Friday, August 23, 2013

தலைவா உருவானது எப்படி? -ஓர் அலசல்



தலைவா விமர்சனங்கள் தாறுமாறாக திரைமணத்தில் படித்து இருப்பீர்கள்

.இது ஒரு வித்தியாசமான  விமர்சனம் .தலைவா எப்படி உருவானது கீழே

படியுங்கள்



தலைவா சமைத்த கதை.

தேவையான படங்கள் 

தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்
நாயகன் - ஒரு கிலோ
சர்க்கார் - அரை கிலோ
பாம்பே -1 துண்டு
தேவர்மகன் - 6 பல்
இந்திரா - ஒரு தேக்கரண்டி
பில்லா - அரை கப்
புதிய பறவை - கோபால் கோபால்மிக்ஸ் ஒரு டீஸ்பூன்
பொல்லாதவன் - தேவையான அளவு


கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து

 வதக்கவும்.இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன்

சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .பொன்னிறமாக வரும் 


போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில்

 வேகவைக்கவும்.


நன்றாக வதங்கியதும் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் நாயகன்


துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.நாயகன் வெந்ததும் அரைத்த


 சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் பொல்லாதவன்

தூவி இறக்கவும். தலைவா ரெடி.இந்த டிஸ்ஸை நீங்கள் விரும்பிய


திரையரங்கில் சாப்பிட்டு சாகலாம்.



மேலும் பல படிக்க FACEBOOK  இன் இந்த பக்கத்தில் இணைந்து  கொள்ளுங்கள்