என்ன தான் தொழில்நுட்ப புதுமை என்றாலும் எந்திரனை ஏற்று கொள்ள முடிந்தது .அதில் ரஜினி தெரிந்தார் .ஆனால் இந்த படம் முழுவதும் ரஜினி நடிக்காதது போலவே இருக்கிறதே!முழுவதும் அணைத்து பாத்திரங்களும் animation வடிவிலயே அமைக்கப்பட்டு இருக்கிறது .
உதாரணத்திற்கு கீழே உள்ள படங்களை பாருங்கள் .அதில் எங்கே ரஜினி தெரிகிறார் .அனிமேஷன் ரஜினியின் அப்பட்டமாக தெரிகிறது
கீழே உள்ள வீடியோவை பாருங்கள் .அதில் ரஜினியை அடையாளம் கண்டுபிடியுங்கள்
மேலே கண்ட TRAILOR இல் ரஜினி ரசிகர்கள் ஆறுதல் பட்டு கொள்ள கூடிய ஒரே அம்சம் தலைவரின் குரல் தான் அந்த கம்பீர குரலுக்காக வேணும் இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வருவார்கள் என நினைத்தாரோ ரஜினி மகள்
கே.எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் இருந்து விலகிய போதே பலருக்கு புரிந்திருக்கும் இப்படம் ரஜினி படம் அல்ல அனிமேசன் படம் என்று ..
ரஜினி ஒரு பாடல் பாடியதாக அதிகம் விளம்பரப்படுத்தபட்டது.ஆனால் அவர் பாட வில்லை .வசனம் பேசி இருக்கிறார் .
மொத்தத்தில் இது ரஜினி படம் இல்லை என்பதே உண்மை ஆனாலும்அனிமேசன் படம் பார்க்கவும் ரஜினி ரசிகன் முயல்வான் .ஆனால் மற்ற ரசிகர்கள் பார்ப்பார்களா? என்பது கேள்விகுறி தான் .