பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் அச்சு அசல் ரீமேக் .ஹிந்தி ஆசிரியர்க்கு பதில் பாட்டு வைத்தியர் .கராத்தே மாஸ்டருக்கு பதில் டான்ஸ் மாஸ்டர் ,நாயகின் அம்மாவுக்கு வீட்டு வேலை செய்யும் கதாபாத்திரம் அப்படியே சேது வாக பாக்கியராஜ் வேடத்தில் ..
மூன்று வாலிபர்கள் ஒரு பொண்ணை காதலிக்கும் அதே கதை சற்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் ..
- என்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என பவர் அடிக்கும் லூட்டி கலக்கல்
- பவர் காட்டும் ஒவ்வொரு முகபாவனைக்கும் நமக்கு சிரிப்பு வருகிறது.
- சந்தானம் பவாரை கலாய்த்து அடிக்கும் வசனங்களுக்கு பவரை பார்க்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது (சந்தானத்தையும் தான் )
- நாயகி விசாகா தமிழ் சினிமா கதாநாயகிகள் பண்ணுவதை விட அதிகமாகவே பண்ணி இருக்கிறார் அழகாவும் இருக்கிறார்
- இந்த படத்தின் உண்மையான நாயகன் பவர்ஸ்டார் என்று தான் நினைக்கிறேன் .
- பவரை கலாய்த்து ஒரு பாட்டு சந்தானத்துக்கே பாதகமாய் அமைந்து விட்டது என நினைக்கிறேன்
- சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார்
- சந்தானத்துக்கு மட்டும் தனி பாட்டு காதலை சொல்வதற்கு !.
உதாரணத்துக்கு பவர் ஸ்டாரை பார்த்து சந்தானம் பேசும் சில வசனங்கள்
- நான்லாம் காமெடியன்னு தெரிஞ்சு இருக்கேன் நீ காமெடியன்னு தெரியாமா காமெடி பன்ற
- நானும் எத்தன நாலா தான் அடுத்தவன் காதல ஊட்டி வளக்குறது நானும் டூயட் பாடனும்
மொத்தத்தில் இன்று போய் நாளை வா படம் பார்க்கதாவர்களுக்கு இந்த படம் கலக்கலோ கலக்கல் .பார்த்தவர்களுக்கோ கலக்கல் .சிரித்து சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம்