உங்களிடம் இலவசங்கள்
எங்களை வருத்தி தான்
இலவசங்கள் வழங்க
வேண்டுமா ?அப்படி ஓர் இலவசங்கள்
தேவை இல்லை எங்களுக்கு ..
பேருந்து கட்டணம்
ஏறக்குறைய இரு மடங்கு
உயர்வு பால் விலை உயர்வு
மின்கட்டணமும் உயர்வதாய் சொல்லி
எங்களை நசுக்கி உள்ளீர்கள் ..
மக்கள் நல பணியாளர்கள்
வீண் செலவு என கருதி
வீட்டுக்கு அனுப்பிய
நீங்கள் நூலகம்
தலைமை செயலகம்
மருத்துவமனையாக மாற்றம்
சமச்சீர்கல்வி கல்வி குளறுபடி
ஆகியவற்றில் செய்தது வீண்செலவு
இல்லையா ?
உள்ளாட்சி தேர்தலிலும்
உங்களுக்கு அமோக ஆதரவு
அளித்தோமே ! எங்களை
உங்களுக்கு ஏன் ஓட்டளித்தோம்
என நினைக்க வைத்து விட்டீர்கள் ...
எத்தனை போராட்டம்
நடத்தினாலும் விலை உயர்வை
மாற்ற போவது இல்லை நீங்கள்
மாற போவதும் இல்லை
ஐந்து ஆண்டுகள் அனுபவிப்போம்
உங்களுக்கு வாக்கு அளித்ததற்கு...