குமதத்தில் எப்போது
குங்குமத்தில் எப்போது
விகடனில் எப்போது?
என காத்திருந்து காத்திருந்து
சோடை போன நாட்கள் உண்டு
நம் படைப்புகளை அனுப்பி விட்டு ..
இப்போது நம் தளமே
அப்பத்திரிகைகளில்..
GOOGLE புண்ணியத்தால்
இலவச வலைத்தளம்
ஆரம்பித்தோம் ..
பதிவர்கள் ஆனோம்
தணிக்கை இல்லை
நமக்கு தோன்றியதை
கண்டதை கேட்டதை நம் உணர்வுகளை
வெளிக்காட்ட ஒரு தளம்
முகமறியா நட்பு வட்டங்கள்
உயிர்ப்பான உறவுகளாய்
மாறும் அதிசயம் இங்கே !
எங்கள் தளங்களால் எங்களுக்கு
வருமானம் இல்லை
ஆ ங்கில வலை பூக்களை போல்..
ஆனால் நட்பு உண்டு
நிம்மதி உண்டு ஏனென்றால்
நாங்கள் பதிவர்கள்
தமிழ் பதிவர்கள்
( 26/08/2012 நடைபெற்ற தமிழ் பதிவர்கள் சந்திப்பை ஒட்டி எழுதிய கவிதை இது )