Saturday, May 26, 2012

விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்தது சென்னை

விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது சென்னை.

சென்னையின்  இமாலய வெற்றி இலக்கான 223 ரன் இலக்கை  துரத்த முடியாமல் 136 ரன்களுக்குள் சுருண்டது டெல்லி



போட்டியின் சில சுவாரசியங்கள் :

  • இரு சதங்கள் IPL இல் கண்ட முதல் இந்தியன் என்ற பெயரை பெற்றார் முரளி விஜய்
  • 13 போட்டிகளில் விளையாடி 294 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் .இந்த சதமே அவரது சிறப்பான ஆட்டம் இந்த IPL இல் ,113(58)
  • அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்
  • இந்த  IPL 5 இன் அதிக பட்ச ஸ்கோர் இன்றைய 222 ரன்கள் தான் .
  • டெல்லியில் ஜெயவர்த்தனே மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார் 55(38)
  • ஷேவாக் 1 ரன்களுடன் வெளியேறினார் 

லீக் போட்டிகளில் முதல் இடத்தில்  இருந்த டெல்லியை இறுதி இடத்தில் இருந்த சென்னை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது கொல்கத்தாவுடன் விளையாட ..

உங்கள் பார்வைக்கு :

 

பில்லா -2 (BILLA-2) பாடல்கள் ஓர் அலசல்


Thursday, May 24, 2012

மும்பையை முடக்கியது சென்னை

நேற்று  நடந்த PLAYOFF ELIMINATOR போட்டியில் மும்பையை எளிதாக வீழ்த்தி முடக்கியது சென்னை .வரும் வெள்ளி அன்று இறுதி போட்டிக்கான தகுதி போட்டிக்கு டெல்லியுடன் விளையாடுகிறது சென்னை .



போட்டியின் சில சுவராசியங்கள்

  • ஆரம்பத்தில் படுமந்தமாக விளையாடினாலும் தோனியின் இறுதி கட்ட அதிரடியால் 188 ரன்கள் வெற்றி இலக்காக நியமித்தது சென்னை 
  • மும்பை அணியால் 149 ரன்களையே எடுக்க முடிந்தது .38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது மும்பை
  • சென்னையின் டோனி -பிராவோ  இணை 29 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது 
  • பிராவோ  14 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார்


  • இந்த IPL இல் தோனி யின் முதல் அரை சதம் இந்த போட்டியில் தான் 51*(20)
  • சச்சின் 11 ரன்களை மட்டுமே எடுத்தார் 
  • மும்பையின் ஸ்மித் மட்டும் 38 ரன்கள் எடுத்தார்
இதன் மூலம் இறுதி போட்டியில் விளையாடுவதற்கான தகுதி போட்டியில் டெல்லியுடன்  மோதுகிறது சென்னை .இதில் வெற்றி பெறும் அணி கொல்கத்தாவை இறுதி போட்டியில் சந்திக்கும் .





உங்கள்  பார்வைக்கு :
 


Monday, May 21, 2012

அதிர்ஷ்டத்தில் நுழைந்தது சென்னை PLAYOFFக்கு..

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சென்னை பக்கம் தோனி பக்கம் உண்டு IPL இல் ..அது இந்த முறையும் நடந்து விட்டது .PLAYOFF இல் நுழையுமா இல்லையா என்ற கேள்விக்கு பெங்களூர் டெக்கானிடம்   தோற்றதும்  விடை கிடைத்து விட்டது 
IPL 5 DHONI,CHENNAI SUPER KINGS



  • டெக்கானின் 133 ரன்  இலக்கை துரத்த முடியாமல் தோற்றது ஆச்சர்யம் தான் .கெயில் இன்னும் கொஞ்சம் நின்றிருந்தால் வெற்றி பெற்று இருக்கும் 10 பந்துகளுக்கு 27 ரன்களுடன் வெளியேறினார்.
  • கோலி 42, திவாரி 30 எடுத்தும் பின்னர் வந்த வீரர்களின் ஆட்டத்தால் இலக்கை துரத்த முடியாமல் சென்னை அணிக்கு வழிவிட்டு விலகியது பெங்களூர் .
  • முன்னதாக டெக்கானின் டும்னி இல்லையேல் டெக்கான்  இதைவிட குறைவான இலக்கையே நிர்ணயத்திருக்கும்74(53)
  • முதல் மூன்று இடங்களுக்கு போட்டி அவ்வளவாக இல்லை நான்காவது இடத்துக்கு மல்லுக்கட்டிய அணிகளில் கடைசியில் டெக்கானின் புண்ணியத்தால் சென்னை PLAYOFF க்கு நுழைந்து  இருக்கிறது .
  • 8 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை ,பெங்களூர் ,பஞ்சாப் அணிகளில்  NET RUN RATE +0.100 ஆக இருப்பதால் அதிர்ஷ்டத்தில் சென்னை PLAYOFF இல் நுழைந்து விட்டது .மற்ற இரு அணிகளின் ரன் ரேட் - இல் ..

இறுதிகட்ட புள்ளி நிலவரம் கீழே 

IPL 5 STANDINGS


PLAYOFF போட்டிகள் விவரம் கீழே 

IPL 5 PLAYOFF MATCHES


மும்பை யை சென்னை Eliminator சுற்றில் சந்திக்கிறது .இதில் தோற்கும் அணி இறுதி போட்டியில்  ஆட முடியாது .வெற்றி பெறும் அணி இன்னொரு போட்டியில் விளையாடி இறுதி போட்டியில் சந்திக்கும்  

உங்கள்  பார்வைக்கு :


Saturday, May 12, 2012

தாதா இனி IPL கோதாவில் இல்லை !

கொல்கத்தா தாதா என அழைக்கப்படும் சௌரவ் கங்குலி நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்க படவில்லை ,இனி வரும் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு IPL போட்டியிலும்  புனே அணிக்கு கங்குலி இல்லை என புனே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

நேற்றை போட்டி வரை அந்த அணி 8  வது இடத்தில்  உள்ளது .இதனால் கடுப்படைந்த புனே அணி நிர்வாகம் அவருக்கு கட்டாய ஒய்வு கொடுத்துள்ளது

கங்குலி ,புனே

கங்குலி இந்த IPL இல் விளையாடிய விதம் கீழே

  • 13 போட்டிகளில் விளையாடி உள்ள கங்குலி 261 ரன்கள் எடுத்துள்ளார் .அதிக பட்சம் 45. 
  • ஒரு அரை சதமும் காணவில்லை
  • 13 போட்டிகளில் விளையாடி 8 ஓவர்கள் மட்டுமே பந்து  வீசி உள்ளார் .2 விக்கெட்  மட்டுமே எடுத்துள்ளார்
  • தொடக்க போட்டிகளில் சிறப்பாக வழிநடத்திய கங்குலி தொடர்ந்து போட்டிகளில் தோல்வி கண்டதால் ஆட்டம் கண்டுள்ளார் 

தோனியை இழுத்த கங்குலி

  • தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு ஏற்க முடியாது.அணியில் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வில்லை .
  • கடந்த உலக கோப்பையில் டோனி கடைசி வரை பார்மில் இல்லை .இருப்பினும் மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தான்  கோப்பை வெல்ல முடிந்தது என்றார் .
  • IPL 5 முடியும் வரை நான் தான் அணி தலைவனாக தொடர்வேன் என நகைச்சுவை செய்துள்ளார்  அவரை நீக்கிய பிறகு ,,
எது எப்படியோ கண்களை பிதுக்கி கொண்டு மைதானத்தில் அவர் ஆடும் அழகை  இனி ரசிக்க முடியாது IPL இல் .தாதா இனி IPL கோதாவில் இல்லை ..


உங்கள்  பார்வைக்கு :

Saturday, May 5, 2012

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி -கார்த்தி உடன்..

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி யின் டி ஆர் பி சற்று குறைந்ததும் நட்சத்திரங்களை காட்டி எகிற வைக்கும் விஜய் டிவியின் தந்திரம் பலிக்கவே செய்கிறது .

ஸ்ருதிஹாசன் ,விஜய் டிவி பிரபலங்கள் ,அஸ்வின் ஆகியோரை தொடர்ந்து  சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி யை வைத்து இந்த வாரம் நிகழ்ச்சி நடத்தினர்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ,கார்த்தி



அந்த நிகழ்ச்சியின் சில ரசனை தொகுப்புகள் 

  • வார  இறுதியில்( வியாழன்)  போடுவதற்கு கடந்த ஞாயிறு முதலே விளம்பரபடுத்தி வந்தனர் .
  •  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடித்து கொண்டே வந்தார் கார்த்தி
  • கார்த்தி  பேசுகையில் கார்த்தி இந்நிகழ்ச்சியை  நடத்தினால் எப்படி இருக்கும் என எனக்கு தோன்றியது அவ்வளவு கலகலப்பாக பேசினார்
  • கார்த்தி வெற்றி பெரும் தொகை உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஒரு அமைப்பிற்கு கொடுக்க படுவதாக கூறப்பட்டது
  • சூர்யா  கார்த்தியின் சிறு வயது சேட்டைகளை கார்த்தி விவரித்தார்
  • ரஜினியின் ரசிகர் என்று சொல்லி கொண்ட கார்த்தி சிறுவயதில் பில்லா பட பாடலுக்கு ரஜினி மாதிரியே  வீட்டில் ஆடியதாக தெரிவித்தார்
  • இந்த  நிகழ்ச்சியின் தொடர்ச்சி வரும் திங்கள் அன்று இரவு 9மணிக்கு தொடர்கிறது
  • வரும் திங்கள் முதல் இரவு 9  மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது . முன்பு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகியது .
நிகழ்ச்சியை பார்க்காத அன்பர்களுக்காக கீழே:





உங்கள்  பார்வைக்கு :

Friday, May 4, 2012

பில்லா -2 (BILLA-2) பாடல்கள் ஓர் அலசல்(பாடல் இணைப்புடன். )

பில்லா-2 பாடல்கள் பற்றியும் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் கீழே .மொத்தம் 6 பாடல்கள் ,1 மெலடி ,2 THEME மியூசிக் பாடல்கள் ,3 CLUB பாடல்கள் என கலவையாக பில்லா -2 பாடல்கள்

BILLA-2 ,AJITH


GANGSTER

பில்லா  புகழ் பாடும் பாடல்

"DON DON DON மிரளும் DON DON டானுக்கெல்லாம் டான் இந்த பில்லா  தான் 
,DON DON DON அதிரும் DON DON சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான் ""

எமனுக்கே  தெரியாமல் பயம் காட்டுவான் 

--போன்ற வரிகள் அஜித் ரசிகர்களை குஷிபடுத்தும்

பில்லா தீம் MUSIC இந்த பாடலில் வருகிறது 

பாடல்  கேட்க
 
BILLA  தீம் MUSIC 

பழைய BILLA பாடல் இசையை சற்று மெருகேற்றி தந்துள்ளனர் ரசிக்கலாம்

பாடல்  கேட்க 

இதயம் இந்த இதயம் ...

அருமையான மெலடி .குரல் மயக்குகிறது ,இதயத்தை பற்றி புட்டு புட்டு வைக்கிறார் பாடல் ஆசிரியர்

BILLA-2  HEROIN

பாடலில் நான்  ரசித்த வரிகள்

"ஆசை தூண்டிலில் மாட்டி கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே !" "

"வேண்டும் வேண்டும் என்று கேக்கையிலே
வேண்டாம்  வேண்டாம் என்று சொல்லுமே !
வேண்டாம்  வேண்டாம் என்று சொல்கையிலே 
வேண்டும் வேண்டும் என துள்ளுமே"

 

பாடல்  கேட்க


மதுரை பொண்ணு எதிரில் நின்னு ..

பில்லா வில் நமீதா பாடும் பாடல் போல இது .ஒரே ஒரு வித்தியாசம் கிராமத்து வாசனை பாடல்  வரிகளில் ..

உன்  காதல் இங்கு செல்லாதாடா 
உன் காசு அது  மட்டும்  செல்லுமடா

இந்த வரிகளே இப்பாடல் எப்படி என சொல்லிவிடும்

பாடல்  கேட்க 

ஏதோ ஏதோ ..

BILLA-2  AJITH

இதுவும் முந்தைய பாடல் போல தான் .கிளப் களில் நடப்பது போன்று யூகிக்க முடிகிறது

பாடல்  கேட்க 

உனக்குள்ளே மிருகம் ..

கொஞ்சம் உரக்கவே பாடுகிறார் பாடகர் .பில்லா தீம் MUSIC இந்த பாடலின் இடையில் தான் வருகிறது

பாடல்  கேட்க


உங்கள் பார்வைக்கு :

Saturday, April 28, 2012

புதுமையான RELATED POSTS WIDGET

LINKWITHIN- RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது
RELATED POSTS WIDGET
  

இணைக்கும்  முறை :
  • முதலில்இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .SITES -ADD கிளிக் செய்து உங்கள் தளத்தை இணையுங்கள்
    • பின்னர் அங்கு இருக்கும் widget  என்ற இடத்தில் add  தேர்வு செய்யுங்கள் 
    .உங்களுக்கு கீழே உள்ளதை போன்ற SCREEN வரும் 
    RELATED POSTS WIDGET
    • அதில் WIDGET SIZE எத்தனை படங்கள் வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள் 
    • IMAGE SIZE என்ற இடத்தில் DRAG செய்து உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற THUMBANIL SIZE வைத்து கொள்ளலாம் 
    • TEMPLATE CLICK  செய்து உங்களுக்கு விருப்பமான TEMPLATE தேர்ந்தெடுங்கள் PREVIEW பார்த்து கொள்ளுங்கள் APPLY செய்து ..
      • OPEN IN A NEW WINDOW CLICK செய்து  GENERATE கொடுத்தால் SHOW ADVANCED OPTIONS என்று வரும் .அதை கிளிக் செய்து ROTAION TYPE என்ற இடத்தில் CURRENT SITE POSTS தேர்வு செய்தால் தங்களுடைய தற்போதைய பதிவுகளை மட்டும் காட்டும் .
      • ALL MY POSTS தேர்வு செய்தால் தங்களுடைய அனைத்து பதிவுகளையும்  காட்டும்.உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்
      • பின்பு APPLY செய்யவும் PREVIEW பார்த்து கொள்ளுங்கள்.
      • பின்பு வலது புறத்தில் உள்ள WIDGET CODE இல்  BLOGGER தேர்வு செய்த உடன் கீழே இருப்பதை போன்ற SCREEN வரும் .முகப்பு பக்கத்தின் அனைத்து பதிவுகளிலும் கீழே வர வேண்டுமென்றால் ADD WIDGET தேர்வு செய்யலாம் .
      WIDGET மாதிரி :
      RELATED POSTS WIDGET WITH THUMBANILS


         முகப்பு (HOME) பக்கத்தில் பதிவில் மட்டும் வரவைக்க :

        இப்போது இணைந்துள்ள இந்த WIDGET அனைத்து பதிவுகளின் கீழும் இருக்கும் ,முகப்பு பக்கத்தில் மட்டும் வரவைக்க கீழே  உள்ளதை  பின்பற்றுங்கள்

        ADD WIDGET  தேர்வு செய்யாமல் EDIT TEMPLATE தேர்வு செய்யவும்



        இப்போது  அங்குள்ள கோடிங்கை நீக்கி விட்டு இப்படத்தில் கீழே உள்ள கோடிங்கை இணைக்கவும்

        சுட்டி காட்டப்பட்டுள்ள கோடிங்கை நீக்கி கீழே உள்ள கோடிங்கை PASTE  செய்யவும் .இறுதியாக ADD WIDGET தேர்வு செய்யவும்


        <b:includable id='main'><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'><data:content/></b:if></b:includable>


        இனி இந்த WIDGET உங்கள் முகப்பு பக்கத்தில் மட்டுமே தெரியும் .உங்கள் தளம் அதிக நேரம் லோட் ஆவதை தடுக்கலாம் .

        -இது ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்ட மீள் பதிவு





          Monday, April 23, 2012

          பதிவர்களுக்கு தேவையான TOOLBAR

          ALEXA TOOLBAR,திரட்டிகள்

           பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமான காரியம் தான் .அதனை போக்க ALEXA  TOOLBAR  CREATOR மூலமாக TOOLBAR ஒன்றை கடந்த ஜனவரியில் உருவாக்கினேன்.( பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக )

          தற்போது அந்த TOOLBAR  இல் சில புதிய வசதிகளை தமிழில் டைப் செய்ய உதவும் GOOGLE TRANSLATE ,மற்றும்  நமது தளத்தின் தரத்தை  நிர்ணயிக்கும்  ALEXA தளத்தின் இணைப்பும்  இணைத்து வெளியிடுகிறேன் .தேவையான அன்பர்கள் தங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம் .




          குறிப்பு :ஏற்கனவே இந்தTOOLBAR ஐ நிறுவியுள்ள அன்பர்கள் ஒருமுறை உங்கள் கணினியை RESTART செய்தால் போதுமானது.இந்த புதிய வசதிகள் உங்கள் TOOLBAR இல் இணைந்து விடும்.
          TOOLBAR PREVIEW,மாதிரி

          TOOLBAR-ன் சிறப்பு அம்சங்கள்

          • ஏகப்பட்ட திரட்டிகளின் ஒட்டுபட்டைகளை  இணைத்துள்ள அன்பர்களின் தளங்கள்  லோட் ஆக  அதிக நேரம் எடுக்கும் .அதை தடுக்க  இந்த டூல்பாரை நிறுவலாம் .இதன் உதவியுடன் அனைத்து திரட்டிகளிலும்  தங்கள் பதிவை எளிதில் இணைக்கலாம்
          •  எனது  படைப்பான இந்த TOOLBAR இல் தமிழின் முதன்மை திரட்டிகளான இன்ட்லி ,தமிழ் மணம் ,தமிழ் 10,யு டான்ஸ் ,உலவு மற்றும் இனிய தமிழ் திரட்டிகளுக்கான இணைப்பு தரப்பட்டுள்ளது.ஒரே கிளிக்கில் உங்கள் பதிவை இணைக்கலாம்
          • பதிவர்களுக்கு  மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில்  FACEBOOK ,TWITTER,GOOGLE + போன்ற சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.
          • மின்னஞ்சல் தரும் GMAIL,YAHOO MAIL இணைப்பும் தரப்பட்டுள்ளது
          • நமது  தளத்தை ஆய்வு செய்யும் GOOGLE ANALYTICS,GOOGLE WEBMASTER TOOLS இணைப்பும் தரப்பட்டுள்ளது
          • GOOGLE SEARCH இணைப்பும் தரப்பட்டுள்ளது 
          • தமிழில்  டைப் செய்ய உதவும் GOOGLE TRANSLATE இணைப்பு தரப்பட்டுள்ளது 
          • நமது  தளத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் ALEXA தளமும் இணைக்கப்பட்டுள்ளது

          •  .INTERNET EXPLORER மற்றும்  FIREBOX BROWSER களுக்கு ஏற்றது.அதில் மட்டுமே நிறுவ முடியும் 
          • கணினியில் நிறுவிய உடன் உங்கள் கணினியை RESTART செய்தால் TOOLBAR உங்கள் கணினியில்இணைந்திருக்கும்
          ALEXA TOOLBAR,திரட்டிகள்

          இதனை  உங்கள் கணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள்


          Get our toolbar!


          உங்கள் பார்வைக்கு:

          Friday, April 20, 2012

          ஒரு கல் ஒரு கண்ணாடி-OK OK

          நீண்ட நாட்களுக்கு பிறகு நக்கலும் நையாண்டியும் நகைச்சுவை ததும்ப ஓர் படம்.கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன் .

          கதை

          காவல் துறை அதிகாரி மகளை கைபிடிக்க நாயகன் நடத்தும் போராட்டம் தான் கதை .பல தமிழ் படங்களின் கதை தான் ஆனாலும் சந்தானத்தின் நகைச்சுவை சரவெடிகளால் ரசிக்க முடிகிறது .சந்தானம் இல்லையென்றால் ?

          ORU KAL ORU KANNADI.OK OK




          எனக்கு பிடித்த காட்சிகள்

          • உதய நிதி ஸ்டாலின் அறிமுக நாயகனாக அவருடைய முதல் காட்சியில் கொரியரில் வரும் திருமண அழைப்பிதழை கண்டு அதிர்ச்சி ஆவதை பார்க்கும் போது நமக்கும்  அதிர்ச்சியாகிறது !எப்படி மீதி படத்தை பார்ப்பது என்று ?அப்படி ஒரு முக பாவனை! ஆனாலும் பிந்தைய காட்சிகளில் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
          • விமானத்தில் ஒரு காட்சி வருகிறது .உதயநிதியும் சந்தானமும் ஹன்சிகாவை போட்டு கலாய்த்து  எடுக்கும் காட்சி அருமை
          • இயக்குனரின் பார்முலா படி கௌரவ வேடத்தில் ஆர்யா ,சிநேகா ,ஆண்ட்ரியா 
          ORU KAL ORU KANNADI .OK OK

          • உதய நிதி அம்மாவாக சரண்யா .ஹீரோ படித்த காலம் போய் அவரது அம்மா படிக்கும் காலம் போல ,சரண்யா டிகிரி தேர்ச்சி பெறாததால் பேசமால் இருக்கும் உதயநிதி அப்பா என பல புதுமைகள் 
          • எங்கேயும் எப்போதும் படத்தில் சிரிக்கிறாரா அழுகிறாரா என தேடிய ஹன்சிகா இந்த படத்தில் சிறப்பாகவே செய்திருக்கிறார் .சரண்யா ஹன்சிகாவிடம் எனக்கு கோபம்  வராது  வந்துச்சுனா என்று கூறும் போது  ஹன்சிகா வந்துச்சுனா என இழுக்கும் போது முக பாவனை அழகு 
          • ஹன்சிகாவிற்கு அவரது அப்பா பார்த்த மாப்பிள்ளை ஹண்சிகாவை கலாய்த்து எடுக்கும் போது சந்தோசப்படும் உதயநிதி வெளியில் வந்து தனுஷ் போல குத்தாட்டம் போடுவது சற்று மிகை தான் 
          ORU KAL ORU KANNADI,OK OK

          • வேணாம் மச்சான் வேணாம் பாடலில் சிறிய நடன  அசைவுகள் என்றாலும் சிறப்பு 
          •  மொத்தத்தில் நம் கவலை மறந்து களிப்பாய்  3 மணி நேரம் இருக்க இப்படம் பார்க்கலாம் 

           கேளிக்கை விடுதியில் வைத்து திருமணம் நடப்பதாக காட்டும்  3 படத்திற்கு வரி விலக்கு அளிக்க படுகிறது எங்களுக்கு இல்லையா என சமீபத்தில் புலம்பி தள்ளியிருக்கிறார் உதய நிதி .அவரது புலம்பல் நியாயம் தான் அரசியல் வாரிசு ஆச்சே !








          உங்கள் பார்வைக்கு :


          Tuesday, April 17, 2012

          தமிழ்--கையெழுத்து நம் பதிவுகளின் முடிவில் வர வைக்க !

          பல  தளங்களில் பதிவுகளின் முடிவில் பதிவிட்டவரின் கையெழுத்து  இடம் பெற்றிருப்பதை கண்டு இருப்பீர்கள்.

          அதற்கு பல ஆங்கில தளங்கள் இருக்கின்றன .ஆனால் அவை ஒன்றில் கூட தமிழ் மொழியை தனது கையெழுத்து உருவாக்கியில் இணைக்க வில்லை.

          டைப் செய்தால் கட்டம் கட்டமாக வரும் .இதனை போக்க நாம் எளிதாக தமிழில் நம் கையெழுத்தை உருவாக்கலாம்.


          இது  எப்படி இருக்கும் காண  கீழே கிளிக்குங்கள்


          மாதிரி ,DEMO

          செய்ய வேண்டியது :
          • முதலில் OFFLINE ல்லும் இயங்க கூடிய GOOGLE தமிழ் தட்டச்சு மென்பொருளை தரவிறக்குங்கள் .மேலதிக தகவலுக்கு தமிழில் டைப் செய்ய 
          • பின்னர்  நமது கணினியை ஸ்க்ரீன் சாட் எடுக்க உதவும் மென்பொருள் உங்கள் கணினியில் இல்லையென்றால் தரவிறக்கி கொள்ளவும்  GREENSHOT
          • பின்னர் நமதுகணினியில் MICROSOFT WORD  யை OPEN செய்து INSERT>WORD ART கிளிக் செய்து YOUR TEXT HERE எனும் இடத்தில் GOOGLE தமிழ் தட்டச்சு மூலமாக உங்கள் பெயரை இடுங்கள் .உங்களுக்கு பிடித்த DESIGN தேர்வு செய்யுங்கள் .(போட்டோ ஷாப் மூலமாகவும் டிசைன் செய்யலாம் )
          • அடுத்து GREENSHOT மென்பொருளில் RIGHT CLICK செய்து CAPTURE FULL SCREEN என்பதை தேர்வு செய்யவும் .இப்போது உங்கள் கையெழுத்தை CROP செய்து படமாக சேமித்து கொள்ளுங்கள் .
          • இனி ஒவ்வொரு பதிவிடும் போதும் பதிவின் முடிவில் உங்கள் தமிழ் கையெழுத்து படத்தையும் சேர்க்கலாம்

          • கையெழுத்து DEFAULT ஆக உங்கள் பதிவில் இணைய Settings  ›  Posts and comments>POST TEMPLATE இல் ADD கிளிக் செய்து நீங்கள் உருவாக்கிய கையெழுத்து படத்தின் முகவரியை பேஸ்ட் செய்யுங்கள் (படத்தின் மீது RIGHT CLICK செய்து COPY IMAGE LOCATION என்பதை தேர்வு செய்யவும் )  
          • GOOGLE SEARCH இல் தமிழ் என டைப் செய்தால் ஆபாச தளங்களின் சுட்டிகள் அதிகம் காணப்படுகிறது.அதை களைய தமிழ் என தலைப்பிட்டு பல பதிவுகள் வர வேண்டும் என்ற பிளாக்கர் நண்பன் தளத்தின் உரிமையாளர் கருத்தை முழுவதுமாக ஏற்று இப்பதிவு இடப்பட்டுள்ளது . 

          WORD ART மூலமாக உருவாக்கும் எளிதான இம்முறை பலருக்கு தெரிந்திருக்கும் .தெரியாத அன்பர்களுக்காக இப்பதிவு ..
           
           தமிழ் பற்றிய எனது மற்றுமொரு பதிவு 
          தமிழ் கையெழுத்து