Wednesday, March 21, 2012

ஜெ.. க்கு நன்றிகள் பல ..

ஜெயலலிதா ,JEYALALITHA
நல்லா இருங்க மக்களே !

குறட்டை வீட்டு
காலையில் அதிக நேரம்
தூங்கும் இளசுகளை
அதிகாலையில் மின்தடை
செய்து எழுப்பும் உங்கள்
அக்கறைக்கு நன்றிகள் பல !

தொலைக்காட்சி
நெடுந்தொடரால் சீரழியும்
பெண்களை காப்பாற்ற
பகலில் அதிக நேரம்
மின்தடை செய்யும் உங்களுக்கு
 எங்கள் நன்றிகள் பல !

எங்கள் கிராமத்தில்
குடும்பங்களில் அளவளாவி
பேசி எவ்வளவு நாளாகி விட்டது
தொலைக்காட்சி அரக்கன்
வந்ததில் இருந்து ..
 எளிதில் போக்கினார் ஜெ
 மின்சார தடை இரவிலும்..
ஜெ.. க்கு நன்றிகள் பல ..

நள்ளிரவிலும்
மின்தடை செய்து எங்கள்
தூக்கத்தை கெடுப்பதில்
என்ன நன்மை? தேடி பார்த்தும்
ஒன்றும் அடங்க வில்லை
சொல்வீரா முதல்வரே !

--இது வஞ்ச புகழ்ச்சியா உண்மை புகழ்ச்சியா உங்கள் முடிவே !((இது எங்கள் கிராமத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது .நகரம் அல்ல )

 







உங்கள்  பார்வைக்கு :

    Friday, March 16, 2012

    சச்சினின் 100 வது சதம்- ஓர் பார்வை


    சச்சினுக்கு வாழ்த்துக்கள் 100 வது சதம் கண்டதற்கு !

    • சச்சினின்  100 வது சதம் நீண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்தே விட்டது .
    • இதுவரை 51 டெஸ்ட் சதங்கள்  மற்றும் 49 ஒரு தின சதங்கள் என மொத்தம் 100 சதங்கள் கண்டுள்ளார் 
    • அவரது 100 வது சதம் வங்க தேசத்திற்கு எதிராக அமைந்து  விட்டது.(AUSTRALIA விற்கு எதிராக அடித்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும் )
    • டெஸ்ட் அந்தஸ்து  பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதம் கண்டுள்ளார்
    •  6  இரட்டை சதங்களை விளாசி இருக்கிறார் டெஸ்டில் .ஒரு தின கிரிக்கெட்டில் 10 அணிகளுக்கு எதிராக சதம் கண்டுள்ளார் . 
    நன்றி:யாஹூ கிரிக்கெட்
    • ஒரு தின கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் (தற்போது சேவாக் 219).
    • முச்சதம் அவருக்கு இதுவரை எட்ட வில்லை .அதையும் விரைவில் எட்டுவார் .
    • ஒரு  தின போட்டிகளில் 2000 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்
    டெஸ்ட் மற்றும் ஒருதின கிரிக்கெட்டில் அவரது சதங்கள் கீழே பட்டியலாக (WIKIPEDIA வில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்டன )

    சச்சினின் சதங்கள் TEST vs  ODI  ஓர் பார்வை 



    TEST
    ODI
    மொத்த சதங்கள்
    51
    49
    முதல் சதம்
    இங்கிலாந்திற்கு எதிராக
    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
    அதிக பட்சம்
      248*வங்கதேசத்திற்கு எதிராக            
    200*தென் ஆப்பிரிக்காவிற்க்கு எதிராக
    90களில் ஆட்டமிழந்தது
    9 தடவை
    20 தடவை


    முந்தைய கிரிக்கெட் பதிவு :இந்திய அணியின் சுவர் ஒய்வு- சச்சின் ?



    Sunday, March 11, 2012

    கையில் ஒரு கோடி -ARE YOU READY?-சன்னின் மங்காத்தா

    சன் டிவி ,கையில் ஒரு கோடி

    விஜய் டிவி க்கு போட்டியாக இந்நிகழ்ச்சி சன் டிவியில்  ஆரம்பிக்க பட்டாலும் உண்மையில் இது போட்டி அல்ல .சனி ,ஞாயிறுகளில் நிகழ்ச்சி வருவது இதை உறுதி படுத்துகிறது .வார நாள்களில் இந்நிகழ்ச்சியை போட சீரியல்கள் தடை சன்னுக்கு!


    நிகழ்ச்சி  எப்படி ?
    • இரு பங்கேற்பாளர்கள்   ஒரு கோடி கொடுக்கப் படும்.மொத்தம் ஏழு கேள்விகள் .கேள்விகளுக்கான  4 பதில்கள் தனித்தனியாக 4 பிரிவுகளாக பிரிக்க பட்டிருக்கும்.பதில் உறுதியாக தெரிந்தால் சரியான விடை உள்ள பிரிவில்   அனைத்தையும் அடுக்கலாம்
    •  .இல்லையென்றால் மூன்று பதில்கள் உள்ள பிரிவுகளிலும்  உங்கள் பணத்தை அடுக்கலாம்  .சரியான விடை உள்ள பிரிவில் அடுக்க பட்ட பணம் மட்டுமே அடுத்த கேள்விக்கு செல்லும் .
    • 60வினாடிகளுக்குள் அடுக்க வேண்டும்

    சிறப்புகள்
    • கையில் கொடுக்கபட்ட ஒரு கோடியை மொத்தமுள்ள  7 கேள்விகள் வரை கொண்டு சென்றால் நீங்கள் கோடீஸ்வரன் .
    • 7 கேள்விகள் வரை சென்று இறுதியில் அனைத்து பணத்தையும் இழந்தால் சன் அறுதல் பரிசாக ஒரு லட்சம் தருகிறது 
    • கேள்விகள்  சிறப்பாய் இருப்பதும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு
    சன் டிவி ,,KAIYIL ORU KODI

    மாற்றி  யோசித்த சன்
    • கேள்விகளின் தலைப்பை கொடுக்கபட்ட இரண்டு தலைப்புகளில் இருந்து நாமே தேர்ந்தெடுப்பது ,
    • பதில்கள் முதலில் சொல்லி கேள்வியை பின்னர் சொல்வது ,
    • ஒரு கோடியில் இருந்து படிப்படியாக இறங்கி கடைசியில் கிடைக்கும்   தொகையை பெறுவது என கோடீஸ்வரன் பார்முலாவை  மாற்றி யோசித்திருக்கிறது சன் .

    பணத்தை வெளிப்படையாக வைத்து விளையாடுவதால் இது சூதாட்டம் என சிலர் வாதிடுகின்றனர்(அடுக்கப்படும் பணம் காட்சிக்காக வைக்க படும் பணமா இல்லை உண்மையான பணமா  என தெரிய வில்லை)

    டாப்பா  ட்ராப்பா  இது பதில்கள் சரியானதா  என சொல்லும் போது நிகழ்ச்சியை நடத்தும் ரிஷி சொல்லும் வசனம்.

    மொத்தத்தில் இந்நிகழ்ச்சி மாற்றம்  கண்ட கோடீஸ்வரன் நிகழ்ச்சி

    உங்கள்  பார்வைக்கு :

    Saturday, March 10, 2012

    இந்திய அணியின் சுவர் ஒய்வு- சச்சின் ?


    • "இளம் வீரர்களுக்கு வழி விட்டு விலகுகிறேன் "-இது இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட் நேற்றைய ஓய்வு அறிவிப்பின் போது சொன்னது.இது மீடியாக்களுக்கு நல்ல செய்தி ஆகி விட்டது.
    • டிராவிட்டை போன்றே இளம் வீரர்களுக்கு வழிவிட்டு பிற மூத்த வீரர்கள் விலக வேண்டும் என்று மறைமுகமாகவும் மேலும் சில பத்திரிகைகள் பகிங்கரமாக சச்சின் ,லக்ஷ்மன் அணியை விட்டு  விலக வேண்டும் என கொக்கரிக்கின்றன.

    • ஏறக்குறைய சச்சின் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்.ஓய்வு பெறா விட்டாலும் இப்போது ஒன்றிரண்டு போட்டிகளில் தான் அவரை காண முடிகிறது .முக்கிய போட்டிகள் தவிர மற்ற போட்டிகளில் ஒய்வு  தான் ,.உலக கோப்பைக்கு பிறகு தற்போதைய ஆஸ்திரேலியா சுற்று பயணத்தில் தான் சச்சின் .ஆனால் இந்த ஓய்வு இவர் விரும்பி இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
    • கங்குலியை வலுக்கட்டயாமாக ஓய்வு பெற வைத்ததை போல் சச்சினையும் ஓய்வு பெற செய்ய ஒரு கூட்டம் காத்து கொண்டிருக்கிறது .என்னை பொறுத்த வரை ஒரு நாள் போட்டிகளில் உலக கோப்பையை தற்போது வென்ற போதே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அது சிறப்பாக இருந்திருக்கும் .இப்போது அவரை ஓய்வு பெற சொல்லும் நிலை ஏற்பட்டிருக்காது .சச்சின் 100 வது சதத்துகாக காத்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்காது 
    • வழக்கமாக ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடும் லக்ஷ்மன் இப்போது அங்கும் கோட்டை விட்டது அவரையும் ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சு எழும்ப காரணமாகிருக்கிறது 
    • சச்சின் 100 வது சதம் அடிக்கட்டுமே! அடித்த அந்த போட்டியிலேயே ஓய்வு பெற வேண்டும் அது தான் அவருக்கு சிறப்பு என்பது என் எண்ணம் .



    Tuesday, March 6, 2012

    திரட்டிகளில் பதிவை எளிதில் இணைக்க !

     பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமான காரியம் தான் .அதனை போக்க ALEXA  TOOLBAR  CREATOR மூலமாக TOOLBAR ஒன்றை கடந்த ஜனவரியில் உருவாக்கினேன்.( பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக )

    தற்போது அந்த TOOLBAR  இல் சில புதிய வசதிகளை(MAILS, ANALYTIC, SEARCH) இணைத்து வெளியிடுகிறேன் .தேவையான அன்பர்கள் தங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம் .

    UPDATE:தற்போது தமிழில் டைப் செய்ய உதவும் GOOGLE TRANSLATE யும் இணைக்கப்பட்டுள்ளது



    குறிப்பு :ஏற்கனவே இந்தTOOLBAR ஐ நிறுவியுள்ள அன்பர்கள் ஒருமுறை உங்கள் கணினியை RESTART செய்தால் போதுமானது.இந்த புதிய வசதிகள் உங்கள் TOOLBAR இல் இணைந்து விடும்.

    பயன்கள்  :
    • எனது  படைப்பான இந்த TOOLBAR இல் தமிழின் முதன்மை திரட்டிகளான இன்ட்லி ,தமிழ் மணம் ,தமிழ் 10,யு டான்ஸ் ,உலவு மற்றும் இனிய தமிழ் திரட்டிகளுக்கான இணைப்பு தரப்பட்டுள்ளது.ஒரே கிளிக்கில் உங்கள் பதிவை இணைக்கலாம்
    • பதிவர்களுக்கு  மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில்  FACEBOOK ,TWITTER,GOOGLE + போன்ற சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.
    • மின்னஞ்சல் தரும் GMAIL,YAHOO MAIL இணைப்பும் தரப்பட்டுள்ளது
    • நமது  தளத்தை ஆய்வு செய்யும் GOOGLE ANALYTICS,GOOGLE WEBMASTER TOOLS இணைப்பும் தரப்பட்டுள்ளது
    • GOOGLE SEARCH இணைப்பும் தரப்பட்டுள்ளது
    •  .INTERNET EXPLORER மற்றும்  FIREBOX BROWSER களுக்கு ஏற்றது.அதில் மட்டுமே நிறுவ முடியும் 
    • கணினியில் நிறுவிய உடன் உங்கள் கணினியை RESTART செய்தால் TOOLBAR உங்கள் கணினியில்இணைந்திருக்கும்

    இதனை  உங்கள் கணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள்

    Get our toolbar!



    Wednesday, February 29, 2012

    நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-சில அதிரி புதிரி கேள்விகள்

    • ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த திங்கள்(FEB 27,2012) அன்று ஆரம்பித்தே விட்டது விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி"நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக "கையில் ஒரு கோடி" நிகழ்ச்சியை சன் டிவி நடத்தவுள்ளது 
    • சூர்யா நடத்துவது இந்நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றி விட்டது.ஆனால் கேள்விகள் நிச்சயம் பங்கு பெறுபவர்களை லட்சாதிபதி ஆவது ஆக்கி விடும் அதற்கு விஜய் டிவி க்கு வாழ்த்துக்கள் .(!)
    • நேற்றைய நிகழ்ச்சியை தீபிகா என்ற பங்கேற்பாளர் சிறப்பாக கொண்டு சென்றார் பறக்கும் முத்தங்களும் பாடலும் சிரிப்புமாய் கொண்டு சென்றார் 
    • நிகழ்ச்சியை பார்க்கும் போது அவ்வப் போது விவேக்கின் கோடீஸ்வரன் கலாய்ப்பு நிகழ்ச்சி  ஞாபகம் வந்தது எனக்கு !

    அப்படிப்பட்ட அதிரி புதிரி கேள்விகள் கடந்த இரு தினங்களில்  உங்கள் பார்வைக்கு கீழே!

    • 2012 இல் வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பை பூர்த்தி செய்க.-----------சொதப்புவது எப்படி ?
    A)நட்பில்  B)வாழ்க்கையில் C)காதலில் D)உறவில்

    (இதற்கு விடை தெரிய   பங்கேற்ற அன்பர் AUDIENCE-LIFELINE தேர்ந்தெடுத்தார்)

    • திருமணமானவர்கள் கொண்டாடும் முதல் தீபாவளியை எப்படி அழைப்பார்கள்?

    A)கை தீபாவளி B)கால் தீபாவளி C)தலை தீபாவளி D) மூக்கு தீபாவளி

    • நீங்கள் செய்வதை அப்படியே இன்னொருவர் செய்தால் அதை எப்படி அழைப்பார்கள்?

    A)கொசு அடிச்சான் காப்பி B)ஈ அடிச்சான் காப்பி C)நாய்  அடிச்சான் காப்பி D)பேய் அடிச்சான் காப்பி

    • (கோ படத்தின் "என்னமோ ஏதோ" பாடல் ஒலிக்கிறது.)கேள்வி இது தான்.நீங்கள் கேட்ட இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?
    A)போக்கிரி B)மஜா C)கோ D)எந்திரன்

    • டிசெம்பர்  2011 இல் தமிழகத்தை மிகவும் பாதித்த புயல் எது ?
    A)பிஜ்லி B)தானே C)அக்னி

    (இந்த  கேள்விக்கு அன்பர் PHONE A FRIEND -LIFELINE தேர்ந்தெடுத்தது மிகவும் கொடுமை தானே!)


    இந்த  கேள்விகள் எல்லாம் பார்க்கையில் லட்சாதிபதி ஆவது ஆகி விடுவோம் தானே நாம் பங்கேற்றால் !


    உங்கள் பார்வைக்கு:


    Monday, February 27, 2012

    காதலில் சொதப்புவது எப்படி?-விமர்சனம்

    "காதலில் சொதப்புவது எப்படி"-படத்தை பற்றிய எனது எண்ணங்கள் இங்கே !



     " நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை 
    திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு   வாழ்த்துக்கள் பாலாஜி. அந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு !



    கதையின் கரு 

    • ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள்  என்பதே கதை.
    • சித்தார்த்தும் அமலாபாலும் போட்டி போட்டு கொண்டு நடித்திருக்கின்றனர்

    நெகடிவ் க்ளைமாக்ஸ் இல்லை.சுவிட்சர்லாந்து டூயட் இல்லை.தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை உடைத்து எரிந்திருக்கிறது  இப்படம்.


    "இத சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா!"என அமலாபால் சித்தார்த்திடம் சொல்லும் அழகே தனி!

    " ஏங்க லவ் பண்றது இவ்வளவு கஷ்டமா இருக்கு"என நம்மை பார்த்து சித்தார்த் கேட்பதும் நியாயம் தான்

    "பாசத்தையும்  சரி வெறுப்பையும் சரி பொண்ணுங்க காட்டுற அளவுக்கு  பசங்களால என்னைக்குமே காட்ட முடியாது "போன்ற ஜீவனுள்ள  வரிகள் படத்தோடு இணைய வைக்கின்றது நம்மை !


    கிளைக்  கதைகள்

    • அமலா பாலின் தாய் தந்தை காதல் ஓர் அழகு கவிதை.விவாகரத்து பெற விருக்கும் அமலா பாலின் தந்தை தனது மனைவிக்கு  மகளிடமே லவ் லெட்டர் கொடுத்து அனுப்புவதும்  அந்த வளையோசை பாடலும் அழகு
    • அண்ணா என அழைத்தவளையே விடாமல் காதலிக்கும் நண்பன்,சித்தார்த்துக்கும் அமலா பாலுக்கும் சமரசம் செய்ய முயன்று அடிவாங்கும் அந்த குண்டு நண்பன் என வரும் கிளை கதைகள் அனைத்தும் அருமை 
     இயக்குனருக்கும் நடிக்க ஆசை போல படத்தில் சில காட்சிகளில் தலை காட்டுகிறார் பாலாஜி

    அழைப்பாயா அழைப்பாயா பாடலும் சித்தார்த் பாடிய பார்வதி பார்வதி பாடலும் ஈர்க்கிறது

    ஆண்கள் தான் ஈகோவை விட்டு கொடுக்கணும் என்ற உண்மை தான் படத்தின் முடிவு

    உங்கள் பார்வைக்கு :

    Tuesday, February 21, 2012

    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

    கடவுள் ,வேண்டுதல்

     லட்ச கணக்காணோர் எழுதிய
    வங்கி தேர்வில் என்னை
    தேர்வு செய்ய வேண்டினேன்
    அவ்வாறே செய்தார் கடவுள்
    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான்!



    அலுவலகத்தில்
    எனக்கெதிராய் செயல்படுபவர்களை
    எனக்கு ஆதரவாய்
    செயல்பட வேண்டுகிறேன்
    அவ்வாறே செய்கிறார் கடவுள்
    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !


    அதிகாலையில் எழுந்திரிக்க
    அலாரம் வைப்பதில்லை நான்
    அவரிடம் சொல்கிறேன்
    எழுப்புகிறார் குறிப்பிட்ட நேரம் முன்பே !
    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

    இழுபறியில் இருக்கும் என
    நினைத்த தேர்வு முடிவுகளில்
    என்னை தேர்வு பெற செய்யுங்கள்
    என வேண்டுகிறேன் அதையும்
    செய்கிறார் எனது உழைப்பு கண்டு !
    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

    இன்னும் எத்தனயோ
    செய்தார் செய்கிறார் செய்வார்
    ஆனால் நான் என்ன செய்தேன்
    அவருக்கு !ஒன்றுமில்லை
    கடவுளுக்கு  வேலை வைக்கிறேன் நான் !


    (இக்கவிதை கர்த்தருக்கு நான் செலுத்தும் சாட்சி கவிதை .எனது வாழ்க்கை சம்பவங்கள்.சிறப்பான கருத்துக்கள் அளிக்க வேண்டுகிறேன் )


    உங்கள் பார்வைக்கு :

    Saturday, January 28, 2012

    சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா

    • மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,ஒட்டு மொத்த இந்திய அணியின் ஆட்டம்  ஆகியவற்றால் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தொடரை பறிகொடுத்திருக்கிறது இந்தியா
    எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக சிறப்பாக விளையாடும் லட்சுமனும் சோடை போனார்.திராவிடும் பெரிய அளவில் சோபிக்கவில்லை
    • விராட் கொக்லியின் சதம் இளம் வீரர்களை டெஸ்ட்  அணியில் சேர்க்க வேண்டும் என்பதை காட்டுகிறது 
    • சச்சினின் 100 வது சதம் எப்போது என காத்திருந்து மோசம்  போனது இந்த தொடரிலும்!.அவர் சதத்தை விட இந்தியாவின் வெற்றி தேவைப்படுகிறது இப்போது !

    பல  மாதங்களாய் பார்மில் இல்லாத ஆஸ்திரேலியாவின்  பாண்டிங்கை சிறப்பான பார்முக்கு (ஆட்டத்திறன்)  கொண்டு வந்ததே நமது பந்து வீச்சாளர்களின் சாதனை இந்த தொடரில் !
    • ஒரு டெஸ்டையாவது சமன் (drawn) செய்ய கூட முடியாத வகையில் சுருட்டி வீசி விட்டது ஆஸ்திரேலியா இந்தியாவை !
    • உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா என்பது உண்மையாகி விட்டது 
    • 2-0 என்ற கணக்கில் வீழ்ந்த  சமயத்தில் நான் எழுதிய பதிவு உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா

    உங்கள்  பார்வைக்கு :


    *தமிழின் சிறந்த கவிதை தளங்கள் -2

    *பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக !

    Thursday, January 19, 2012

    3 -பாடல்கள் ஓர் அலசல்

    சூப்பர் ஸ்டார் ஒரு பாட்டில் பெரிய ஆளாக மாறுவார் படங்களில்...அவரது மருமகன் நிஜத்திலேயே ஒரு பாடல் மூலம் பெரிய ஆளாகி விட்டார் என்று ஒரு TWEET படித்தேன்.உண்மை தான் கொலைவெறி பாடல் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் தனுஷ்.


    கொலைவெறி  பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது .இருப்பினும் சிறந்த மெலோடிகள் தான்

    6 பாடல்கள் ,ஒரு REMIX, மற்றும் மூன்று  தீம் சாங் என்ற கலவையாக  3 பட பாடல்கள் உள்ளது .பாடல்களில் நான் ரசித்த வரிகள் மற்றும் பாடலின் இணைப்பு கீழே !




    இதழின்  ஒரு ஓரம்

    அருமையான மெலடி .உதித் நாராயண் போல நிலுவையும் (நிலவையும் )ரசிக்க வைத்தாய் என்று தமிழில் புகுந்து விளையாடுகிறார் பாடகர்

    பாடலில் நான் ரசித்த வரிகள் 

    "என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
    என்  இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
    என்  ஆண்கர்வம் மறந்து உண்முன்னே பணிய வைத்தாய் " என்று பளிச்சிடும் வரிகள் இருக்கிறது

    பாடல் கேட்க


    கண் அழகா கால் அழகா

    இதுவும் மெலடி பாடல் தான்.சுருதி ஹாசன் குரலில் ஈர்க்கிறது

    பாடலில் நான் ரசித்த வரிகள் 

    "எங்கயோ தேடி செல்லும் விரல் அழகா?
    என்  கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா ?
    உயிரே உயிரே உனைவிட
    எதுவும் உயிரில்  பெரிதாய் இல்லையடி!" என்று அசத்தும் வரிகள் சிறப்பு

    பாடல் கேட்க


    நீ  பார்த்த விழிகள்

    காதலின் ஏக்கம் சொல்லும் மெலடி

    பாடலில் நான் ரசித்த வரிகள் 

    "நீ  பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
    கேட்டாலும் வருமா கேட்காத வரமா


    வலிகளில் பெண்ணே  வரைமுறை இல்லை
    வதைக்கிறாய் என்னை மெதுவாக " என்றுகாதலின் ஏக்கம் சொல்கிறது.


    பாடல் கேட்க


    போ நீ போ 

    காதலியை போக சொல்கிறாரா வர சொல்கிறாரா பாடலை கேளுங்கள் புரியும் .சோகம் வழியும் மெலடி

    பாடலில் நான் ரசித்த வரிகள்

    "இதுவரை உன்னுடன்  வாழ்ந்த நாட்கள் 
    மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா " என ஏங்குகிறார்

    "தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ "என தவிக்கிறார்

    பாடல் கேட்க

    பாடலின் REMIX கேட்க 


    LIFE ல WIFE  வந்துட்டா

     முந்தைய பாடல்களில் இருந்து தனித்து தெரியும் பாடல்.

    "வீட்டுக்கு பிரெண்ட்ஸ் எல்லாம் வந்தா GUEST ஆக தான் நடத்தனும்
    உன்  மேல தப்பில்லாட்டாலும் SILENT ஆக தான் இருக்கணும்" 

    என மனைவி வந்தா இப்படி  தான் என சொல்கிறார்
     
    பாடல் கேட்க


    WHY THIS கொலைவெறி 

    இந்த  பாடலை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை .உலக பிரசித்திபெற்ற பாடல் .பாடல் VISUAL ஆக எப்படி என தான் இப்போது ஆவல்.

    தமிழை கொலை செய்து வந்த கவிஞர்களுக்கு மத்தியில் ஆங்கிலத்தை  முதன் முதலில் தமிழ் பாடலில் கொலை செய்ததற்காய் தனுஷுக்கு பாராட்டுக்கள் 

    பாடல் கேட்க

    தீம் சாங்ஸ் கேட்க 


    *தீம்1

    *தீம் 2

    *தீம் 3


    உங்கள் பார்வைக்கு :


    *பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOL BAR இலவசமாக

    *தமிழின் சிறந்த பொழுது போக்கு தளங்கள்

    *தமிழின் சிறந்த தொழில் நுட்ப தளங்கள்