன்னமா போல அவ்வபோது தோன்றுகிறது
கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும் ?
நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்
பாடல் கேக்க