Sunday, March 25, 2018
Monday, March 5, 2018
பிடர்கொண்ட சிங்கமே பேசு -வைரமுத்து கவிதை
Posted by Prem S On Monday, March 05, 2018
கலைஞரின் ஆஸ்தான கவிஞர் கலைஞர் பேச வேண்டும் என்பதற்காக எழுதிய கவிதை அவர் முன்னாலேயே வைரமுத்துவின் கணீர் குரலில் படிக்க பட்டு வீடியோ ஆக்க பட்டு இருக்கிறது .முதுமையின் முன் கலைஞர் இருப்பதை பார்க்க முடியாதோர் வீடியோ தவிருங்கள்
பிடர்கொண்ட சிங்கமே பேசு * இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும் படர்கின்ற பழைமை வாதம் பசையற்றுப் போவதற்கும் சுடர்கொண்ட தமிழைக் கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்கப் பிடர்கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய்திறந்து * யாதொன்றும் கேட்க மாட்டேன் யாழிசை கேட்க மாட்டேன் வேதங்கள் கேட்க மாட்டேன் வேய்ங்குழல் கேட்க மாட்டேன் தீதொன்று தமிழுக் கென்றால் தீக்கனல் போலெழும்பும் கோதற்ற கலைஞரே நின் குரல்மட்டும் கேட்க வேண்டும் * இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும் படர்கின்ற பழைமை வாதம் பசையற்றுப் போவதற்கும் சுடர்கொண்ட தமிழைக் கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்கப் பிடர்கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய்திறந்து
Sunday, March 4, 2018
Friday, March 2, 2018
காலா டீசர் எப்படி ? ஓர் பார்வை
Posted by Prem S On Friday, March 02, 2018
Subscribe to:
Posts (Atom)