Friday, October 12, 2012

துப்பாக்கி பாடல்கள் -துளைத்ததா நெஞ்சை ?

 விஜய் யின் துப்பாக்கி பாடல்கள் சமீபத்தில் வெளியிடபட்டது .மொத்தம் ஆறு பாடல்கள் மற்றும் ஒரு தீம் சாங். நடிகர் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார் .பாடல்கள்  பற்றியும் பாடலில் நான் ரசித்த வரிகள் மற்றும் பாடல் கேக்க இணைப்பும் கீழே


கூகிள் கூகிள் 

ஜாலியான பாடல் .விஜய்  ,ஆண்ட்ரியா பாடியுள்ளனர் .மதன் கார்க்கி இணையத்தை முழுவதும் கலக்கி எடுத்துள்ளார்  .ஆங்கில கலப்பு அதிகம் உள்ள பாடல் .facebook,twitter என புகுந்து விளையாடி உள்ளார்

ரசித்த  வரிகள்

 பொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா -
ஓரக் கண்ணால sight அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா


நான் dating கேட்டா 
watch பாத்து ok சொன்னானே!

shopping கேட்டா 
ebay.com கூட்டிப் போனானே!

movie கேட்டேன் 
 Youtube போட்டுப் popcorn தந்தானே!--
(அவ்வளவு நேரம் இல்லாமையா இருக்காரு பாஸ் வெளிய கூட்டு போகாம ..)



போய் வரவா :
மெலடி பாடல் கார்த்திக் ,சின்மயி குரலில் லயிக்கிறது .ரொம்ப மெலிதாக போகும் பாடல் .பா .விஜய் எழுதி உள்ளார்

ரசித்த வரிகள் 
எங்கே  மகன் என்று எவரும் கேக்க
ராணுவத்தில் என தாயும்  சொல்ல 
அத்தருணம் போல 
பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா 

நாட்டுக்கென்றே 
தன்னை கொடுத்த வீரம் 
ஆடை மட்டும் வந்து வீடு சேரும் 
அப்பெருமை போல 
இவ்வுலகில் வேறு கிடைக்குமா 

இந்த வரிகளை படிக்கையில் விஜய் ராணுவ வீரரோ இப்படத்தில் என  தோன்றுகிறது


அன்டார்டிகா 
விஜய் பிரகாஷ், க்ரிஷ்.பாடி  உள்ளனர். மதன் கார்க்கி எழுதியுள்ளார்.ஒவ்வொரு வரியிலும் கவிதை தெறிக்கிறது

ரசித்த  வரிகள் 


அவள் புருவத்துக் குவியலில்

மலைச் சரிவுகள் தோற்பதால்

விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்!
அழகளந்திடும் கருவிகள்

செயலிழந்திடும் அவளிடம்

அணியிலக்கணம்
 அசைவதை பார்த்தேன்!

அவள் மேலே வெயில் வீழ்ந்தால்

நிலவொளியாய் மாறிப் போகும்

அவள் அசைந்தால்,
அந்த அசைவிலும் இசை பிறக்கும்!


வெண்ணிலவே :

மெலடி  பாடல்.ஹரிஹரன் பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளனர்.முத்துகுமார் எழுதி  உள்ளார்

ரசித்த வரிகள்

அழகே நீயோ பூகம்பம் தானா
அருகே  வந்தால் பூக்கம்பம் தானா

நீ என் கனவில் வரவே 
எழாமல் இருக்கிறேன்


குட்டி  புலி கூட்டம் 
ஹரிகரன்  திப்பு மற்றும் பலர் பாடியுள்ளனர் .விவேகா எழுதியுள்ளார் 
 ரசித்த  வரிகள்

 ஐயோ நெஞ்சம் தான் 
அது பெண்மை தாண்டி என்னும் எண்ணம் கொஞ்சம் தான் 
பெண்ணே இன்பம் தான் 
அது வேண்டாம்  என்று சொல்லும்
ஆண்கள் பஞ்சம் தான் 
துப்பாக்கி
அலைக்கா  லைக்கா

ஜாவேத் அலி ,ஷர்மிளா பாடியுள்ளனர் .பா. விஜய் எழுதி உள்ளார் .டூயட்  பாடல் 


ரசித்த வரிகள்

நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே
மைனஸ் டிகிரி வெப்பம் 
நீ ஆக்சிஜனில் சுவாசித்தாலே 
வாசம் சேர்க்கும் நுட்பம் 




உங்கள் பார்வைக்கு :