Saturday, January 22, 2011

மக்கள் சேவையில் நான் ..






(கடந்த டிசம்பர் 2010 பாரத ஸ்டேட் வங்கி (STATE BANK OF INDIA) திருச்சி கைலாசபுரம் கிளையில்  பணியில் நான் சேர்ந்த போது பயிற்சி மையத்தில் நான் வாசித்த கவிதை இது.. பாரத ஸ்டேட் வங்கி பற்றிய உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன .. )


கிளை
இல்லா
மரம் உண்டு
பாரத ஸ்டேட் வங்கி
கிளை இல்லா ஊர் உண்டா?

கடல் நடுவே காசில்லாமல்
கலங்கி நின்றாலும்
காப்பாற்றும் பாரத ஸ்டேட் வங்கி
ATM மூலம் ...


கல்வி நிலையம்
இல்லா ஊரிலும்
பாரத ஸ்டேட் வங்கி
ATM உண்டு ..

வாடிக்கையாளர்
திருப்தியே முதன்மையாய்
கொண்டதால் தான்
முதலிடம் பெற்றதா
இவ்வங்கி ?

இந்தியாவில் மட்டுமல்ல
உலகிலும் முதலிடம்
விரைவில் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
உங்கள் வாடிக்கையாளன்
இப்போது உங்கள் ஊழியனாய் ...

மாது விலைக்கு ...























கசக்கி எறியப்படும்
மலர்கள் நாங்கள்

சதைகளை தின்னும்
மனிதர்கள் போல்
எங்களையும் தின்பார்கள்
காம அரக்கர்கள்

எங்கள் அங்கங்கள்
அவர்களின் விளையாட்டு
மைதானங்கள் -விருப்பம்
போல் விளையாடுவர் நாங்கள்
விரும்பா விட்டாலும் ...

எங்களை நேசிப்பார் யாருமில்லை
பூஜிப்பார் யாருமில்லை
அவசர தேவைக்கு
விற்கப்படும் பொருள் நாங்கள் ...

நாங்களும் மாது தான்
ஆனால் விலைக்கு ...

Thursday, December 30, 2010

புது வருட சபதம் 2011


ஒவ்வொரு புது வருடம்
பிறக்கும் போதும்
ஆவேசமாய் பல சபதம்
ஏற்பர் பெரும்பாலானோர் ...
நடந்தது என்ன ?

சபதங்களுள்
ஒன்றையாவது நம்மால்
செய்ய முடிகிறதா ?முடிந்தால் சரி

இல்லையெனில்
இந்த புது வருடத்திலும்
அதே சபதத்தை
சற்று மாற்றத்தோடு
மீண்டும் நினைக்க போகிறோம்

சபதங்கள் வீணல்ல
அதை அடைய நாம்
முயலாததே அதை
வீணாக்குகிறது

Monday, December 27, 2010

கை விடாதீர்


எமக்காய் எவ்வளவோ

செய்தீர் செய்கிறிரீர் செய்வீர்

உமக்காய் நான் என்ன

செய்தேன்? ஒன்றுமில்லை


உன் ஆலயம் வர

என்னால் முடியாமல்

போனது ஏன் ?

சோம்பலா? நேரம் இல்லாமையா?

அறியாமையா? எக்காரணம்

கொண்டும் என்னை நியாய படுத்த

முடியாது -நீர் என்னை தவிர்க்கவா

செய்தீர் நான் உம்மை தரிசிக்க

வராததற்கு..


இனியாவது உம்மை பின் தொடர

முயல்கிறேன் முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் நான் உம் பிள்ளை!

Sunday, December 19, 2010

தனிமை


















தனிமை
சிலருக்கு இது கசக்கும்
சிலருக்கு இது பிடிக்கும்

கவிஞனின் கவிதைகளுக்கு
ஏற்ற இடம் இது
தீயவை நடக்க சிலருக்கு
வாய்ப்பாகும் இது

தனிமையில் நமக்கு
என்ன எண்ணம் தோன்றுகிறதோ
அதுவே நம் வாழ்க்கையை
தீர்மானிக்கிறது

தனிமை கொடுமை பலருக்கு
ஆனாலும் தனிமை இனிமை எனக்கு
கவிகள் கிடைப்பதால் ...

அது மட்டும் இல்லை எனில் ?























 ஆண் என்ற அகங்காரம்
சிறிதாவது இருக்கும்
ஆண்கள் அனைவருக்கும்
அடி மனதில் ...

என்ன நாம் அப்படி உயர்ந்து
விட்டோம்? திண் தோள்களும்
உடல் வலிமையையும் தவிர ..

நமக்குள் ஓர் உயிரை
சுமக்க முடியுமா
தாய் என்ற தவச் சொல்
நமக்கு கிடைக்குமா ?

நமக்கு ஒரே பெருமை
பெண்ணுக்கு தாய்மையை
தருவது மட்டும் தான்
அதுவும் நாளைய உலகில்
இல்லாமல்போகலாம்
அப்போது நமக்கு என்ன பெருமை?

Thursday, December 9, 2010

காவலன் பாடல்கள்
















 மொத்தம் ஐந்து பாடல்கள்
மெல்லிசை பாடல்கள் இரண்டு
அறிமுக குத்து பாடல் ஓன்று
ராப் பாடல் ஓன்று
இன்னொரு குத்து பாடல் என
விஜய் பட பாடல்கள் அமைப்பு
இதிலும் காணப்படுகிறது

ஆச்சர்ய அதிசயமாக
நாயகியை தேடி காதல் செய்யும்
பாடல்கள் இரண்டு உண்டு இதில்
முந்தைய படங்களில்
நாயகி தான் விஜயை
காதல் செய்வது போல் இருக்கும்

"விண்ணை காப்பான் ஒருவன்" பாடல்
விஜயின் அறிமுக பாடல்
"யாரது" பாடல் கார்த்திக்கின்
குரலில் காதலியை தேடும் பாடல்
மெலிதாய் இனிக்கிறது

பட்டாம்பூச்சி பாடலில் கே.கே மற்றும்
ரீட்டா குரலில் மயக்குகிறது
"சட சட" என்ற பாடலில்
பட பட என பாடியிருக்கிறார்
கார்த்திக்

"ஸ்டெப் ஸ்டெப் "பாடல் ராப்
ரகம் குதிக்க வைக்கும் பாடல்
மொத்தத்தில் விஜய் படத்திற்கே
உண்டான பாடல்கள்
இந்த முறை மெலோடியயும்
இணைத்திருக்கிறார் இசை வித்தியாசாகர் என்பதால் ...
(பாடல்கள் கேக்க)
click here

Monday, November 29, 2010

உயிர்கொல்லி தினம்

*HAPPY LOVERS DAY
HAPPY WOMENS DAY
என்பது போல்
HAPPY AIDS DAY என்று
சொல்ல முடியுமா?
முடியாதல்லவா!

*காலனை அறிந்தே
கட்டி தழுவ
நினைத்தவர்களின் தினம்
இது !

*மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கு
தான் மணம் உண்டு
மங்கையர்க்கு அல்ல !

*மருந்தரியா நோய்க்கு
பாதுகாப்பில்லா
உறவு ஏன் ?
உயிர் குடிக்கும்
என தெரிந்தும்
உல்லாசம் ஏன் ?

*நாகரிகத்தின் வெளிப்பாடு
நல்லதற்கு தான்
தீயதர்க்கு அல்ல !
AIDS இல்லா இந்தியா உருவாக
மனைவியை மட்டுமே
மனதில் கொள்வோம்!

Wednesday, November 24, 2010

என் தந்தை


**கருத்துகள் அதிகம்
பகிர்ந்ததில்லை...
அளவளாவி அதிகம்
பேசியதில்லை ...

**அதிகமாய் என்னை
கண்டித்ததில்லை ...
கஷ்ட காலத்தில் கூட
படிப்பே பிரதானம் என
வேலைக்கு அனுப்பியதில்லை ...

**சிறு கடின வேலையில்
கூட என்னை
ஈடுபடுத்தியது இல்லை..
என் தந்தை...

**வேறுபட்ட தந்தை களுள்
என் தந்தையும் ஒருவர் ...

Monday, November 22, 2010

தந்தை


எப்போதும் என்னிடம்
கண்டிப்பாய் கறாராய்
இறுக்கமாய் இருக்கும்
தந்தை இனிதாய் பேசினார்
அரசு வேலை கிடைத்த சமயம்..
இப்போது நினைக்கிறேன்
அவர் அப்படி நடந்து கொண்டதே
நான் நன்றாக வர வேண்டும்
என்பதால் தானோ என்று...