Tuesday, May 31, 2011

சூப்பர் ஸ்டாருக்கு ஓர் மடல் ...












உம்மை பற்றி
வதந்தி பரப்பும்
வக்கற்ற மனிதர்களுக்கு
விளம்பரம் தேட வேறு
வழி இல்லையா? உம்மை
தான் இழுக்க வேண்டுமா ?

சிங்கப்பூர் செல்லும் முன்
உமது மகள் வெளியிட்ட
குரல் கேட்டு கலங்கிய
ரசிகர்களில் நானும்
ஒருவன் ..

உனது கம்பீர குரல்
காணமல் போய்
உடல் நலிந்த
நிலையில் உமது குரல்
கேட்டு நொறுங்கி
அல்லவா போனோம்
நாங்கள் ...

இனி உம்மை
வருத்தி எங்களை
மகிழ வைக்க வேண்டாம்
எந்திரனாய் நீ மாற
பட்ட கஷ்டங்களை
அறிந்தோம்

"ரானா " வாக மாறி
ரணப்படுவதை
விட உமக்கேற்ற
வேடங்களில்
உடல்நிலை பாதிக்காத
வேடங்களில் நடிக்க
வேண்டும் என்பதே
கோடானுகோடி உண்மையான
ரஜினி ரசிகனின் விருப்பம் ...

ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என கூறி
சிங்கப்பூர் கொண்டு சென்றது
ஏன் ?
உண்மை நிலை விளக்கிடு
பூரண குணம் பெற்ற பிறகு ..

நீர் யானை அல்ல
விழுந்தால் எழ முடியாமல் போக ...
நீர் குதிரை
விரைவில் எழுவீர்
பூரண உடல் நலத்துடன் ...