Sunday, July 1, 2012

உங்கள் தளம் எனது தளத்தில் மாதம் முழுவதும் ..(BEST COMMENTS)

நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு 
  • நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டி  அதிக பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தின் முகப்பில்   ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன் .கடந்த மே  மாதம் சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  வரலாற்று சுவடுகள் 

ஜூன் மாத சிறந்த கருத்தாளர் யார் ?
கடந்த ஜூன் மாதம் மொத்தம் 11 பதிவுகள் என்னால் வெளியிடப்பட்டது.அதில் சிறப்பான என்னை நெகிழ வைத்த  கருத்துக்கள் கீழே !

சிறந்த கருத்தாளர் பற்றிய இந்த பதிவுக்கு சிறந்த கருத்தாளர் அளித்த கருத்து கீழே   

வரலாற்று சுவடுகள் said...


சமூக வலைத்தளங்களில் நம் பதிவிற்கு கிடைக்கும் ஓட்டுகள் நம் பதிவின் தரத்தை தீர்மானிக்கும் காரணியாக எப்போதும் இருப்பதில்லை, ஆனால் நம் பதிவிற்க்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் நம் பதிவின் தரத்தை தீர்மானிக்கும் விசயத்தில் மிகமுக்கியமான காரணியாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆண்களே இப்படி தானா ?
இந்த கவிதை பதிவுக்கு அன்பர் அளித்த வித்தியாசமான கருத்து கீழே



இக்பால் செல்வன் said...

ஆண்களே அப்படித் தான் .. அதற்கு அறிவியல் ரீதியாக காரணங்கள் உண்டு .... !!!அதற்கான அறிவியல் விளக்கம் வேண்டுமா ? பதிவாகத் தரவும் தயார் ...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ற கவிதைக்கு இருவேறு அன்பர்கள் அளித்த கருத்துக்கள் கீழே





ரேவா said...


எப்படி எங்கு என்று நினைக்கும் முன்னே பலருக்குள் காதல் முளைவிட்டிருக்கும், இந்த காதல் விருட்சத்தின் வேர்தேடி பயணத்திருக்கும் கவிதை நன்று...வாழ்த்துக்கள் சகோ


மயிலன் said...


கவிதைக்கு கருத்து சொல்ல எந்த யோக்கியதையும் எனக்கு இல்லை என்றாலும் உங்களிடம் இத்தனை நாள் உங்கள் கவிதைகள் பலவை வாசித்த இரசிகன் என்ற முறையில், நண்பன் என்ற முறையில் ஒன்று சொல்லுகிறேன்.. உங்கள் கருப்பொருளை அப்படியே வைத்துவிட்டு வார்த்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெடுங்கள்... நிச்சயம் இன்னும் பல படி மேலே வரும்.. வாழ்த்துக்கள் பிரேம்.


PREM.S said...



@மயிலன் //அனைவருக்கும் புரியும் படி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் அன்பரே !மரபு கவிதைகள் என்னால் எழுத இயலாது வெகு ஜன ரசிப்பும் அதற்கு அதிகம் இல்லை அதனால் தான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ற தந்தையர் தின கவிதைக்கு அன்பரின் கருத்து நெகிழ  வைத்தது உண்மையும் கூட





"என் ராஜபாட்டை"- ராஜா said... தந்தையின் அருமை அவர் இல்லாத பொழுது அல்லது நாம் தந்தையாக இருக்கும் போதுதான் பலருக்கு தெரிகின்றது ...


இப்போது ஏது கேட்டாலும் வாங்க வசதி இருந்தும் கேட்க அவர் இல்லை .. அவர் கேட்கும் போது வாங்க வசதி இல்லை ...I miss my father
++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ற  பதிவிற்கு அன்பரின் உண்மையான கருத்து கீழே
ரெவெரி said... Good to listen...but I don't like to watch old songs.. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேற்கண்ட கருத்துகளை தவிர அன்பர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர் .எனினும் என்னை நெகிழ வைத்த கருத்தை அளித்த "என் ராஜபாட்டை"- ராஜா  தளத்திற்கு அவருக்கு ஜூன் மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுத்து இருக்கிறேன் 
அவரது தளம் இந்த மாதம் முழுவதும் எனது தளத்தின் முகப்பில் விளம்பரபடுத்தப்படும் .தொடர்ந்து வருகை தாருங்கள் அன்பர்களே  நன்றி 

உங்கள் பார்வைக்கு : 
 
 சகுனி (saguni) -கலைஞருக்கு குத்தோ குத்து வசனங்கள்

Thursday, June 28, 2012

சகுனி (saguni) -கலைஞருக்கு குத்தோ குத்து வசனங்கள்

saguni stiils,karthi,
  •  இது ஆளும் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை இதுக்குலாம் நான் பயப்பட மாட்டேன் 
  • குண்டாந்தறிகள் தாக்கும் போதும் குண்டுகள் நெஞ்சை  துளைக்கும் போதும் தூக்கு கயிறு என்னை நெருக்கும் போதும் தமிழ் தமிழர்கள்  என்றே என் நெஞ்சம் கதறும்
  • வெளிய இருந்தா  போராட்டம் நடத்துவான் உள்ள இருந்தா ஏதாவது  புக் எழுதி படி படின்னு  உயிரை வாங்குவான்
  •  நமக்கு அரசியலே வராது புக் எதுக்கு!
  • பெருமை பட்டு வேட்டிக்கு ஆசை பட்டா  கோவணம் கூட மிஞ்சாது தலைவரே
  • தலைவன் ஜெயிக்கிறதுக்காக  தீக்குளிப்பேன். டீ குடிக்க காசு இருக்கா  நீயுலாம் தீக்குளிக்கிரத  பேச வந்துட்ட
  •  விலைவாசி உயர்வுக்கு நாம நடத்துன  போராட்டம் உலக தமிழர்களையே பேச வைச்சுருச்சு 
  • எப்ப  பாத்தாலும் விலை.உயர்வு  போராட்டம் நடத்திட்டு இவுங்க வந்தா குறைஞ்சுற போகுதா
  •  மேல்மட்டகுழு  கூட்டத்துல  நியாயமா  நீங்க பேசணும் இங்க அவுங்க பேசி சண்டை போட்டு கிட்டு  இருக்காங்க நீங்க பேசாம இருக்கீங்க  பேச விட்டுட்டு !அவன் மச்சினிக்கு சீட் கேக்கான் இவன் செட்அப் க்கு சீட் கேக்கான்  இன்னொருத்தன்  ஜாதி வைச்சு சீட் கேக்கான் 
  •  நீங்க வரணும்னு சொல்லுராறு  தலைவர் இல்லன்னா  தீவிர அரசியல்ல இருந்து விலகிக்கிறேன்னு சொல்றாரு
 மேற்கண்ட வசனங்களை படிக்கும் போது உங்களுக்கு கலைஞர் நியாபகம் வந்தால் வசன கர்த்தா மற்றும் இயக்குனரே பொறுப்பு .இது சகுனி பட வசனங்கள் .என்ன ஒரு குத்து !

இப்படி பல  குத்து குத்தி விட்டு கந்தா காரவட பாடலில் ஒரு நிமிடத்துக்கு மேலாக கலைஞர் எழுப்பிய  மருத்துவ மனையாக மாற உள்ள புதிய தலைமை செயலகத்தை காட்டுகிறார்கள்  குளிர வைக்கவா !

pranitha,saguni heroin


இது யாருக்குன்னு நீங்களே சொல்லுங்க 

நின்னா கமிஷன் உக்காந்தா கமிசன்  முன்னாடி 10 கார் பின்னாடி 10 கார் மக்களுக்கு ஏதாவது பண்ணியிருந்தா கொண்டாடி  இருப்பாங்களே தலைவரே!

வாக்காளர்களுக்கு:

பெருசா ஒட்டு போட்ட ஒட்டு போட்டனு புலம்புற சும்மாவா ஒட்டு போட்ட  காசு வாங்கல என்கிட்ட பேச தகுதியே இல்ல உங்களுக்கு 5 வருஷம் குத்தகைக்கு எடுத்துட்டேன் உங்கள!

 கதை :
பதிவர்கள் பலர் கதையை அலசி காய போட்டுவிட்டதால்   ஒரே லைனில் சொல்வதானால் இது ஒரு அரசியல் பொடிமாஸ் .ஊருக்கே  சோறு போட்ட குடும்பம் ரயில்வே பணிகளில் வீடு இடிபடுவதை தவிர்க்க அவுங்க வீட்டை காப்பாற்ற கார்த்தி சென்னை வந்து சகுனி வேலை  (?) செய்து வீட்டை எப்படி மீட்கிறார் என்பதே கதை

சகுனி பாடல்கள்
சகுனி  பாடல்களும் அதை தரவிறக்க இணைப்பும் கீழே உள்ள பதிவில் ..


Tuesday, June 26, 2012

தமிழில் "READ MORE" BUTTON கள் நமது தளத்தில் வைக்க !

READ MORE  என கூகிள் IMAGES இல் தேடினால் READ MORE  பட்டன்கள்  அதிகம் வரும் .ஆனால் தமிழில் மேலும் படிக்க என தேடி பார்த்தால் நயன்தாராவும் இன்ன பிற வகையறாக்கள் வருவதை காண்பீர்கள் .

READ MORE
  • இந்த தளத்திற்கும் ஆங்கில READ MORE BUTTON களே சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்தது.எனக்கு தோன்றிய திடீர் மாற்றத்தின் மூலம் தமிழில் READ MORE என பொருள் தர கூடிய மேலும் படிக்க BUTTONகளை DESIGN செய்து பொருத்தினேன் .
  • தற்போது பல நிறங்களில் பல BUTTON களை உருவாக்கி உங்களுக்கு அளிக்கிறேன் .தேவையான அன்பர்கள் தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளலாம்

"மேலும்  படிக்க" BUTTON இணைப்பது எப்படி ?

 (முதலில் BLOGGER>>DASHBOARD>>NEW POST சென்று  பதிவு எழுதியதும் முகப்பு பக்கத்தில் எதுவரை வாசகர்களுக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறீர்களோ அங்கு கர்சரை வைத்து INSERT JUMP LINK என்ற ICON யை கிளிக் செய்யவும் .ஒவ்வொரு பதிவுக்கும் இது செய்ய வேண்டும்)
  •  ப்ளாக்கரின் புதிய தோற்றத்தில் TEMPLATE>>BACKUP/RESTORE>> DOWNLOAD FULL TEMPLATE >>SAVE கிளிக்செய்து உங்களது TEMPLATE யை சேமித்து வைத்து கொள்ளுங்கள் .தவறு ஏற்பட்டால்  அதை UPLOAD செய்யலாம் .
  • பின்பு அதை CLOSE செய்து விட்டு EDIT HTML >> PROCEED  கிளிக் செய்யுங்கள் .EXPAND WIDGETS என்பதை TICK செய்யுங்கள் .
  • பின்பு உள்ளே கர்சரை வைத்து CTRL+F மூலமாக பின்வரும் CODE யை கண்டுபிடியுங்கள் .(JUMPLINK என அடித்தாலே வந்து விடும் )
<b:if cond='data:post.hasJumpLink'>

<div class='jump-link'>

<a expr:href='data:post.url + "#more"'><data:post.jumpText/></a>

</div>

</b:if >

 
 மேலே  உள்ள கோடிங்கில் <data:post.jumpText/> என்பதை நீக்கி விட்டு பின்வரும் CODE சேர்க்கவும் 


 <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnHa22E2wGZK9SWch0TJyBCBZWj-ZUAButA94nXTqMUUlAyCqlzE_hiz5JplGMfdC9ftJu1HT0_wbQqlnFZZDOhwzjZJ0Sn8hmgctdCEQ0ZsY3bR7r6qpBzIWVEmE-kX8Pd788njM_iIOf/s1600/Greenshot_2012-06-25_20-55-00.jpg"/>

.பின்பு மேலே உள்ள கோடிங்கில் சிகப்பு நிறத்தில் உள்ள முகவரியை நீக்கி விட்டு உங்களுக்கு பிடித்த கீழே உள்ள பட்டன்களில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்றின் முகவரியை கொடுத்து SAVE செய்யவும் (முகவரி தேட :படங்களின் மீது RIGHT CLICK செய்து COPY IMAGE LOCATION தேர்வு செய்யவும் )

UPDATE: 
 
"மேலும் படிக்க "  பட்டனை நமது விருப்ப படி  வைக்க:

இடது  ,வலது மற்றும் நடுவில் என நமது விருப்ப படி  பட்டனை மாற்றி வைக்கலாம் ,இதற்கு மேலே உள்ள கோடிங்கில் பின்வருமாறு  சிறு மாற்றம் செய்தால் போதும் 

இடது புறம்  வைக்க      

<p align="left">  <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnHa22E2wGZK9SWch0TJyBCBZWj-ZUAButA94nXTqMUUlAyCqlzE_hiz5JplGMfdC9ftJu1HT0_wbQqlnFZZDOhwzjZJ0Sn8hmgctdCEQ0ZsY3bR7r6qpBzIWVEmE-kX8Pd788njM_iIOf/s1600/Greenshot_2012-06-25_20-55-00.jpg"/>   </p>

READ MORE 


வலது புறம்  வைக்க 

    <p align="right">   <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnHa22E2wGZK9SWch0TJyBCBZWj-ZUAButA94nXTqMUUlAyCqlzE_hiz5JplGMfdC9ftJu1HT0_wbQqlnFZZDOhwzjZJ0Sn8hmgctdCEQ0ZsY3bR7r6qpBzIWVEmE-kX8Pd788njM_iIOf/s1600/Greenshot_2012-06-25_20-55-00.jpg"/>  </p>
READ MORE


நடுவில் வைக்க 

 <p align="center">   <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnHa22E2wGZK9SWch0TJyBCBZWj-ZUAButA94nXTqMUUlAyCqlzE_hiz5JplGMfdC9ftJu1HT0_wbQqlnFZZDOhwzjZJ0Sn8hmgctdCEQ0ZsY3bR7r6qpBzIWVEmE-kX8Pd788njM_iIOf/s1600/Greenshot_2012-06-25_20-55-00.jpg"/>   </p>

READ MORE



READ MOREREAD MORE
READ MORE   
READ MORE READ MORE

READ MORE
READ MOREREAD MORE
READ MOREREAD MORE
READ MORE
READ MOREREAD MORE
READ MORE  READ MOREREAD MORE
READ MORE
READ MORE



 உங்கள் பார்வைக்கு :



 

Sunday, June 24, 2012

முரசு டிவி -முரசு கொட்டியதா ?(MURASU TV)


MURASU TV,MURASU TV LOGO,முரசு டிவி
குடும்ப சண்டைகளால் தோன்றிய கலைஞர் டிவி தனது நெட்வொர்க்கில் முற்றிலும் பழைய பாடல்கள் படங்களுக்கான முரசு டிவியை கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3 அன்று ஆரம்பித்திருக்கிறது
  • சன்னின் அனைத்து தொலைக் காட்சிகளுக்கும்  போட்டியாக கலைஞர் நெட்வொர்க்கில் இருந்த போதிலும் இது சன்னில் இல்லாத ஓன்று .முற்றிலும் பழைய பாடல்களுக்கு என்று ஒரு தொலைக்காட்சி.
  • சோதனை ஒளிபரப்பில் உதய சூரியனை அப்படியே  தனது லோகோவை வைத்த முரசு டிவி சோதனை முடிந்ததும் கலைஞர் டிவி நெட்வொர்க் லோகோவிற்க்கு மாறி இருக்கிறது 
MURASU TV LOGO
  •   பழைய பாடல் விரும்பிகளுக்கு இந்த தொலைக்காட்சி ஒரு வர பிரசாதம்.முதியவர்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்காக  இருக்கும் என நினைக்கிறேன் 
  •  பழைய பாடல்கள் மட்டும் அல்லது தினமும் இரவு ஏழு மணிக்கு பல அரிய பழைய படங்கள் ஒளிபரப் பாகி  வருகிறது
சன்னில் இருந்து விரைவில் இதற்கு போட்டியாக ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படலாம்.அதுவரை தனிக்காட்டு ராஜா தான் முரசு டிவி



உங்கள் பார்வைக்கு :



திரட்டிகளுக்கான இலவச TOOLBAR VERSION 2

Saturday, June 23, 2012

திரட்டிகளுக்கான இலவச TOOLBAR VERSION 2

  •  பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமான காரியம் தான் .அதனை போக்க ALEXA  TOOLBAR  CREATOR மூலமாக TOOLBAR ஒன்றை கடந்த ஜனவரியில் உருவாக்கினேன்
  • தற்போது அந்த TOOLBAR  இன் புதிய பதிப்பை புதிய தோற்றத்துடன் புதிய வசதிகள் சிலவற்றை   இணைத்து வெளியிடுகிறேன் .தேவையான அன்பர்கள் தங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம் .
குறிப்பு :ஏற்கனவே இந்தTOOLBAR ஐ நிறுவியுள்ள அன்பர்கள் ஒருமுறை உங்கள் ப்ரௌசெரை CLOSE செய்து  திரும்ப OPEN  செய்தால் போதுமானது  .இந்த புதிய வசதிகள் உங்கள் TOOLBAR இல் இணைந்து விடும்.
  •  INTERNET EXPLORER FIREBOX  ,மற்றும் GOOGLE CHROME ப்ரௌசெர் களுக்கு  ஏற்றது. முந்தைய பதிப்பில் CHROME BROWSER சேர்க்க பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது
  • YOUTUBE ,
  • ONLINE இல் போட்டோக்களை EDIT செய்ய உதவும் போட்டோஷாப் தளமான PIXLR  மற்றும்
  • புதிய தமிழ் திரட்டியான TAMIL DAILY LIB ஆகியவை புதிதாக இணைக்க பட்டுள்ளன 
TOOLBAR-ன் சிறப்பு அம்சங்கள் 

TOOL BAR

  • ஏகப்பட்ட திரட்டிகளின் ஒட்டுபட்டைகளை  இணைத்துள்ள அன்பர்களின் தளங்கள்  லோட் ஆக  அதிக நேரம் எடுக்கும் .அதை தடுக்க  இந்த டூல்பாரை நிறுவலாம் .இதன் உதவியுடன் அனைத்து திரட்டிகளிலும்  தங்கள் பதிவை எளிதில் இணைக்கலாம்
  • பதிவர்களுக்கு  மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில்  FACEBOOK ,TWITTER,GOOGLE + போன்ற சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.
  • தமிழில்  டைப் செய்ய உதவும் GOOGLE TRANSLATE இணைப்பு தரப்பட்டுள்ளது 

    • நமது  தளத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் ALEXA தளமும் இணைக்கப்பட்டுள்ளது
    • கணினியில் நிறுவிய உடன் உங்கள் கணினியை RESTART செய்தால் TOOLBAR உங்கள் கணினியில்இணைந்திருக்கும்
    இதனை  உங்கள் கணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள்

    Get our toolbar!

    உங்கள் பார்வைக்கு :