Friday, December 7, 2012

விஸ்வரூபம் பாடல்கள் -ஓர் அலசல்


விஸ்வரூபம் பட பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.விஸ்வரூபம் என தொடங்கும் பாடல்  தவிர மற்ற  அணைத்து பாடல்களிலும்  கமல் இணைந்து பாடியிருக்கிறார்

மொத்தம் 5 பாடல்கள்( REMIX பாடலையும் சேர்த்து )பாடல்கள் பற்றி எனது எண்ணமும் பாடல் இணைப்பும் கீழே .Shankar-Ehsaan-Loy இசை அமைத்துள்ளார் 

உன்னை காணாது :
  • கமல் ,ஷங்கர் மகாதேவன் இணைந்து பாடி உள்ளனர் , கமல்  எழுதி உள்ளார் 
  • மெல்லிசை பாடல்.கமலின் இசை வரிகளோடு ஆரம்பிக்கிறது .
  • தசாவதார முகுந்தா முகுந்தா பாடல் போல உள்ளது  கிருஷ்ணர் பெருமை பாடுகிறது கமல் நாத்திகரா ஆத்திகரா கடவுளுக்கே வெளிச்சம்
ரசித்த வரிகள்

உடல் அணிந்த ஆடை போல
எனை அணிந்து கொள்வாயா
இனி நீ இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணின்
துகில் உரித்த கண்ணன் தான்
 இனி நீ இனி நீ



விஸ்வரூபம் 
  • சுராஜ் ஜகன் பாடியுள்ளார்  வைரமுத்து எழுதி உள்ளார் 
  • அடி தொண்டை வலிக்க பாடுகிறார் பாடகர்

ரசித்த வரிகள் 

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே  கிடப்பான்
வெட்டு படும் வேலையில்  வெளிப்படும் விஸ்வரூபம்

எந்த ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்
சொந்த ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்



விஸ்வரூபம் -REMIX

மேலே கண்ட பாடலின் REMIX இது .பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் தெரிய வில்லை



துப்பாக்கி எங்கள் தோளிலே

  • பென்னி தையல் ,கமல் பாடியுள்ளனர்  வைரமுத்து எழுதி உள்ளார் 
  • ஆங்கில பாடல் போல ஆரம்பிக்கிறது 

ரசித்த வரிகள் 
எங்களில் கையில் ஆயுதங்கள்  இல்லை
ஆயுதங்கள்  கையில் எங்கள் உடல் உள்ளது



அணு விதைத்த பூமியிலே :

  • கமல் ஹாசன் நிகில் பாடியுள்ளனர் கமல்  எழுதி உள்ளார் 
  • மெல்லிய சோக பாடல் இது 

WINDOWS-8 பற்றி அறிய ஆவலா ?கீழே கிளிக்குங்கள்