தாண்டவம் கதை
லண்டன் குண்டுவெடிப்பில் கண் பார்வையை இழந்து உயிர் தப்பிய விக்ரம் குண்டு வெடிப்பில் இழந்த மனைவியை கொன்றவர்களை பழிவாங்குவது தான் கதை
மூன்று ஹீரோயின்கள்
எமி ஜாக்சன் ,அனுஷ்கா ,லக்ஷ்மிராய் என மூன்று ஹீரோயின்கள் .லக்ஷ்மி ராய் ஒரு சில காட்சிகள் தான் மற்ற இருவருக்கும் சம அளவில் காட்சிகள்
எமி ஜாக்சன்
- மிஸ் லண்டன் ஆக அறிமுக காட்சி மற்றும் இரண்டு பாடல்கள்.மிஸ் யுனிவர்ஸ் ஆக சமூக அக்கறை வேண்டும் என மரம் வளர்த்தல் ,go green என நடித்து போட்டோ எடுப்பது உண்மை உரைக்கும் காட்சிகள்.
- கண்பார்வையற்ற விகரமுடன் நட்பு பாராட்டி இறுதியில் விக்ரமை போலீசில் காட்டி கொடுக்கும் கேரக்டர் ஆக நடித்திருக்கிறார்
அனுஷ்கா
- விக்ரமின் மனைவியாக பிளாஷ்பேக்கில் வருகிறார்அனுஷ்கா
- விக்ரம் -அனுஷ்கா திருமணம் முடிந்து பின்பு நடக்கும் காட்சிகள் மௌனராகம் படத்தின் மோகன் ரேவதியை நினைவூட்டினாலும் ரசிக்க வைக்கின்றன.
- அனுஷ்காவிற்கு பிடித்த விசயங்களை அவர் தங்கை மூலம் கேட்டு கொண்டு அனுஷ்காவிடம் விக்ரம் பேசும் காட்சிகள் கலக்கல்.இரண்டு பாடல்கள் இவருக்கும் இருக்கிறது
லக்ஷ்மி ராய்
- விக்ரம் நண்பரின் மனைவியாக வருகிறார் லக்ஸ்மி ராய்
- குண்டு வெடிப்பில் இழந்த கணவனை கொன்றவர்களை கொல்வதற்காக விக்ரமுடன் இணைந்து அவர்களை கொல்வதற்கு உதவி செய்கிறார் .மற்ற படி பெரிதாக காட்சிகள் இல்லை இவருக்கு..
சந்தானம் டாக்ஸி டிரைவர் ஆக கதையுடன் இணைந்தும்,நாசர் விக்ரம் செய்த கொலைகளை கண்டுபிடிக்கும் அதிகாரியாகவும் வருகிறார்
மொத்தத்தில் கிளாமர் காட்சிகள் இல்லாத குடும்பத்துடன் எந்த நெளிவு சுளிவுக்கும் வழிவகுக்காமல் பார்க்க கூடிய படம் தான் இந்த தாண்டவம் .