Saturday, September 8, 2012

கோபிநாத்தும் ஒன்பதும் ...

கோபிநாத்

  • கோபிநாத் இந்த பெயரை தெரியாத விஜய் டிவி நேயர்கள் இருப்பது அரிது .விஜய் டிவி தொகுப்பாளர்களில் இவருக்கென்று தனி இடம் உண்டு
  • நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது .அந்த நிகழ்ச்சி இவ்வளவு  வெற்றி பெற விவாத திறமையுடன் இவரின் நடிப்பு திறமையும் காரணம்.
  • பவர்  ஸ்டாரை கேவலபடுத்தி தானே கேவலப்பட்ட கோபிநாத் நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள் .
  • தற்போது  விஜய் டிவி யில் காலை மற்றும்  இரவு 9 மணிக்கு இவர் ராஜ்ஜியம் தான் விஜய் டிவியில் ..

உன்னால் முடியும் 
  • உன்னால் முடியும் -இது தான் விஜய் டிவியின்  புதிய விவாத நிகழ்ச்சி ஞாயிறு தோறும்  காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது .நீயா நானாவை  விட இதில் கோபிநாத் அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது 
  • வெற்றி பெற்ற தொழிலதிபர்களை அழைத்து அவர்கள் வளர்ந்த விதம் பற்றி பேசும் புதிய நிகழ்ச்சி 
  • கடந்த வாரங்களில் இதயம் அதிபர் ,சக்தி மசாலா அதிபர்களை அழைத்து விவாதம் நடத்தினர் ,MBA மாணவர்கள் விவாதத்தில்பங்கேற்றனர்.நாளை POWER சோப்பு அதிபர் பங்கேற்கிறார் 
  • சற்று  வித்தியாசமான நிகழ்ச்சி தான்.வித்தியாசத்திற்க்கு என்றுமே விஜய் டிவி தான் போல !
  • இனி விஜய் டிவியில் ஞாயிறு காலையும் இரவும் 9 மணிக்கு கோபிநாத் தான் .