Monday, January 31, 2011

தமிழா ! தமிழா !

மீன் பிடிக்க
சென்ற எம்
தமிழனை மீனவனை மீன்
போல கொத்தி சுருக்கு கயிறு
மாட்டி கொன்ற அற்ப பதர்களே !
எம் தமிழனை கொன்றால்
யார் கேட்பார் என நினைத்தீர்களா ?
உங்களை சொல்லி குற்றமில்லை

கடிதம் எழுதுவதும்
கட்டி அணைத்து
கண்ணீர் துடைப்பது போல
நடிப்பதும் மட்டுமே எங்கள்
அரசியலார்களின்
வேலை என்பதை
தெரிந்து இருக்கிறீர்கள்

தமிழன் கேவலபடுவதும்
தமிழ் கேவலபடுவதும்
எங்களுக்கு புதிதல்ல
என்று நினைத்தீரோ !

ஈழ தமிழனை சாக
விட்டு வேடிக்கை பார்த்த
இந்தியா அரசு இதிலும்
வேடிக்கை பார்க்கிறதே !

ஆஸ்திரேலியாவில்
சில மாணவர்கள் தாக்க பட்டதற்கே
துடிதுடித்தீரே நாங்களும்
இந்தியர் தானே பிறகேன் இப்படி?


(இந்த கவிதையை எழுத தூண்டிய அன்பர் செந்தழல் ரவிக்கு நன்றி ! மேலும் மீனவர் பிரச்சனை பற்றி அறிந்து கொள்ள கிளிக்குங்கள் )







Friday, January 28, 2011

Thursday, January 27, 2011

இது யாதெனில் ...
















இறக்கி வைக்க
முடிவதில்லை
இச் சுமையை...



எளிதில்
துறக்க முடிவதில்லை
இச் சுமையை ...

பத்து மாதத்தோடு
முடிவதில்லை இது
எதற்கும் பயன்படாது
என நினைதேன் -ஆனால்
பயன்படுகிறது என் குழந்தைக்கு
கார் ஓட்ட ..
என் தொந்தி ...

Saturday, January 22, 2011

மக்கள் சேவையில் நான் ..






(கடந்த டிசம்பர் 2010 பாரத ஸ்டேட் வங்கி (STATE BANK OF INDIA) திருச்சி கைலாசபுரம் கிளையில்  பணியில் நான் சேர்ந்த போது பயிற்சி மையத்தில் நான் வாசித்த கவிதை இது.. பாரத ஸ்டேட் வங்கி பற்றிய உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன .. )


கிளை
இல்லா
மரம் உண்டு
பாரத ஸ்டேட் வங்கி
கிளை இல்லா ஊர் உண்டா?

கடல் நடுவே காசில்லாமல்
கலங்கி நின்றாலும்
காப்பாற்றும் பாரத ஸ்டேட் வங்கி
ATM மூலம் ...


கல்வி நிலையம்
இல்லா ஊரிலும்
பாரத ஸ்டேட் வங்கி
ATM உண்டு ..

வாடிக்கையாளர்
திருப்தியே முதன்மையாய்
கொண்டதால் தான்
முதலிடம் பெற்றதா
இவ்வங்கி ?

இந்தியாவில் மட்டுமல்ல
உலகிலும் முதலிடம்
விரைவில் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
உங்கள் வாடிக்கையாளன்
இப்போது உங்கள் ஊழியனாய் ...

மாது விலைக்கு ...























கசக்கி எறியப்படும்
மலர்கள் நாங்கள்

சதைகளை தின்னும்
மனிதர்கள் போல்
எங்களையும் தின்பார்கள்
காம அரக்கர்கள்

எங்கள் அங்கங்கள்
அவர்களின் விளையாட்டு
மைதானங்கள் -விருப்பம்
போல் விளையாடுவர் நாங்கள்
விரும்பா விட்டாலும் ...

எங்களை நேசிப்பார் யாருமில்லை
பூஜிப்பார் யாருமில்லை
அவசர தேவைக்கு
விற்கப்படும் பொருள் நாங்கள் ...

நாங்களும் மாது தான்
ஆனால் விலைக்கு ...

Thursday, December 30, 2010

புது வருட சபதம் 2011


ஒவ்வொரு புது வருடம்
பிறக்கும் போதும்
ஆவேசமாய் பல சபதம்
ஏற்பர் பெரும்பாலானோர் ...
நடந்தது என்ன ?

சபதங்களுள்
ஒன்றையாவது நம்மால்
செய்ய முடிகிறதா ?முடிந்தால் சரி

இல்லையெனில்
இந்த புது வருடத்திலும்
அதே சபதத்தை
சற்று மாற்றத்தோடு
மீண்டும் நினைக்க போகிறோம்

சபதங்கள் வீணல்ல
அதை அடைய நாம்
முயலாததே அதை
வீணாக்குகிறது

Monday, December 27, 2010

கை விடாதீர்


எமக்காய் எவ்வளவோ

செய்தீர் செய்கிறிரீர் செய்வீர்

உமக்காய் நான் என்ன

செய்தேன்? ஒன்றுமில்லை


உன் ஆலயம் வர

என்னால் முடியாமல்

போனது ஏன் ?

சோம்பலா? நேரம் இல்லாமையா?

அறியாமையா? எக்காரணம்

கொண்டும் என்னை நியாய படுத்த

முடியாது -நீர் என்னை தவிர்க்கவா

செய்தீர் நான் உம்மை தரிசிக்க

வராததற்கு..


இனியாவது உம்மை பின் தொடர

முயல்கிறேன் முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் நான் உம் பிள்ளை!

Sunday, December 19, 2010

தனிமை


















தனிமை
சிலருக்கு இது கசக்கும்
சிலருக்கு இது பிடிக்கும்

கவிஞனின் கவிதைகளுக்கு
ஏற்ற இடம் இது
தீயவை நடக்க சிலருக்கு
வாய்ப்பாகும் இது

தனிமையில் நமக்கு
என்ன எண்ணம் தோன்றுகிறதோ
அதுவே நம் வாழ்க்கையை
தீர்மானிக்கிறது

தனிமை கொடுமை பலருக்கு
ஆனாலும் தனிமை இனிமை எனக்கு
கவிகள் கிடைப்பதால் ...

அது மட்டும் இல்லை எனில் ?























 ஆண் என்ற அகங்காரம்
சிறிதாவது இருக்கும்
ஆண்கள் அனைவருக்கும்
அடி மனதில் ...

என்ன நாம் அப்படி உயர்ந்து
விட்டோம்? திண் தோள்களும்
உடல் வலிமையையும் தவிர ..

நமக்குள் ஓர் உயிரை
சுமக்க முடியுமா
தாய் என்ற தவச் சொல்
நமக்கு கிடைக்குமா ?

நமக்கு ஒரே பெருமை
பெண்ணுக்கு தாய்மையை
தருவது மட்டும் தான்
அதுவும் நாளைய உலகில்
இல்லாமல்போகலாம்
அப்போது நமக்கு என்ன பெருமை?

Thursday, December 9, 2010

காவலன் பாடல்கள்
















 மொத்தம் ஐந்து பாடல்கள்
மெல்லிசை பாடல்கள் இரண்டு
அறிமுக குத்து பாடல் ஓன்று
ராப் பாடல் ஓன்று
இன்னொரு குத்து பாடல் என
விஜய் பட பாடல்கள் அமைப்பு
இதிலும் காணப்படுகிறது

ஆச்சர்ய அதிசயமாக
நாயகியை தேடி காதல் செய்யும்
பாடல்கள் இரண்டு உண்டு இதில்
முந்தைய படங்களில்
நாயகி தான் விஜயை
காதல் செய்வது போல் இருக்கும்

"விண்ணை காப்பான் ஒருவன்" பாடல்
விஜயின் அறிமுக பாடல்
"யாரது" பாடல் கார்த்திக்கின்
குரலில் காதலியை தேடும் பாடல்
மெலிதாய் இனிக்கிறது

பட்டாம்பூச்சி பாடலில் கே.கே மற்றும்
ரீட்டா குரலில் மயக்குகிறது
"சட சட" என்ற பாடலில்
பட பட என பாடியிருக்கிறார்
கார்த்திக்

"ஸ்டெப் ஸ்டெப் "பாடல் ராப்
ரகம் குதிக்க வைக்கும் பாடல்
மொத்தத்தில் விஜய் படத்திற்கே
உண்டான பாடல்கள்
இந்த முறை மெலோடியயும்
இணைத்திருக்கிறார் இசை வித்தியாசாகர் என்பதால் ...
(பாடல்கள் கேக்க)
click here