Friday, June 22, 2012

சரவணன் -மீனாட்சி வரவேற்பு -என்ன கொடுமைடா சாமி

சரவணன் -மீனாட்சி
நெடுந்தொடர்கள் பக்கம் எட்டி பார்க்காத இளைய தலைமுறையை (ஆண்கள்) நெ(கொ)டுந்தொடர்களை பார்க்க செய்தது விஜய் டிவி தான் என நினைக்கிறேன்

  • பெரும்பாலும் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டதொடர்களே விஜய் டிவியில் வெற்றி பெறும்.அழுது  வடியும் தொடர்கள் விஜய் டிவியில் வெற்றி பெற்றது  அரிது 
  •  கனா காணும் காலங்கள் ,காதலிக்க நேரமில்லை மற்றும் சரவணன் மீனாட்சி தொடர்களின் ரிங்டோன்களை கூட உபயோக படுத்தும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளது .
  • எதையும் காசாக்க நினைக்கும் விஜய் டிவி கடந்த ஞாயிறு சரவணன் -மீனாட்சி வரவேற்பு என்று விளம்பரபடுத்தியது .உண்மையான திருமண வரவேற்பு போல நடந்த இந்நிகழ்ச்சி ஒரு நாடகம் என்றாலும் இப்படியும் காசு பாக்கலாமா என யோசிக்க வைக்கிறது

சன் டிவி நெடுந்தொடர்களை போட்டு கொல்லுமே தவிர விஜய் டிவியை போல அந்த நிகழ்ச்சியை வெளியில் போட்டு கொல்லாது .அந்த வகையில் சன் சன் தான் .

சரவணன் மீனாட்சி


நிகழ்ச்சி  எப்படி :

  • திரண்டிருந்த  திருநெல்வேலி கூட்டத்திற்காக  ஆட்டம் பாட்டம் என களை கட்டியது 
  • நாடகத்தில் நடிக்கும் சரவணனின் அம்மா (குயிலி )இங்கேயும் அதே போல் நடித்து கொண்டிருந்தார்
  • நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா கேட்ட  கேள்விகளுக்கு தர்ம சங்கடத்தில் சிரித்து நெளிந்து சமாளித்து கொண்டிருந்தார்  மீனாட்சி 
  • கனா  காணும் காலங்கள் நட்சத்திரங்கள் அவ்வப்போது வந்து ஆட்டம் போட்டனர்  
  • இந்த  வரவேற்பு போதாது என்று அடுத்த வாரம் கோவையில் வேறு வரவேற்பாம்
  • உண்மையான மணப்பெண்  போல எப்படி தான் நடிக்க முடிகிறதோ இவ்வளவு கூட்டத்தில்! என எனக்கு தோன்றியது
  • சரவணன் மீனாட்சி வரவேற்பு -என்ன கொடுமைடா சாமி


உங்கள் பார்வைக்கு :


Sunday, June 10, 2012

விஸ்வரூபம் -கலக்கல் படங்கள் (VISWAROOPAM STILLS)

சமீபத்தில் ஒரு ட்வீட் படித்தேன் "கமல் தன்  படங்களில் தான் தெரியக் கூடாது என்பதற்காக நடிக்கிறார்.  ரஜினி தான் ரஜினியாக தெரிவதற்காக நடிக்கிறார் "என்று !நான் ஒரு ரஜினி ரசிகன் என்ற போதிலும் என்னால் இதை ஏற்று கொள்ள முடிகிறது

 சமீபத்தில் கமல் நடித்து இயக்கி தயாரித்து வரும்  விஸ்வரூபம் படத்தின் ஸ்டில் கள் வெளியிடப்பட்டன .இரு விதமான தோற்றங்களில் கமல் இருக்கும் புகைப்படங்கள் கீழே!

ஆன்ட்ரியாவுடன்  கமல் புது தோற்றத்தில் ..
VISWAROOPAM PHOTOS,KAMAL ,ANTRIA


 கமலின் மற்றொரு தோற்றம்
VISWAROOPAM,KAMAL

 பெண்ணின் நளினத்துடன் கமல் ஆன்ட்ரியாவுடன் ..

VISHWAROOPAM,KAMAL,ANTRIA  

இந்த புன்னகைக்கு என்ன அர்த்தமோ!

VISWAROOPAM,KAMAL

 இளமையான தோற்றத்தில் கமல்

VISWAROOPAM STILLS,PHOTOS,KAMAL
                                                                                                                           
                                                                                                                          படங்கள் :GOOGLE

உங்கள் பார்வைக்கு :



Wednesday, June 6, 2012

சகுனி பாடல்கள் -ஓர் பார்வை (SAGUNI SONGS FREE DOWNLOAD)

 மொத்தம் 5 பாடல்கள் ஒரு மெலடி ,ஒரு காதல் பாடல், மூன்று தத்துவ பாடல்கள்( குத்து பாடல்கள்) என மொத்தம்  5  பாடல்கள்.

G.V.பிரகாஷ் இசை அமைத்துள்ளார் .பாடல்களில் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் தரவிறக்க(DOWNLOAD) இணைப்பும்  கீழே!

சகுனி படங்கள் ,கார்த்தி ,பிரனிதா


 போட்டது பத்தல
ஆடுகளம்  புகழ் வேல்முருகன்  பாடியுள்ளார் .

போட்டது பத்தல  மாப்பிள்ளை இன்னொரு கோட்டரு   சொல்லுடா  அப்டியே மேட்டறு  கேளுடா -என ஆரம்பிக்கிறது பாடல்

வேணா மச்சி சோறு  நீ  சொல்லு ரெண்டு பீரு

குடிகாரன்  பேச்சு அது  விடிஞ்சு புட்டா  போச்சு
செஞ்ச தப்ப மறந்து போகும் தெய்வம் நாங்கடா 

--என புது தத்துவம் சொல்கிறது

அஞ்சாதே பாடல் அவ்வப்போது ஞாபகம் வருகிறது

பாடல்  கேக்க மற்றும் DOWNLOAD செய்ய  கீழே

கந்தா  கார வட

 சங்கர் மஹா தேவன்  பாடியுள்ளார் .BUSY CITY WITH பசி  CITIZENS என ஆரம்பிக்கிறது பாடல்

"ஜெயிச்சுட்டா  புகழ் போதையில் ஆடுரானே
தோத்துட்டா சரக்கு போட்டுஆடுரானே"

"இது  வந்தார வாழை வைக்கும் தமிழ்நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துரானே திருவோடுங்க"

"பிணத்துக்கு  முன்னாள் நாளைய பிணங்கள் போட்டி போட்டு கூத்தடிக்குது"--என பல நச்  வரிகள்

பாடல்  கேக்க மற்றும் DOWNLOAD செய்ய  கீழே


வெள்ள பம்பரம் 

பாபா  சேகல்  ,பிரியா ஹிமேஷ் பாடியுள்ளனர் .சேமியா மீசை னு புது வரி கண்டுபிடித்திருக்கிறார் பாடல் ஆசிரியர் மீசைக்கு !

வளைச்சு பாக்கிறேன் நெளிஞ்சு  பாக்கிறேன் மிளகா கடிச்ச நாக்காக
உருண்டு நிக்கிறேன் திரண்டு நிக்கிறேன் அளவா இளைச்ச தேக்காக

கூந்தல வாரும் போது குங்குமம் பூசும் போது நீ வர கூடாதான்னு நெஞ்சம் தடுமாறும்-    என ரொமான்ஸ் வரிகள் அதிகம் இருக்கிறது


பாடல்  கேக்க மற்றும் DOWNLOAD செய்ய  கீழே

மனசெல்லாம் மழையே 

 மெலடி பாடல்.சோனு நிகம்,சைந்தவி பாடியுள்ளனர் 

"ஏழு வண்ண வானவில்லில் நூறு வண்ணம் தோன்றுமே"

"வேறு  வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம் " போன்ற காதல் ததும்பும் வரிகள் பல இருக்கிறது.

பாடல்  கேக்க மற்றும் DOWNLOAD செய்ய  கீழே

அண்ணாச்சி அம்மாச்சி

புஷ்பவனம் குப்புசாமி பாடியுள்ளார். இது அரசியல் விளம்பர பாடல்

ஆட்டுக்குட்டி முட்டை போடும் சொல்லிடுவாண்டா 
ஒரு முட்டைக்குள்ள மூக்குத்திய வைச்சு விப்பாண்டா  - என்று இன்றைய  அரசியல் பேசுகிறது

பாடல்  கேக்க மற்றும் DOWNLOAD செய்ய  கீழே



உங்கள் பார்வைக்கு :



Friday, June 1, 2012

உங்கள் தளத்தை இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா ?

நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு
  • நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டும் கருத்துக்களுக்கு கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தில்  ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன்

சிறந்த  கருத்தாளர் மே 2012
கடந்த மே மாதத்தில் மொத்தம் 10 பதிவுகள் என்னால் வெளியிடப்பட்டது .அதில் சிறப்பான என்னை நெகிழ வைத்த கருத்துக்கள் கீழே :

 

-என்ற பதிவு இடுவதற்கு அதிக நேரம் பிடித்தது எனக்கு .soundcloud இல் upload செய்து  பதிவில் மாற்றம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது .அதிக பார்வைகளை பெற்றது .இதற்க்கு அன்பர் அரசனின் நகைச்சுவை கருத்து ரசிக்க வைத்தது 


  அரசன் சேsaid...
கேட்டேன்... மதுரை பொண்ணு எப்படி இருக்கும் விசுவலில் என்று ஒரே ஆர்வம் .. ஹா ஹா ஹ
------------------------------------------------------------------------------------------------ 


கண்கள் போதாதா என்ன ? 

 
-என்ற பதிவிற்கு கொஞ்சம் அதிக படியாக தெரிந்தாலும் நான் ரசித்த கருத்து வரலாற்று சுவடுகள் அன்பரிடம் இருந்து ..
 
வரலாற்று சுவடுகள்said...
//////என் கண்களை விட
உனக்கு வேறுச்
கடிதம் வேண்டுமா என்ன ?
நான் உன்னை நேசிப்பதை சொல்ல ! ////

ஹி ஹி ஹி .., கவிதை எழுததெரியாத பலபேர் இந்த வரிகளை உபயோகப்படுத்தி தப்பிச்சுக்கலாம் அவரவர் காதலிகளிடமிருந்து ..!
கலக்குறீங்க தல ..!

-----------------------------------------------------------------------------------------------



-என்ற பதிவிற்கு tamildailylib  தளத்தின் உரிமையாளர் krishy எழுதிய விளம்பர கருத்துக்கு நான் பதில் அளித்து இருந்தேன் அதற்கு அன்பர் வரலாற்று சுவடுகள்  கருத்தை கீழே பாருங்க   
வரலாற்று சுவடுகள்said...

//@krishy//போங்க பாஸ் இருக்குற ஒட்டுபட்டையிலேயே யாரும் ஒட்டு போட மாட்றாங்க///////
@PREM.S, பிரேம் அண்ணே மனசை தளர விடாதீங்க, confidence வேணும்னே, அது ரொம்ப முக்கியம். நான் ஒரு ஒட்டு போட்டுருக்கேன் பாருங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..!
 ------------------------------------------------------------------------------------------------



தாதா இனி IPL கோதாவில் இல்லை !

-என்ற பதிவிற்கு தனது உண்மையான கருத்துக்களால் எனை ஈர்க்கும் அன்பர் பிரபாகரனின் கருத்தும் எனது பதிலும் !


Philosophy Prabhakaransaid...
என்னதிது... கவிதை இல்லாம வேற ஒரு genre வந்திருக்கு...

PREM.Ssaid...
@ Philosophy Prabhakaran//கூட்டத்த வர வைக்க தான் பாஸ் அதில்லாம கிரிக்கெட்ல ஆர்வம் உண்டு அதான் .
----------------------------------------------------------------------------------------------
.

-என்ற பதிவில் அன்பர் ரெவரி எனது தளத்தை அவரின் உலவியில் காண முடிய வில்லை என்று தெரிவித்திருந்தார் .அனைத்து உலவிகளுக்கும் ஏற்ற தளமாக தான் இந்த template உள்ளது என நினைத்தேன் அவர் கூறும் முன்பு வரை !

ரெவெரிsaid...

  They don't deserve to be there Prem...I see only your outer frame in my browsers...

Complete post showsup only on my phone....
 --------------------------------------------------------------------------------



-என்ற பதிவில் தொடர்ந்து ipl செய்திகளாய் போட்டு வந்ததை அன்பர் வரலாற்று சுவடுகள் சுட்டி காட்டினார் .இதனால் தான் சென்னையை கொளுத்தியது கொல்கத்தா என்ற பதிவு வெளிவரவில்லை

வரலாற்று சுவடுகள்said...
என்ன தல நியூஸ் போட ஆரம்பிச்சுட்டீங்க ..!
PREM.Ssaid...
@வரலாற்று சுவடுகள்//இத போடுறதுக்கே ஒரு மணி நேரம் ஆச்சு பாஸ் போட்டோ crop பன்றது எடிட் பன்றதுன்னு ஏகப்பட்ட வேலை ஏதோ ஒரு ஆசை தான் நமது பதிவை தளத்தை நிறைய பேர் படிக்க பார்க்க வேண்டும் என்று .. 
 ----------------------------------------------------------------------------
மேற்கண்ட கருத்துகள் தவிர பலர் கருத்து அளித்து இருந்தாலும் கடந்த மே மாத பதிவுகளில்  நிறை குறைகளை சுட்டி காட்டிய அன்பர்  வரலாற்று சுவடுகள் தளத்திற்கு மே மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுத்து இருக்கிறேன் .
அவரின் தளம் இன்று முதல் இந்த மாதம் முழுவதும் எனது தளத்தின் sidebar இல் இலவச விளம்பரபடுத்த இருக்கிறேன் . தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அன்பர்களே  நன்றி !



Saturday, May 26, 2012

விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்தது சென்னை

விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது சென்னை.

சென்னையின்  இமாலய வெற்றி இலக்கான 223 ரன் இலக்கை  துரத்த முடியாமல் 136 ரன்களுக்குள் சுருண்டது டெல்லி



போட்டியின் சில சுவாரசியங்கள் :

  • இரு சதங்கள் IPL இல் கண்ட முதல் இந்தியன் என்ற பெயரை பெற்றார் முரளி விஜய்
  • 13 போட்டிகளில் விளையாடி 294 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் .இந்த சதமே அவரது சிறப்பான ஆட்டம் இந்த IPL இல் ,113(58)
  • அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்
  • இந்த  IPL 5 இன் அதிக பட்ச ஸ்கோர் இன்றைய 222 ரன்கள் தான் .
  • டெல்லியில் ஜெயவர்த்தனே மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார் 55(38)
  • ஷேவாக் 1 ரன்களுடன் வெளியேறினார் 

லீக் போட்டிகளில் முதல் இடத்தில்  இருந்த டெல்லியை இறுதி இடத்தில் இருந்த சென்னை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது கொல்கத்தாவுடன் விளையாட ..

உங்கள் பார்வைக்கு :

 

பில்லா -2 (BILLA-2) பாடல்கள் ஓர் அலசல்


Thursday, May 24, 2012

மும்பையை முடக்கியது சென்னை

நேற்று  நடந்த PLAYOFF ELIMINATOR போட்டியில் மும்பையை எளிதாக வீழ்த்தி முடக்கியது சென்னை .வரும் வெள்ளி அன்று இறுதி போட்டிக்கான தகுதி போட்டிக்கு டெல்லியுடன் விளையாடுகிறது சென்னை .



போட்டியின் சில சுவராசியங்கள்

  • ஆரம்பத்தில் படுமந்தமாக விளையாடினாலும் தோனியின் இறுதி கட்ட அதிரடியால் 188 ரன்கள் வெற்றி இலக்காக நியமித்தது சென்னை 
  • மும்பை அணியால் 149 ரன்களையே எடுக்க முடிந்தது .38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது மும்பை
  • சென்னையின் டோனி -பிராவோ  இணை 29 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது 
  • பிராவோ  14 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார்


  • இந்த IPL இல் தோனி யின் முதல் அரை சதம் இந்த போட்டியில் தான் 51*(20)
  • சச்சின் 11 ரன்களை மட்டுமே எடுத்தார் 
  • மும்பையின் ஸ்மித் மட்டும் 38 ரன்கள் எடுத்தார்
இதன் மூலம் இறுதி போட்டியில் விளையாடுவதற்கான தகுதி போட்டியில் டெல்லியுடன்  மோதுகிறது சென்னை .இதில் வெற்றி பெறும் அணி கொல்கத்தாவை இறுதி போட்டியில் சந்திக்கும் .





உங்கள்  பார்வைக்கு :
 


Monday, May 21, 2012

அதிர்ஷ்டத்தில் நுழைந்தது சென்னை PLAYOFFக்கு..

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சென்னை பக்கம் தோனி பக்கம் உண்டு IPL இல் ..அது இந்த முறையும் நடந்து விட்டது .PLAYOFF இல் நுழையுமா இல்லையா என்ற கேள்விக்கு பெங்களூர் டெக்கானிடம்   தோற்றதும்  விடை கிடைத்து விட்டது 
IPL 5 DHONI,CHENNAI SUPER KINGS



  • டெக்கானின் 133 ரன்  இலக்கை துரத்த முடியாமல் தோற்றது ஆச்சர்யம் தான் .கெயில் இன்னும் கொஞ்சம் நின்றிருந்தால் வெற்றி பெற்று இருக்கும் 10 பந்துகளுக்கு 27 ரன்களுடன் வெளியேறினார்.
  • கோலி 42, திவாரி 30 எடுத்தும் பின்னர் வந்த வீரர்களின் ஆட்டத்தால் இலக்கை துரத்த முடியாமல் சென்னை அணிக்கு வழிவிட்டு விலகியது பெங்களூர் .
  • முன்னதாக டெக்கானின் டும்னி இல்லையேல் டெக்கான்  இதைவிட குறைவான இலக்கையே நிர்ணயத்திருக்கும்74(53)
  • முதல் மூன்று இடங்களுக்கு போட்டி அவ்வளவாக இல்லை நான்காவது இடத்துக்கு மல்லுக்கட்டிய அணிகளில் கடைசியில் டெக்கானின் புண்ணியத்தால் சென்னை PLAYOFF க்கு நுழைந்து  இருக்கிறது .
  • 8 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை ,பெங்களூர் ,பஞ்சாப் அணிகளில்  NET RUN RATE +0.100 ஆக இருப்பதால் அதிர்ஷ்டத்தில் சென்னை PLAYOFF இல் நுழைந்து விட்டது .மற்ற இரு அணிகளின் ரன் ரேட் - இல் ..

இறுதிகட்ட புள்ளி நிலவரம் கீழே 

IPL 5 STANDINGS


PLAYOFF போட்டிகள் விவரம் கீழே 

IPL 5 PLAYOFF MATCHES


மும்பை யை சென்னை Eliminator சுற்றில் சந்திக்கிறது .இதில் தோற்கும் அணி இறுதி போட்டியில்  ஆட முடியாது .வெற்றி பெறும் அணி இன்னொரு போட்டியில் விளையாடி இறுதி போட்டியில் சந்திக்கும்  

உங்கள்  பார்வைக்கு :


Saturday, May 12, 2012

தாதா இனி IPL கோதாவில் இல்லை !

கொல்கத்தா தாதா என அழைக்கப்படும் சௌரவ் கங்குலி நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்க படவில்லை ,இனி வரும் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு IPL போட்டியிலும்  புனே அணிக்கு கங்குலி இல்லை என புனே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

நேற்றை போட்டி வரை அந்த அணி 8  வது இடத்தில்  உள்ளது .இதனால் கடுப்படைந்த புனே அணி நிர்வாகம் அவருக்கு கட்டாய ஒய்வு கொடுத்துள்ளது

கங்குலி ,புனே

கங்குலி இந்த IPL இல் விளையாடிய விதம் கீழே

  • 13 போட்டிகளில் விளையாடி உள்ள கங்குலி 261 ரன்கள் எடுத்துள்ளார் .அதிக பட்சம் 45. 
  • ஒரு அரை சதமும் காணவில்லை
  • 13 போட்டிகளில் விளையாடி 8 ஓவர்கள் மட்டுமே பந்து  வீசி உள்ளார் .2 விக்கெட்  மட்டுமே எடுத்துள்ளார்
  • தொடக்க போட்டிகளில் சிறப்பாக வழிநடத்திய கங்குலி தொடர்ந்து போட்டிகளில் தோல்வி கண்டதால் ஆட்டம் கண்டுள்ளார் 

தோனியை இழுத்த கங்குலி

  • தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு ஏற்க முடியாது.அணியில் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வில்லை .
  • கடந்த உலக கோப்பையில் டோனி கடைசி வரை பார்மில் இல்லை .இருப்பினும் மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தான்  கோப்பை வெல்ல முடிந்தது என்றார் .
  • IPL 5 முடியும் வரை நான் தான் அணி தலைவனாக தொடர்வேன் என நகைச்சுவை செய்துள்ளார்  அவரை நீக்கிய பிறகு ,,
எது எப்படியோ கண்களை பிதுக்கி கொண்டு மைதானத்தில் அவர் ஆடும் அழகை  இனி ரசிக்க முடியாது IPL இல் .தாதா இனி IPL கோதாவில் இல்லை ..


உங்கள்  பார்வைக்கு :

Saturday, May 5, 2012

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி -கார்த்தி உடன்..

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி யின் டி ஆர் பி சற்று குறைந்ததும் நட்சத்திரங்களை காட்டி எகிற வைக்கும் விஜய் டிவியின் தந்திரம் பலிக்கவே செய்கிறது .

ஸ்ருதிஹாசன் ,விஜய் டிவி பிரபலங்கள் ,அஸ்வின் ஆகியோரை தொடர்ந்து  சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி யை வைத்து இந்த வாரம் நிகழ்ச்சி நடத்தினர்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ,கார்த்தி



அந்த நிகழ்ச்சியின் சில ரசனை தொகுப்புகள் 

  • வார  இறுதியில்( வியாழன்)  போடுவதற்கு கடந்த ஞாயிறு முதலே விளம்பரபடுத்தி வந்தனர் .
  •  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடித்து கொண்டே வந்தார் கார்த்தி
  • கார்த்தி  பேசுகையில் கார்த்தி இந்நிகழ்ச்சியை  நடத்தினால் எப்படி இருக்கும் என எனக்கு தோன்றியது அவ்வளவு கலகலப்பாக பேசினார்
  • கார்த்தி வெற்றி பெரும் தொகை உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஒரு அமைப்பிற்கு கொடுக்க படுவதாக கூறப்பட்டது
  • சூர்யா  கார்த்தியின் சிறு வயது சேட்டைகளை கார்த்தி விவரித்தார்
  • ரஜினியின் ரசிகர் என்று சொல்லி கொண்ட கார்த்தி சிறுவயதில் பில்லா பட பாடலுக்கு ரஜினி மாதிரியே  வீட்டில் ஆடியதாக தெரிவித்தார்
  • இந்த  நிகழ்ச்சியின் தொடர்ச்சி வரும் திங்கள் அன்று இரவு 9மணிக்கு தொடர்கிறது
  • வரும் திங்கள் முதல் இரவு 9  மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது . முன்பு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகியது .
நிகழ்ச்சியை பார்க்காத அன்பர்களுக்காக கீழே:





உங்கள்  பார்வைக்கு :

Friday, May 4, 2012

பில்லா -2 (BILLA-2) பாடல்கள் ஓர் அலசல்(பாடல் இணைப்புடன். )

பில்லா-2 பாடல்கள் பற்றியும் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் கீழே .மொத்தம் 6 பாடல்கள் ,1 மெலடி ,2 THEME மியூசிக் பாடல்கள் ,3 CLUB பாடல்கள் என கலவையாக பில்லா -2 பாடல்கள்

BILLA-2 ,AJITH


GANGSTER

பில்லா  புகழ் பாடும் பாடல்

"DON DON DON மிரளும் DON DON டானுக்கெல்லாம் டான் இந்த பில்லா  தான் 
,DON DON DON அதிரும் DON DON சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான் ""

எமனுக்கே  தெரியாமல் பயம் காட்டுவான் 

--போன்ற வரிகள் அஜித் ரசிகர்களை குஷிபடுத்தும்

பில்லா தீம் MUSIC இந்த பாடலில் வருகிறது 

பாடல்  கேட்க
 
BILLA  தீம் MUSIC 

பழைய BILLA பாடல் இசையை சற்று மெருகேற்றி தந்துள்ளனர் ரசிக்கலாம்

பாடல்  கேட்க 

இதயம் இந்த இதயம் ...

அருமையான மெலடி .குரல் மயக்குகிறது ,இதயத்தை பற்றி புட்டு புட்டு வைக்கிறார் பாடல் ஆசிரியர்

BILLA-2  HEROIN

பாடலில் நான்  ரசித்த வரிகள்

"ஆசை தூண்டிலில் மாட்டி கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே !" "

"வேண்டும் வேண்டும் என்று கேக்கையிலே
வேண்டாம்  வேண்டாம் என்று சொல்லுமே !
வேண்டாம்  வேண்டாம் என்று சொல்கையிலே 
வேண்டும் வேண்டும் என துள்ளுமே"

 

பாடல்  கேட்க


மதுரை பொண்ணு எதிரில் நின்னு ..

பில்லா வில் நமீதா பாடும் பாடல் போல இது .ஒரே ஒரு வித்தியாசம் கிராமத்து வாசனை பாடல்  வரிகளில் ..

உன்  காதல் இங்கு செல்லாதாடா 
உன் காசு அது  மட்டும்  செல்லுமடா

இந்த வரிகளே இப்பாடல் எப்படி என சொல்லிவிடும்

பாடல்  கேட்க 

ஏதோ ஏதோ ..

BILLA-2  AJITH

இதுவும் முந்தைய பாடல் போல தான் .கிளப் களில் நடப்பது போன்று யூகிக்க முடிகிறது

பாடல்  கேட்க 

உனக்குள்ளே மிருகம் ..

கொஞ்சம் உரக்கவே பாடுகிறார் பாடகர் .பில்லா தீம் MUSIC இந்த பாடலின் இடையில் தான் வருகிறது

பாடல்  கேட்க


உங்கள் பார்வைக்கு :