Wednesday, March 21, 2012

ஜெ.. க்கு நன்றிகள் பல ..

ஜெயலலிதா ,JEYALALITHA
நல்லா இருங்க மக்களே !

குறட்டை வீட்டு
காலையில் அதிக நேரம்
தூங்கும் இளசுகளை
அதிகாலையில் மின்தடை
செய்து எழுப்பும் உங்கள்
அக்கறைக்கு நன்றிகள் பல !

தொலைக்காட்சி
நெடுந்தொடரால் சீரழியும்
பெண்களை காப்பாற்ற
பகலில் அதிக நேரம்
மின்தடை செய்யும் உங்களுக்கு
 எங்கள் நன்றிகள் பல !

எங்கள் கிராமத்தில்
குடும்பங்களில் அளவளாவி
பேசி எவ்வளவு நாளாகி விட்டது
தொலைக்காட்சி அரக்கன்
வந்ததில் இருந்து ..
 எளிதில் போக்கினார் ஜெ
 மின்சார தடை இரவிலும்..
ஜெ.. க்கு நன்றிகள் பல ..

நள்ளிரவிலும்
மின்தடை செய்து எங்கள்
தூக்கத்தை கெடுப்பதில்
என்ன நன்மை? தேடி பார்த்தும்
ஒன்றும் அடங்க வில்லை
சொல்வீரா முதல்வரே !

--இது வஞ்ச புகழ்ச்சியா உண்மை புகழ்ச்சியா உங்கள் முடிவே !((இது எங்கள் கிராமத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது .நகரம் அல்ல )

 







உங்கள்  பார்வைக்கு :