Monday, December 3, 2012

WINDOWS 8 -APPLICATIONS,மற்றும் வசதிகள் ஓர் அலசல்


WINDOWS 8 ஓர் APPLICATION கடை என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு APPLICATION கள் நிறைந்து   காணப்படுகிறது .NOKIA வின் OVI STORE போன்று ..
WINDOWS 8 APPLICATION மற்றும் GAME களை தரவிறக்க மைக்ரோசாப்ட் மெயிலில் உறுப்பினராகி முந்தைய பதிவில் சொன்னது போல  செய்து கொள்ளுங்கள் .இந்த பதிவு சில அவசிய மற்றும் சிறப்பான APPLICATION களை குறிப்பிடுகிறது .



WINDOWS STORE

  • இது தான் அனைத்துக்கும் முன்னோடி .உங்களுக்கு தேவையானஅனைத்தையும் இதில் பெறலாம் .
  • ஏகப்பட்ட FREE APPLICTION ,GAME கள் நிரம்பி  கிடைக்கின்றன.பதிவிறக்க MICROSOFT MAIL இல் உறுப்பினராதல் அவசியம்


READER
  • ADOBE READER க்கு மாற்றாக WINDOWS 8 இல் இணைந்துள்ள புதிய வசதி இது .
  • PDF FILE களைமுழு அளவில் திரை முழுவதும் நிரப்பி காண்பிக்கிறது .ADOBE READER யை விட சிறப்பான ஓன்று 
  •  பெரிதாக்கி காட்டும் வசதியும் இருக்கிறது .PRE-LOADED ஆக இணைக்கபட்டிருக்கிறது .இல்லையெனில் WINDOWS STORE மூலமாகவும் பதிவிறக்கலாம் 

INTERNET EXPLORER 10
  • BROWSER உலகில் புதியது என நினைக்கிறேன் .WINDOWS 8 க்கு என்றே பிரத்யேகமாய் அமைக்கபட்டு இருக்கிறது .இதை பெற INTERNET EXPLORER BROWSER ஐ நீங்கள் DEFAULT BROWSER ஆக தேர்ந்து எடுத்திருக்க வேண்டும் இல்லையெனில் IE9 ஆகவே காட்சி அளிக்கும் .
  • முழு திரையில் இணையத்தில் உலவ சிறப்பானதாக இருக்கிறது .இணைய வேகம் சிறப்பாக இருந்தால் இதனை சிறப்பாக பயன்படுத்தலாம்.தொடு திரை கணினியில் மிக சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
  •  இணைய தள முகவரியை ப்ரௌசெர்  கீழ் டைப் செய்யும் படி அமைக்க பட்டு இருக்கிறது
IE 10 இல் எனது தளம் ..

GOOGLE
  • உங்கள் கணினி WINDOWS 8 இருக்கிறது  என தெரிந்ததும்  GOOGLE தளத்தை திறந்தால் அதில் WINDOWS 8 காண பிரத்யேக  GOOGLE APPLICATION யை பதிவிறக்க வழி சொல்லும் .அதை பதிவிறக்கி முழுமையான சிறப்பான பலனை  பெறலாம் முழு திரையில் ..

VIDEO,MUSIC
  • நாம் தேர்ந்தெடுக்கும் வீடியோ ஆடியோ FILE களை இயக்க இனி VLC MEDIA PLAYER யும் WINAMP யையும் நாட வேண்டிய அவசியம் இல்லை அதற்கு என்றே தனியாக APPLICATION விண்டோஸ் 8 இல் உருவாக்கபட்டுள்ளது .
  •  விண்டோஸ் 8 பதிவிறக்கியவுடன் ஒரு VIDEO FILE யை திறக்கும் போது எதை கொண்டு இயக்க விரும்புகிறீர்கள் என கேட்கும் அதில் VIDEO வை தேர்ந்து எடுத்தால்  இந்த APPLICATION யை பெறலாம்
OFFICE 365
WINDOWS 8 க்கு என்றே அமைக்கபட்டுள்ள OFFICE இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம் .இதில் உள்ள அம்சங்கள்
WORD 2013,EXCEL 2013,POWERPOINT 2013,ONE NOTE 2013மற்றும் பல ..

 முந்தைய பகுதிகள்