பதிவுலகத்தில் பதிவர்களுக்கு தெரியாமலேயே பல சங்கங்கள் இயங்கி வருகிறது .அவை பற்றி ஒரு கற்பனை பதிவு .முழுக்க முழுக்க கற்பனையே
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இந்த சங்கம் நடிகர் வடிவேல் வசம் இருந்தாலும் பதிவர்கள் வசமும் இருக்கிறது.உங்கள் கருத்தை ,ஓட்டை எதிர்பார்க்க மாட்டார்கள்.(உள்ளூர எதிர்பார்க்கலாம் )ஆனால் அவர்கள் கடமையை செவ்வனே செய்வார்கள்.கருத்து ,ஓட்டை உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தருவார்கள் .நமக்கே அலுப்பாகி என்ன எல்லா பதிவுக்கும் வாரானே நாமளும் போவோம் என தோன்ற வைத்து விடுவார்கள்
மொய்க்கு மொய் வைப்போர் சங்கம்
இந்த சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான பதிவர்களின் தளத்தில் நீங்கள் கருத்திட்டால் உடனடியாக உங்கள் பதிவுக்கு கருத்து இடப்படும் .நீங்கள் பதிவே எழுதாமல் பல மாதங்கள் ஆகி இருந்தால் கூட உங்கள் பழைய பதிவுக்கு கருத்து போடுவார்கள் .அவ்வளவு நல்ல பதிவர்கள்
மொய்க்கு மொய் வைக்காதோர் சங்கம்
இந்த சங்கத்தில் உள்ளவர்கள் பணி பதிவு போடுவதே .கருத்து இடுவது அல்ல.மொய்க்கு மொய் கிடைக்காது .இருப்பினும் அந்த தளங்களில் நீங்கள் கருத்திட்டால் நீங்களும் பிரபல பதிவராகும் வாய்ப்பு உண்டு .
ஓட்டுக்கு ஓட்டு சங்கம்
மொய்க்கு மொய் சங்கத்தின் கிளை இது .ஒரு பதிவுக்கு நீங்கள் ஒட்டு போட்டால் அவர்களும் ஓட்டு போடுவார்கள் போடவில்லையெனில் நமக்கும் கிடைக்காது
ஓட்டுக்கு ஓட்டு போடாதோர் சங்கம்
நீங்க என்ன தான் மாங்கு மாங்குன்னு ஓட்டு போட்டாலும் உங்களுக்கு இந்த சங்கத்தில் உள்ளவர்கள் ஓட்டு போடமாட்டார்கள்.கருத்தும் கிடைக்காது .இருப்பினும் நீங்களும் பிரபலமாக வாய்ப்பு உண்டு
இது தவிர மேலும் பல சங்கங்கள் உண்டு ஆனால் அது தேவை இல்லை என நினைக்கிறேன் .இப்பதிவு உண்மையாக தெரிந்தாலும் முழுக்க முழுக்க கற்பனையே .
நீங்கள் எந்த சங்கத்தில் இருக்கீறீர்கள் என கருத்துரையில் தெரிவியுங்கள் அன்பர்களே !
உங்கள் பார்வைக்கு :