Wednesday, December 28, 2011

நண்பன் -பாடல்கள் ஓர் அலசல்

விஜய் ரசிகர்கள் விரும்பும் அடிதடி குத்து பாடல்கள் இல்லை.ஓபனிங் பாடல் ,தத்துவ பாடல் இல்லை ,மெல்லிசை பாடல்களில் மனதை மயக்கி இருக்கிறார் ஹாரிஸ்.

அடிதடி குத்து பாடல் விரும்பும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான் ..மொத்தம் 6 பாடல்கள் .சில குத்து பாடலாய்  தோன்றினாலும் அதிலும் மெல்லிசை இருக்கிறது .


அஸ்கு லஸ்கா

காதலை  பல மொழிகளில் சொல்லி ஆரம்பிக்கும் பாடல் அருமையான மெலடி.மதன் கார்க்கியின் அசத்தும் வரிகள் பாடலுக்கு பலம்

பாடலில் நான் ரசித்த வரிகள் 

"ப்ளூட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொருக்கி சூடேற்றுவேன் "

"வைரஸ்  இல்லா கணினி நீ
உன் உள்ளம்  வெள்ளை "

"முக்கோணங்கள் படித்தேன்
உன் மூக்கின் மேலே!"



 என் ஃப்ரெண்ட  போல 


சென்னை  சூப்பர் கிங்க்ஸ்ஸின் தொடக்க இசையை ஞாபகபடுத்துகிறது
இதன் தொடக்க இசை .நட்பை  போற்றும் பாடல் .ஜீவாவும் ஸ்ரீகாந்தும் விஜயை  போற்றி பாடுவார்கள் என நினைக்கிறேன் (ஒபெனிங் பாட்டோ )






எந்தன் கண் முன்னே !


சோகத்தை  சொல்லும் அருமையான மெலடி .

பாடலில் நான் ரசித்த வரிகள் 

"யாரும் பார்க்காத விண்மீனாய் நான் ஆனேனே !"

"இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா  இதையா எதிர்பார்த்தேன் "

"கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா !"




ஹார்ட்டிலே பேட்டரி ..

ALL IS  WELL  என்று எல்லாம் நன்மைக்கே என்று இருக்க சொல்கிறது இப்பாடல்

பாடலில் நான் ரசித்த வரிகள்

ஜோக்கர்  என்பதால் ஜீரோ இல்லை ALL IS  WELL   சீட்டுக்கட்டிலே நீ தான் ஹீரோ

தோல்வியா டென்ஷனா சொல்லிடு ALL IS  WELL






இருக்கானா இடுப்பிருக்கானா 


இலியானாவின் இடுப்பை பற்றி அதிகம் பேசுகிறது இப்பாடல்







நல்ல நண்பன் 

மெல்லிய சோகம் வழிந்தோடும் அருமையான சோக பாடல்

பாடலில் நான் ரசித்த வரிகள்

"உன் நினைவின் தாழ்வாரத்தில் என் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா !"