Monday, March 25, 2013

சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல்?பாகம் -2



திரை மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பெற என்ன செய்யலாம் ? பாகம் -1 என்ற பதிவின் தொடர்ச்சி இது .முதல் பாகத்தை படித்து விட்டு இதை படியுங்கள் சிறப்பாக இருக்கும் 

சற்று மிகைப்படுத்தபட்ட 18+ தலைப்புகள் பக்க பார்வைகளை பெற்று தரும் .ஆனால் உங்கள் மதிப்பை குறைக்கும் பதிவுகள்  ஆனால் உங்கள் பெயர் கெட்டு  விட   வாய்ப்பு உண்டு.பெண்  வாசகர்கள் உங்கள்  தளத்திற்கு வர யோசிக்க  கூடும் . நானும் 18+தலைப்பிட்டு சில எழுதி இருக்கிறேன் ஆனால் ஆபாசமாக அல்ல தகாத வார்த்தைகள் இன்றி எழுதி உள்ளேன்

உதாரணத்திற்கு 

சரவணன் -மீனாட்சி - 18+ ?

தலையணை மந்திரம்" -18+
*********************************************************************************



5.பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் தலைப்பு  வைத்து  திரை  மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பெறலாம் ஆனால்   அடுத்த தடவை உங்கள் PROFILE பார்த்தே ஒடி விடும் அபாயம் உண்டு ..

உதாரணத்திற்கு 

முகமூடி -படம் அல்ல ..

3 -இது தனுஷ் படம் அல்ல ..

*********************************************************************************
6.என்னை பொறுத்தவரை ஒரே நாளில்அனைத்து  திரட்டிகளிலும் இணைக்க மாட்டேன்.முதலில் தமிழ்மணம் ,அடுத்த நாள் இன்ட்லி ,அடுத்து தமிழ் 10 என மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு பதிவை வைத்து ஓட்டலாம் .சீரான பக்க பார்வைகளை பெறலாம்

எனக்கு தெரிந்து மேற்கண்ட முறைகளில் செய்தால் போதும்  சாமானிய பதிவர்களின் சினிமா பதிவுகள் திரைமணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடித்து அதிக பக்க பார்வைகளை பெரும் என்பதில் ஐயமில்லை