Sunday, December 30, 2012

தமிழ் சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்கள் 2012


2012 இல் பல தமிழ் படங்கள் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்து உள்ளது .அவற்றில் நான் ரசித்த பார்த்த படங்கள் பற்றிய எனது எண்ணங்கள் கீழே

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காதலில் சொதப்புவது எப்படி :

  •  நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு   வாழ்த்துக்கள் பாலாஜி. 
  • ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள்  என்பதே கதை.
  • நெகடிவ் க்ளைமாக்ஸ் இல்லை.சுவிட்சர்லாந்து டூயட் இல்லை.தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை உடைத்து எரிந்திருக்கிறது  இப்படம்.
  • "இத சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா!"என அமலாபால் சித்தார்த்திடம் சொல்லும் அழகே தனி!
  • இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் ஈ 

  • நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து  வில்லனை பழிவாங்குவது தான்  கதை 
  • ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா  கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால்  மனித இனம் படும் சின்ன  சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
  • இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
  • இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

VIJAY SETHUPATHI
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

  • தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை கிழித்தெறிந்த படம் .முக்கால்வாசி படத்தில் காதாநாயகி இல்லை.
  • தலையில் அடிபட்டதால் கடந்த ஒரு வருடத்தில் நடந்தைவை அனைத்தும் மறந்த நாயகனுக்கு அவன் திருமணமும் மறந்து விடுகிறது .அவனது நண்பர்கள் அதை மறைத்து  திருமணத்தை எப்படி நடத்தினார்கள் என்பது தான் கதை .
  • நட்பின் பெருமையை சொல்லும் படம் 

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    உங்கள் பார்வைக்கு :