Sunday, March 11, 2012

கையில் ஒரு கோடி -ARE YOU READY?-சன்னின் மங்காத்தா

சன் டிவி ,கையில் ஒரு கோடி

விஜய் டிவி க்கு போட்டியாக இந்நிகழ்ச்சி சன் டிவியில்  ஆரம்பிக்க பட்டாலும் உண்மையில் இது போட்டி அல்ல .சனி ,ஞாயிறுகளில் நிகழ்ச்சி வருவது இதை உறுதி படுத்துகிறது .வார நாள்களில் இந்நிகழ்ச்சியை போட சீரியல்கள் தடை சன்னுக்கு!


நிகழ்ச்சி  எப்படி ?
  • இரு பங்கேற்பாளர்கள்   ஒரு கோடி கொடுக்கப் படும்.மொத்தம் ஏழு கேள்விகள் .கேள்விகளுக்கான  4 பதில்கள் தனித்தனியாக 4 பிரிவுகளாக பிரிக்க பட்டிருக்கும்.பதில் உறுதியாக தெரிந்தால் சரியான விடை உள்ள பிரிவில்   அனைத்தையும் அடுக்கலாம்
  •  .இல்லையென்றால் மூன்று பதில்கள் உள்ள பிரிவுகளிலும்  உங்கள் பணத்தை அடுக்கலாம்  .சரியான விடை உள்ள பிரிவில் அடுக்க பட்ட பணம் மட்டுமே அடுத்த கேள்விக்கு செல்லும் .
  • 60வினாடிகளுக்குள் அடுக்க வேண்டும்

சிறப்புகள்
  • கையில் கொடுக்கபட்ட ஒரு கோடியை மொத்தமுள்ள  7 கேள்விகள் வரை கொண்டு சென்றால் நீங்கள் கோடீஸ்வரன் .
  • 7 கேள்விகள் வரை சென்று இறுதியில் அனைத்து பணத்தையும் இழந்தால் சன் அறுதல் பரிசாக ஒரு லட்சம் தருகிறது 
  • கேள்விகள்  சிறப்பாய் இருப்பதும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு
சன் டிவி ,,KAIYIL ORU KODI

மாற்றி  யோசித்த சன்
  • கேள்விகளின் தலைப்பை கொடுக்கபட்ட இரண்டு தலைப்புகளில் இருந்து நாமே தேர்ந்தெடுப்பது ,
  • பதில்கள் முதலில் சொல்லி கேள்வியை பின்னர் சொல்வது ,
  • ஒரு கோடியில் இருந்து படிப்படியாக இறங்கி கடைசியில் கிடைக்கும்   தொகையை பெறுவது என கோடீஸ்வரன் பார்முலாவை  மாற்றி யோசித்திருக்கிறது சன் .

பணத்தை வெளிப்படையாக வைத்து விளையாடுவதால் இது சூதாட்டம் என சிலர் வாதிடுகின்றனர்(அடுக்கப்படும் பணம் காட்சிக்காக வைக்க படும் பணமா இல்லை உண்மையான பணமா  என தெரிய வில்லை)

டாப்பா  ட்ராப்பா  இது பதில்கள் சரியானதா  என சொல்லும் போது நிகழ்ச்சியை நடத்தும் ரிஷி சொல்லும் வசனம்.

மொத்தத்தில் இந்நிகழ்ச்சி மாற்றம்  கண்ட கோடீஸ்வரன் நிகழ்ச்சி

உங்கள்  பார்வைக்கு :