தனுஷின் 3 படம் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பிறகு விமர்சனமா என என்ன வேண்டாம் .இது வேறு!
இத்தளம் ஆரம்பித்து நேற்றோடு இரண்டு வருடங்கள் முடிந்தது இன்று மூன்றாவது வருட தொடக்கம்.இந்த நேரத்தில் என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
- எனது தளத்தின் மூல தனம் கவிதைகள் தான் என்றாலும் தற்போது நான் ரசித்த திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் எனக்கு தெரிந்த பிளாக்கர் டிப்ஸ் ஆகியவற்றை பதிந்து வருகிறேன்
- கடந்த 2 வருடங்களில் நான் எழுதிய கவிதை பதிவுகளை எல்லாம் சர்வ சாதாரணமாக திரைப்படம் தொலைக்காட்சி சம்பந்தமான பதிவுகள் ஒரு மணி நேரத்தில் முறியடித்து விடுகின்றன .அதற்கு காரணமான தமிழ்மணத்தின் திரைமணம் திரட்டிக்கு எனது நன்றிகள் .TAMIL10 மற்றும் ஏனைய அனைத்து திரட்டிகளுக்கும் நன்றிகள்
- 100000+ பக்க பார்வைகளை கடக்க 2 வருடங்கள் பிடித்திருக்கிறது .முதல் வருடத்தை விட இரண்டாம் வருடம் அதிக பார்வைகள் பெற்று இருக்கிறது இத்தளம்
- திரைமணம் தளத்தின் SIDEBAR இல் சின்னத்திரை பகுதியில் எனது தொலைக்காட்சி சம்பந்தமான பதிவுகள் அதிகம் இருப்பதை காணலாம்.
- 12/08/2012 நிலவரப்படி உலக அளவில் தளத்தின் தரத்தை நிர்ணயிக்கும் ALEXA வில் 3,27,115 வது இடத் தில் இருப்பதும் தமிழ் தளங்களுக்கான தமிழ்மணத்தில் 81 வது இடத்தில் இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அழிக்க கூடியவை
- ஒரே ஒரு மனக்குறை என்னிடத்தில் உண்டு .எனது தளத்தில் அதிகம் பார்வையிட பட்ட பத்து பதிவுகளில் ஒரு கவிதை பதிவு கூட வர வில்லையே என்ற குறை இருக்கிறது .அதை போக்க முயற்சி செய்வேன் .நன்றி அன்பர்களே
அதிகம் பார்வையிட பட்ட முதல் 10 பதிவுகள்( தளம் ஆரம்பித்த நாள் முதல் ..)