Friday, October 14, 2011

விலை மாது


கசக்கி எறியப்படும்
மலர்கள் நாங்கள்

சதைகளை தின்னும்
விலங்குகள்  போல்
எங்களையும் தின்பார்கள்
காம அரக்கர்கள்

எங்கள் அங்கங்கள்
அவர்களின் விளையாட்டு
மைதானங்கள் -விருப்பம்
போல் விளையாடுவர் நாங்கள்
விரும்பா விட்டாலும் ...

எங்களை நேசிப்பார் யாருமில்லை
பூஜிப்பார் யாருமில்லை
அவசர தேவைக்கு
விற்கப்படும் பொருள் நாங்கள் ...

நாங்களும் மாது தான்
ஆனால் விலைக்கு ...

Monday, October 3, 2011

LINKWITHIN விட்ஜெட்க்கு மாற்றாக புதிய RELATED POSTS விட்ஜெட்

LINKWITHIN RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது .

இதன் சிறப்பம்சங்கள்  

*THUMBANIL SIZE நமது விருப்பபடி வைத்து கொள்ளலாம் 
*எத்தனை பதிவு வேண்டும் என்பதையும்  மாற்றி கொள்ளலாம்
*நமது பதிவின் தலைப்புக்கு ஏற்றபடி புதிய படங்களை அதுவே மாற்றி கொள்கிறது .
* பதிவின் கீழ் மட்டும் வர வேண்டுமா ,முகப்பு பக்கம் முழுவதும் வர வேண்டுமா என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்
*புதிய பதிவுகள் NEW என்று அதுவே குறிப்பிட்டு காட்டுகிறது .


இத்தனை சிறப்பம்சங்கள் உள்ள புதிய RELATED WIDGET  யை உங்கள் பிளாக்கில் இணைக்கஇந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .WIDGETS இல் ADD செய்யுங்கள்  உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி ..

எனது தளத்தில் உள்ள  இந்த WIDGET உங்கள் பார்வைக்கு கீழே ..

Sunday, September 18, 2011

உலகச் சாம்பியனா நாம் ?

டெஸ்ட் தொடரை இழப்பதற்கு முன்பு ஒருமுதல் இடம் இழந்த இந்தியா என்ற  பதிவு போட்டிருந்தேன் .டெஸ்ட் தொடரை 0-4  என்ற   கணக்கில்  இழந்த நாம் இப்போது ஒரு தின தொடரையும்  0-3 என்ற கணக்கில் இழந்திருக்கிறோம் .இது பற்றிய எனது உணர்வு ..



 காயம் அடைந்ததாய் 
சொல்லிக்கொண்டவர்கள் 
காயம் அடைந்தவர்கள் 
எல்லோரும்  பங்கேற்பர்
வர விருக்கும் 
CHAMPIONS LEAGUE தொடரில் ..
என்ன மாயமோ இது ?
எல்லாம் பணம் தானா ?

 0-4  என்ற  கணக்கில்  
டெஸ்ட் தொடரை இழந்தோம் 
௦-3 என்ற  கணக்கில்
ஒரு தின தொடரை இழந்திருக்கிறோம்
இப்போது..
இனி இழப்பதற்கு  ஏது  ?

உலக சாம்பியன் என்று 
மார்தட்டி அதிக நாட்கள் இல்லை ..
அதற்குள் ஒரு வெற்றி கூட 
இல்லாமல் தாயகம் 
திரும்பி இருக்கிறது இந்தியா 

அதிர்ஷ்டமும் இல்லை நமக்கு 
வெற்றியும் இல்லை 
இந்த ஒரு தின தொடரில் ..
மழை கூட  நமக்கு 
சாதகமாய் இல்லை.


டிராவிட்டும் ஒய்வு பெற்று 
விட்டார் இனி யாரை நம்பி 
வெளிநாட்டு சுற்று பயணங்கள்?
மேற்கிந்திய தீவுகள் தொடர் 
முடிந்தவுடன் நாம் வங்க தேசத்திற்கு 
சென்றிருக்க வேண்டும் 
என்று சொன்னாலும் சொல்வார் தோனி ..

 
டெஸ்ட் தொடரை விட 
ஒரு தின தொடரில் நமது 
பேட்டிங் சிறந்து இருப்பது 
மட்டுமே ஆறுதல் ..

டெஸ்ட் ,இருபது ஓவர் 
ஒருதின போட்டி என
முத்தாய்ப்பு தோல்விகள் 
உலகச் சாம்பியனுக்கு ...
நாம் சாம்பியனா என்ன ?..






Monday, September 5, 2011

இரு காதலிகளும்... நானும் ...



அவள் வந்ததில் இருந்து
என்னை நீ சரியாக
கவனிப்பதே இல்லை
புலம்புகிறாள் முதல் காதலி ..





இணையத்தில் எப்போதும்
இணைந்திருப்பாய் என்னுடன் ..
இப்போது அவளுடன்
இணைந்திருக்கிறாய்..
 மறந்து விட்டாயா என்னை ..

 உன் கைகள் என்னை
 எப்போதும் வருடி கொண்டே
 இருக்கும் முன்பு ..இப்போது
 அப்படி இல்லை ..

நான் அளவில் சிறியவள்
என்பதால் வெறுக்கிறாயா
 இல்லை   அவள் மோகம்
உன்னை ஆட்டுவிக்கிறதா ..

 எப்படி ஆனாலும் உன்
முதல்   காதலி நான் தான்
 மறந்து  விடாதே !

அவள் அழகி
தான் உன்னை   எப்போதும்
இணையத்தில் இயங்க வைப்பவள் தான்
அதற்காக என்னை மறந்து
விடாதே காதலா !
நான்  உன்னவள்  ...



  கடந்த வாரம் சோனி வயோ லேப்டாப் ஓன்று வாங்கினேன் .அதன் பிறகு செல்போனை அவ்வளவாய் பயன்படுத்துவதில்லை ..இக்கவிதை செல்போன் தன்னை முன்பு போல பயன்படுத்தாதர்க்கு என்னிடம் புலம்புவதாக எனது கற்பனையில் ..















Friday, September 2, 2011

வேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்



விஜய்க்கு எப்போதும் ஓர் ராசி உண்டு .படம் ப்ளாப் ஆனாலும் படப்பாடல்கள் ஹிட் ஆகி விடும்.அது போல வேலாயுதம் பட பாடல்களும் சிறப்பாகவே உள்ளது .
3 மெலடி 2 குத்து 1 தீம் சாங் என மொத்தம் 6 பாடல்கள் .பாடல்களும் எனக்கு பிடித்த சில வரிகளும் கீழே !



சொன்னா புரியாது ..
இது விஜய்யின் ஓபனிங் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன் .அரசியல் சாயம் பூசப்பட்ட பாடல் வரிகள்

"சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்கெல்லாம் என் மேல வைச்ச பாசம் ஒன்னா பிறந்தாலும் இது போல இருக்காது நான் உங்க மேல வைச்ச நேசம் "

என தொடர்கிறது

>பாடல் கேட்க கிளிக்குங்கள்

வேலா !வேலா !

இது அவ்வப்போது விஜய் எதிரிகளை வதம் செய்யும் போது பின்னணியில் ஒலிக்கும் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன்

'வேலா வேலா வேலாயுதம் நீ ஒத்த பார்வை பாத்தா நூறாயுதம் ..


என தொடர்கிறது ..

பாடல் கேட்க

மொலச்சு மூணு...
இது மெல்லிசை பாடல் .காதலியை வர்ணிப்பதை கேளுங்கள் .

உன் விரலு வெண்டைக்காய் காலு அவரைக்காய் மூக்கு மிளகாய் மூக்குத்தி கடுகா என நீள்கிறது

உந்தன் நகம் கீறி என் உடலில் தழும்பேறி அலறும் நாள் தேடி என் ஆவல் பெருசாச்சு ...

என போகிறது பாடல் ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்

சில்லாக்ஸ்..

இது குத்து பாடல் .

சூரியனே தேவை இல்ல வித்திடலாமா ராத்திரியை மட்டும் வைச்சுகிடலாமா

என போகிறது பாடல் ..

தீம் தீம் தனனம் தீம் தீம் தனனம் என இடையில் வரும் வரிகளுக்கு பாடியவரின்
குரல் அருமை ..
பாடல் கேட்க

ரத்தத்தின் ரத்தமே !

இது அரசியல் பாடலா காதல் பாடலா குழப்பம் தான் ..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே ! என நீள்கிறது ..

செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்காக தான் எனவும் சொல்கிறது ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்

மாயம் செய்தாயோ ..

இது மெல்லிசை காதல் பாடல் ..

நாண செடி வளர்த்த தோட்டம் ஆனேன் யானை புகுந்த சோலை ஆனேன் .என போகிறது ..

மீசைமுடி கரிய புற்கள் தாவி அதை கடிக்க ஏங்கும் பற்கள் .. என நீள்கிறது ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்

Tuesday, August 16, 2011

நித்தம் சொல்லும் பொய்களில்...























யாரும்
தனக்கு பிடித்து
சொல்வதில்லை பொய்களை ..
நித்தம் சொல்லும் பொய்களில்
எனக்கு பிடித்த பொய்
எதுவென்று தேடி பார்த்தேன் ...



காதல்
கவிகளில் சொல்லும்
பொய்கள் கவிதைக்கானவை
பிடித்தும் பிடிக்காத
பொய்கள் பல உண்டு
அதில்..

எந்த பொய்யும்
எனக்கு பிடிக்க வில்லை
தேடி பார்த்ததில் ஒன்றை தவிர ...

என் உடல் நிலை சரியில்லை
என்றாலும்
என் தாய் என்னிடம்
தொலை பேசியில்
கேட்கின்ற பொழுது
நலமாக இருக்கிறேன் என்று
என் தாய் மனது
மகிழ நான் சொல்லும்
பொய் மட்டுமே !




Sunday, August 14, 2011

முதல் இடம் இழந்த இந்தியா

அந்தோ பரிதாபம் !
உலக சாம்பியன் என்று
மார்தட்டி நடந்தவர்கள்
தலைகுப்புற விழுந்ததை
பார்த்தீரா!

தோனியின் படை
புறமுதுகு இட்டு ஓடியது
ஏன் ?
மேற்கிந்திய தீவுகள்
அணியிடமே
திணறி வெற்றி பெற்ற போது
நாம் முதல் இடத்துக்கு
தகுதியா என்ற
கேள்வி எழாமல் இல்லை

இப்போது இங்கிலாந்து 3-0
என்ற கணக்கில் நம்மை
வீழ்த்தி வெற்றி
கூப்பாடு போடுகிறது ..
நம்மால் 300 ரன்களை
கூட ஒரு இன்னிங்க்சில் எடுக்க
முடியவில்லையே !

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில்
முதல் இடத்தை இழந்து
விட்டோம் அடுத்த
நான்காவது டெஸ்டிலும்
தோற்றால் மூன்றாம்
இடம் தான் !

அதிக போட்டிகள் தான்
வீரர்களை காயம் அடைய
செய்கிறது என்றால் IPL இல்
அதிக போட்டிகள் தானே
அங்கு எப்படி விளையாடுகீறீர் !

தேசத்திற்கு எதிரான
போட்டிகளில் ஓய்வு
எடுத்து விட்டு IPL இல்
விளையாடுவது முறை தானா!

தோனி மீண்டும் பழைய
நிலைக்கு வந்து இருப்பது மட்டுமே
அறுதல் இந்த டெஸ்டில் ..

ஆறுதல் வெற்றியாவது
பெறுவீரா பார்ப்போம்
நான்காவது டெஸ்டில் ...

Saturday, July 30, 2011

அழகு பெண்ணொருத்தியால் நான் அழிந்த கதை ...























 கொள்ளை அழகு
பெண்ணொருத்தி
புது மண பெண்ணாய்
இங்கு வருகிறாள்
என்று கேட்டதில் இருந்து
எங்களுக்கு நடுக்கம் தான் ..



எத்தனை காலம்
இங்கிருக்கிறோம்
இந்த வீடு எங்களுக்கு
சொந்தம் அல்லவா !

புயலை போல
திடீரென வந்து
எங்களை அழிக்க தான்
திருமணம் செய்தாயா கள்ளி !

நீ பேரழகி தான் -ஆனால்
இவ்வீடு
அழுக்கு வீடு அல்லவா !

அதோ வருகின்றனர்
உன் உறவினர்கள்
பற்பல ஆயுதங்களை

கொண்டு எங்களை அழிக்க ..


நீங்கள் பயன்படுத்தும்
அந்த அதிக அழுத்த காற்று உள்ள

கருவி எங்களை
உரு தெரியாமல்
அல்லவா அழிக்கிறது


வீட்டுக்குள் வீடு கட்ட
எங்களை தவிர
யாரால் முடியும் ?

எங்கள் சாபத்தால்
உன் வாழ்க்கை
நாசமாகாதா மண
பெண்ணே !


அதோ அந்த மூலையில்
வேண்டா பொருட்கள் உள்ள
அறையில்
எங்களுக்கு இடம் கொடுப்பாயா
உன் மண வாழ்க்கை
இனிக்குமடி


அப்படி செய்தால் ..
வருத்ததுடன் சிலந்தி ...




(திருமணம் முடிந்து புது வீட்டிற்க்கு வரும் மணப் பெண்ணினால் தங்களுக்கு வரும் ஆபத்தை எண்ணி சிலந்தி மணமகளிடம் தங்களை காப்பாற்ற கேட்பதாய் இக்கவிதையை எழுதி இருக்கிறேன் )


இந்த கவிதையை எழுத தூண்டிய எனது அலுவலக தோழிக்கு நன்றி !








Wednesday, July 27, 2011

தெய்வ திருமகள் -எனது பார்வையில் ..








கதை
5 வயது மனநிலை உடைய மனநிலை பிறழ்ந்த விக்ரம் தான் 5 வயது மகளை தனது மாமனாரால் பிரிய நேரிடுகிறது ..பிரிந்த அப்பா மகள் ஓன்று சேர்ந்தார்களா என்பதை உணர்ச்சியாய் நெகிழ்ச்சியாய்சொல்லும் படம் தான் தெய்வ திருமகள் ..

சுவாரசியங்கள்












தெய்வ திருமகன் என்ற படத்தின் தலைப்பு தெய்வ திருமகள் என்று ஆனது கூட பொருத்தம் தான்.விக்ரமின் மகள் தான் தெய்வ திருமகள் படத்தில் ..


  • கிருஸ்ணா என்ற மனநிலை பாதிக்க பட்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம் மகளின் பிரிவை தாங்க முடியாத நேரங்களிலும் மகளை கொஞ்சும் நேரங்களிலும் அருமை

  • விக்ரமின் மகள் நிலவாக சாரா .குட்டி நடிப்பில் சுட்டி .முக பாவனைகள் அருமை .ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜாவாம் பாடலில் நிலா கேட்கும் கேள்விகளுக்கு விக்ரம் சமாளிப்பது அருமை .குழந்தைகளுக்கு பிடிக்க கூடிய பாடல் ..

  • அனுஷ்கா வை வழக்கறிஞர் ஆக்கிய துணிச்சல் இயக்குனருக்கு வெல்லவும் செய்திருக்கிறார் ..
  • சந்தானம் அனுஷ்காவிர்க்கு வழக்கு தேடி கொடுக்கும் பணியை செய்கிறார் .கொஞ்சமாய் சிரிக்கவும் வைக்கிறார்

  • விக்ரம் மகளுக்கு சித்தியாக அமலா பால் ஸ்வேதா ஆக மிளிர்ந்தாலும் அனுஷ்கா விற்கு தான் நடிப்பு

  • அனுஷ்காவிடம் போட்டியிடும் வக்கீல் ஆக நாசர் .நாசரின் மகன் காய்ச்சலால் அவதியுற விக்ரம் நாசரிடமிருந்து தப்பி போய் மருந்து வாங்கி கொடுக்கும் காட்சியில் விக்ரம் மனநிலை பாதிக்க பட்டவரா என வியப்பு நடிப்பு அருமை


  • M.S.பாஸ்கர் விக்ரமை தனது மனைவியுடன் சந்தேக படும் காட்சிகள் எரிச்சல் ஊட்டுகிறது ..

  • நீதி மன்ற காட்சிகள் அருமை

  • விக்ரம் தனது இறந்த மனைவி உடன் ப்ளாஷ் பேக் வைக்காதது ஆறுதல்

  • இறுதி காட்சியில் நம் கண்கள் குளமாவது இயக்குனரின் வெற்றி .

  • இது எனது முதல் திரை விமர்சனம் .இது படத்தை பற்றிய எனது பார்வை மட்டுமே !


Monday, July 18, 2011

BOLT INDIC BROWSER














தமிழ் வலை தளங்களை /எழுத்துகளை நோக்கியா மொபைலில் காண OPERA MINI BROWSER பற்றி முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன் .

அதில் உள்ள குறை பதிவர்கள் பதிவை வலை திரட்டிகளில் சமர்பிக்கும் போது கட்டம் கட்டமாக தெரியும் .

இந்த குறையை போக்க BOLT INDIC BROWSER பயன்படுத்தலாம் .இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

பின்பு ப்ரௌசெரை ஓபன் செய்து MENU>>PREFERENCES>>INSTALL FONT செல்லுங்கள் .அவ்வளவு தான் .இனி பதிவர்கள் பதிவுகளை உளவு போன்ற வலை திரட்டிகளில் பதியும் போது பிரச்சனை இருக்காது .தமிழ் வலை தளங்களை எளிதில் வேகமாக படிக்கலாம்