Thursday, April 11, 2013

கமல் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஓர் பார்வை


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில  வாரங்களுக்குள் கமலை அழைத்து இருப்பதே அந்த நிகழ்ச்சி எப்படி போய் கொண்டு இருக்கிறது என சொல்லி விடும் . கடந்த ஒரு வாரமாக விளம்பரபடுத்தி நிகழ்ச்சியை பார்க்க வைத்து ஒரு வழியாக இன்று கமல்  நிகழ்ச்சியை  போட்டனர் .


பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி எப்போது போடுவார்கள்  எப்படி கண்டுபிடிப்பது ?(ஒரு G .Kக்காக )
  • பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் பெரும்பாலும் அந்த வார  கடைசி நாளாக தான்  இருக்கும் .
  • மற்றும் ஒரு வழி சரியான நாளை  கண்டுபிடிக்க விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் போட்டிக்கும் சட்டையை பாருங்கள் .அந்த சட்டையை பிரகாஷ் ராஜ் என்று போடுகிறார்? என்று பாருங்கள். அன்று தான் அந்த சிறப்பு நிகழ்ச்சி ( நிகழ்ச்சி தொடக்கத்தை மட்டும் சட்டையை மட்டும் பார்த்தால் போதுமே )
நிகழ்ச்சியின் சிறப்புகள் :
  • விஸ்வரூபத்தில் பார்த்த கமலா இவர் என்று சொல்லும் அளவுக்கு  மெலிந்து தாடியுடன் வந்து இருந்தார் கமல் 
  • இந்த நிகழ்ச்சியின்   மூலம் கிடைக்கும்  பணம் "பெற்றால் தான்  பிள்ளையா "என்ற TRUST -(HIV + குழந்தைகள் கொண்டது  ) மற்றும் CANCER ஆல் கைவிடப்பட்டவர்களுக்கான  அமைப்புக்கு சேரும் என தெரிவிக்கப்பட்டது 
போட்டியில்  கமலிடம் கேட்கப்பட்ட  கேள்விகளில்  இருந்து பெறப்பட்ட தகவல்கள்  
  • மெட்ராஸ் பாசையில் பேமானி என்பதன்  பொருள் என்ன ?
A )முட்டாள் B )பேராசை காரன் C)நேர்மையற்றவன்

இதற்கான பதில் நேர்மையற்றவன் -இது ஒரு உருது மொழி சொல் பேமானி -பே +இமானி
  • கஸ்மாலம் -இது ஒரு சான்ஸ்கிரிட் சொல் .இதன் பொருள் குப்பை 
  • ஜல்லி கட்டு என்பதன் தமிழ் சொல் ஏறு தழுவதல் 
இந்த  நிகழ்ச்சி  நாளையும் தொடர்கிறது கமலின் COMPANION கெளதமி உடன்
பார்க்க காத்து  இருங்கள் . தொடர்புடைய பதிவுகள்  சில