- விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி பல யூத்துகளை நாடகம் பார்க்க வைத்தது உண்மை .ஆனால் அது தற்போது குடும்பத்துடன் பார்க்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை
- சரவணன் மீனாட்சிக்கு திருமணம் முடிந்து முதல் இரவு நடக்க தான் இந்த அக்க போர் .
- முதல் இரவை வைத்து ஒரு மாதத்திற்கு மேலாக கதையை ஓட்டுகின்றனர்
- ஆடி மாதத்தை முன்னிட்டு முதல் இரவு தள்ளி வைக்க படுகிறதாம் அதுக்கு நடந்த அக்க போர்கள் நெளிய வைப்பவை.மாமனாரே மருமகளிடம் முதல் இரவை பற்றி மறைமுகமகமாக பேசும் கொடுமைகளும் உண்டு ..(நல்ல வேலை அப்பா பேசமா போனாரே )
- ஒரு வழியாக ஆடி முடிந்து ஆவணி பிறந்து முதல் இரவை கொண்டாடலாம் என்றால் மீனாட்சியின் மாமனார்கள் நடு இரவில் முதல் இரவை கலைத்து தங்கள் பண்ணை வீட்டில் தான் நடக்க வேண்டும் என்கிறார்
- பண்ணை வீட்டில் முதல் இரவு நடக்க விருக்கும் நேரத்தில் மீனாட்சி மாமனார்கள் ரூமுக்கு வெளியே இசை கச்சேரி நடத்தி முதல் இரவு நடக்க விடாமல் பண்ணுகின்றனர் .
- அதுக்கு சரவணனும் மீனாட்சியும் முதல் இரவு நடக்கவில்லையே என காட்டும் ரியாக்சன்கள் இருக்கிறதே அப்பப்பா இனி குடும்பத்துடன் இந்த நாடகத்தை பார்ப்பதில்லை என முடிவெடுத்து விட்டேன் (தனியா பாத்துக்குவோம் )