Thursday, June 28, 2012

சகுனி (saguni) -கலைஞருக்கு குத்தோ குத்து வசனங்கள்

saguni stiils,karthi,
  •  இது ஆளும் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை இதுக்குலாம் நான் பயப்பட மாட்டேன் 
  • குண்டாந்தறிகள் தாக்கும் போதும் குண்டுகள் நெஞ்சை  துளைக்கும் போதும் தூக்கு கயிறு என்னை நெருக்கும் போதும் தமிழ் தமிழர்கள்  என்றே என் நெஞ்சம் கதறும்
  • வெளிய இருந்தா  போராட்டம் நடத்துவான் உள்ள இருந்தா ஏதாவது  புக் எழுதி படி படின்னு  உயிரை வாங்குவான்
  •  நமக்கு அரசியலே வராது புக் எதுக்கு!
  • பெருமை பட்டு வேட்டிக்கு ஆசை பட்டா  கோவணம் கூட மிஞ்சாது தலைவரே
  • தலைவன் ஜெயிக்கிறதுக்காக  தீக்குளிப்பேன். டீ குடிக்க காசு இருக்கா  நீயுலாம் தீக்குளிக்கிரத  பேச வந்துட்ட
  •  விலைவாசி உயர்வுக்கு நாம நடத்துன  போராட்டம் உலக தமிழர்களையே பேச வைச்சுருச்சு 
  • எப்ப  பாத்தாலும் விலை.உயர்வு  போராட்டம் நடத்திட்டு இவுங்க வந்தா குறைஞ்சுற போகுதா
  •  மேல்மட்டகுழு  கூட்டத்துல  நியாயமா  நீங்க பேசணும் இங்க அவுங்க பேசி சண்டை போட்டு கிட்டு  இருக்காங்க நீங்க பேசாம இருக்கீங்க  பேச விட்டுட்டு !அவன் மச்சினிக்கு சீட் கேக்கான் இவன் செட்அப் க்கு சீட் கேக்கான்  இன்னொருத்தன்  ஜாதி வைச்சு சீட் கேக்கான் 
  •  நீங்க வரணும்னு சொல்லுராறு  தலைவர் இல்லன்னா  தீவிர அரசியல்ல இருந்து விலகிக்கிறேன்னு சொல்றாரு
 மேற்கண்ட வசனங்களை படிக்கும் போது உங்களுக்கு கலைஞர் நியாபகம் வந்தால் வசன கர்த்தா மற்றும் இயக்குனரே பொறுப்பு .இது சகுனி பட வசனங்கள் .என்ன ஒரு குத்து !

இப்படி பல  குத்து குத்தி விட்டு கந்தா காரவட பாடலில் ஒரு நிமிடத்துக்கு மேலாக கலைஞர் எழுப்பிய  மருத்துவ மனையாக மாற உள்ள புதிய தலைமை செயலகத்தை காட்டுகிறார்கள்  குளிர வைக்கவா !

pranitha,saguni heroin


இது யாருக்குன்னு நீங்களே சொல்லுங்க 

நின்னா கமிஷன் உக்காந்தா கமிசன்  முன்னாடி 10 கார் பின்னாடி 10 கார் மக்களுக்கு ஏதாவது பண்ணியிருந்தா கொண்டாடி  இருப்பாங்களே தலைவரே!

வாக்காளர்களுக்கு:

பெருசா ஒட்டு போட்ட ஒட்டு போட்டனு புலம்புற சும்மாவா ஒட்டு போட்ட  காசு வாங்கல என்கிட்ட பேச தகுதியே இல்ல உங்களுக்கு 5 வருஷம் குத்தகைக்கு எடுத்துட்டேன் உங்கள!

 கதை :
பதிவர்கள் பலர் கதையை அலசி காய போட்டுவிட்டதால்   ஒரே லைனில் சொல்வதானால் இது ஒரு அரசியல் பொடிமாஸ் .ஊருக்கே  சோறு போட்ட குடும்பம் ரயில்வே பணிகளில் வீடு இடிபடுவதை தவிர்க்க அவுங்க வீட்டை காப்பாற்ற கார்த்தி சென்னை வந்து சகுனி வேலை  (?) செய்து வீட்டை எப்படி மீட்கிறார் என்பதே கதை

சகுனி பாடல்கள்
சகுனி  பாடல்களும் அதை தரவிறக்க இணைப்பும் கீழே உள்ள பதிவில் ..