Friday, December 21, 2012

"SUNRISERS"-SUN குழுமத்தின் புதிய IPL அணியா?


சன் குழுமம் கால் பதிக்காத துறைகளுள் கிரிக்கெட்டும் ஒன்று.தற்போது அதிலும் தனது முத்திரையை குறிக்க களம் இறங்கி விட்டது




  • பணம் கொழிக்கும் IPL இல் நீக்கப்பட்ட DECAN CHARGERS க்கு பதிலாக களம் இறங்கியிருப்பது தான் SUNRISERS IPL TEAM .இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் விளம்பரம் இப்போது சன் நெட்வொர்க்கில் வெளியாகி இருப்பதை காணலாம் 
  • சூரியனை வெறித்து பார்க்கும் கழுகு போன்று அதன் லோகோ உள்ளது 


  • வருடத்துக்கு 85.05 கோடி கொடுத்து 5 வருடங்களுக்கு வாங்கி இருக்கிரது 
  • பயிற்சியாளராக ஆஸ்திரேலியா வை சேர்ந்த TOM MOODY நியமிக்கபட்டு இருக்கிறார் 
  • ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்மன் MENTOR ஆக செயல்படுவர் 
SUNRISERS பற்றிய வீடியோ 


Wednesday, December 19, 2012

ஆங்கில பத்திரிகைகளில் உங்கள் தளம்....


ஆங்கில பத்திரிகையில் எனது தளத்தை பற்றி செய்தியுடன் எனது படமும் ..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கியதற்காக ரூபாய் நோட்டில் எனது படம் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

FBI AGENT ஆக இருந்த போது..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இறுதியாக ஒபாமா பாராட்டி விருது அளிக்கிறார் 



உங்கள் தளமும்  ஆங்கில பத்திரிகைகளில் வர வேண்டுமா ? ஒன்றும் செய்ய தேவை இல்லை..இந்த தளத்திற்கு  செல்லுங்கள்.உங்களுக்கு பிடித்த டிசைன் இல் உங்கள் போட்டோவை ஏற்றி நமது கனவுகளை எல்லாம் நனவாக்குங்கள் .
நமது முயற்சி இருந்தால் இவை எல்லாம் நிஜமாக கூட வாய்ப்பு உண்டு .முயற்சிப்போம் அன்பர்களே !

WINDOWS 8 பற்றி அறிய ஆவலா! கீழே கிளிக்குங்கள் 


Sunday, December 16, 2012

பதிவுலக சங்கங்கள்-ஒரு ஜாலி கற்பனை


பதிவுலகத்தில் பதிவர்களுக்கு தெரியாமலேயே பல சங்கங்கள் இயங்கி வருகிறது .அவை பற்றி ஒரு கற்பனை பதிவு .முழுக்க முழுக்க கற்பனையே 


வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இந்த சங்கம் நடிகர்  வடிவேல் வசம் இருந்தாலும் பதிவர்கள் வசமும் இருக்கிறது.உங்கள் கருத்தை ,ஓட்டை எதிர்பார்க்க மாட்டார்கள்.(உள்ளூர எதிர்பார்க்கலாம் )ஆனால் அவர்கள் கடமையை செவ்வனே செய்வார்கள்.கருத்து ,ஓட்டை உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தருவார்கள் .நமக்கே அலுப்பாகி என்ன எல்லா பதிவுக்கும் வாரானே நாமளும் போவோம் என தோன்ற வைத்து விடுவார்கள்


மொய்க்கு மொய் வைப்போர் சங்கம்

இந்த சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான பதிவர்களின் தளத்தில் நீங்கள் கருத்திட்டால் உடனடியாக உங்கள் பதிவுக்கு கருத்து இடப்படும் .நீங்கள் பதிவே எழுதாமல் பல மாதங்கள் ஆகி இருந்தால் கூட உங்கள் பழைய பதிவுக்கு கருத்து போடுவார்கள் .அவ்வளவு நல்ல பதிவர்கள்

மொய்க்கு மொய் வைக்காதோர் சங்கம்

இந்த சங்கத்தில் உள்ளவர்கள்  பணி பதிவு போடுவதே .கருத்து இடுவது அல்ல.மொய்க்கு மொய் கிடைக்காது .இருப்பினும் அந்த தளங்களில் நீங்கள் கருத்திட்டால் நீங்களும் பிரபல பதிவராகும் வாய்ப்பு உண்டு .




ஓட்டுக்கு ஓட்டு சங்கம்

மொய்க்கு மொய் சங்கத்தின் கிளை இது .ஒரு பதிவுக்கு நீங்கள் ஒட்டு போட்டால் அவர்களும் ஓட்டு போடுவார்கள் போடவில்லையெனில் நமக்கும் கிடைக்காது

ஓட்டுக்கு ஓட்டு போடாதோர் சங்கம்

நீங்க என்ன தான் மாங்கு மாங்குன்னு ஓட்டு போட்டாலும் உங்களுக்கு இந்த சங்கத்தில் உள்ளவர்கள் ஓட்டு போடமாட்டார்கள்.கருத்தும் கிடைக்காது .இருப்பினும் நீங்களும் பிரபலமாக வாய்ப்பு உண்டு

இது தவிர மேலும் பல சங்கங்கள் உண்டு ஆனால் அது தேவை இல்லை என நினைக்கிறேன் .இப்பதிவு உண்மையாக தெரிந்தாலும் முழுக்க முழுக்க கற்பனையே .

நீங்கள் எந்த சங்கத்தில் இருக்கீறீர்கள்  என கருத்துரையில் தெரிவியுங்கள் அன்பர்களே !

உங்கள் பார்வைக்கு :



Saturday, December 15, 2012

4tamilmedia.com இல் எனது WINDOWS 8 பதிவுகள்


WINDOWS 8 பற்றி மூன்று தொடர்பதிவுகள் எழுதி இருந்தேன் .அதில் இரண்டை தங்களது தளத்தில் பிரசுரிக்க அனுமதி கேட்டு அனைத்து விதமான செய்திகளையும் பகிர்ந்து வரும் தளமான WWW.4TAMILMEDIA.COM சார்பாக மின்னஞ்சல் வந்தது.



நான் அனுமதி அளித்ததை தொடர்ந்து அந்த பதிவுகள் டிசம்பர் 12 அன்று மீள்பிரசுரிக்கபட்டது.அந்த பதிவின் இணைப்பு கீழே







WINDOWS 8 தொடர்பான எனது பதிவுகள் 

முதல் பதிவு :

 



இரண்டாம் பதிவு :






மூன்றாம் பதிவு :

 




எனது பதிவுகள் மற்றொரு  தளத்தில் பதிவாவது  இதுவே முதல்முறை .அதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் 

பிரேம்குமார்.சி 


Tuesday, December 11, 2012

ஸ்பைடர்மேனை காப்பாற்றிய ரஜினி


ரஜினி   தமிழ்கதாநாயக தோற்றத்தையே மாற்றி அமைத்தவர் .63 வது பிறந்த நாள் கொண்டாடும் ரஜினி பற்றி நெட்டில் உலவும் வீடியோ க்கள் பற்றி இந்த பதிவு .இது பற்றி  அவரிடம் கேட்டபோது  இன்றைய இளைய தலைமுறையினர் அபார படைபாற்றல்  மிக்கவர்கள் என கூறியதாக விகடன் தெரிவிக்கிறது


SPIDERMAN  ஐ காப்பாற்றும் ரஜினி 

  • விண்வெளியில் இருந்து வந்துள்ள புதிய உயிரியை அளிக்க SPIDERMAN  எவ்வளவோ முயன்றும் முடியாமல் ரஜினிக்கு போன் செய்கிறார் SPIDERMAN .
  • ரஜினி எரிமலையின்  மேல் நின்று கொண்டு புகை பிடித்து கொண்டிருக்கிறார் .SPIDERMAN  போன்  கண்டதும் அங்கு செல்லும் ரஜினி ராக்கெட்  கொண்டு அந்த உயிரியை ராக்கெட்டில் அடைத்து விண்வெளிக்கே திருப்பி அனுப்பி உலகை காக்கிறார் .இதான் இந்த வீடியோவின் கதை  பாருங்கள்  ரசியுங்கள் 



BADLUCK  ரஜினிக்கு இல்லை 

  • இது IDBI  வங்கிக்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம்..ரஜினி தங்கச்சி கல்யாணம் ,அம்மா கண் ஆபரேசனுக்காக  உண்டியலில் பணம் போடுகிறார் 
  • அப்போது வந்த வில்லன் பணத்தை பறித்து கொண்டு ஓடுகிறான் காரில் துரத்தி செல்லும் ரஜினி NOPARKING  முன்பு வந்து PARK  செய்கிறார் NOPARKING  இல் உள்ள NO  வை கண்களால் அளித்து விட்டு ..
  • வில்லன் கோலி  குண்டு விளையாட  அழைக்கிறான் .ரஜினி வீசிய கோலி  குண்டு வானில் உள்ள கிரகங்களில்  எல்லாம் மோதி இறுதியில்  வில்லனின்  கோலி  குண்டை பதம் பார்க்கிறது .
  • வில்லன்  துப்பாகியால் சுடுகிறான் .குண்டு  ரஜினியின் ஒரு  காது வழியாக நுழைந்து  இன்னொரு காது வழியாக வெளி வந்து வில்லனை கொல்கிறது  .இது தான் இந்த வீடியோவின் கதை கண்டிப்பாக பாருங்கள் மனம் வீட்டு சிரிக்கலாம் 



புலியை காப்பாற்றும் ரஜினி :
காட்டில் வீரப்பன் புலியை துப்பாக்கி கொண்டு சுடுகிறார்  அப்போது அங்கு வரும் ரஜினி தோட்டாவை PARLE -G BISCUT  கொண்டு பிளந்து புலியை காப்பாற்றுகிறார் .




இன்னும் பல வீடியோக்கள் YOUTUBE  இல் கொட்டி கிடைக்கிறது பார்த்து ரசியுங்கள்

உங்கள் பார்வைக்கு :

Friday, December 7, 2012

விஸ்வரூபம் பாடல்கள் -ஓர் அலசல்


விஸ்வரூபம் பட பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.விஸ்வரூபம் என தொடங்கும் பாடல்  தவிர மற்ற  அணைத்து பாடல்களிலும்  கமல் இணைந்து பாடியிருக்கிறார்

மொத்தம் 5 பாடல்கள்( REMIX பாடலையும் சேர்த்து )பாடல்கள் பற்றி எனது எண்ணமும் பாடல் இணைப்பும் கீழே .Shankar-Ehsaan-Loy இசை அமைத்துள்ளார் 

உன்னை காணாது :
  • கமல் ,ஷங்கர் மகாதேவன் இணைந்து பாடி உள்ளனர் , கமல்  எழுதி உள்ளார் 
  • மெல்லிசை பாடல்.கமலின் இசை வரிகளோடு ஆரம்பிக்கிறது .
  • தசாவதார முகுந்தா முகுந்தா பாடல் போல உள்ளது  கிருஷ்ணர் பெருமை பாடுகிறது கமல் நாத்திகரா ஆத்திகரா கடவுளுக்கே வெளிச்சம்
ரசித்த வரிகள்

உடல் அணிந்த ஆடை போல
எனை அணிந்து கொள்வாயா
இனி நீ இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணின்
துகில் உரித்த கண்ணன் தான்
 இனி நீ இனி நீ



விஸ்வரூபம் 
  • சுராஜ் ஜகன் பாடியுள்ளார்  வைரமுத்து எழுதி உள்ளார் 
  • அடி தொண்டை வலிக்க பாடுகிறார் பாடகர்

ரசித்த வரிகள் 

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே  கிடப்பான்
வெட்டு படும் வேலையில்  வெளிப்படும் விஸ்வரூபம்

எந்த ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்
சொந்த ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்



விஸ்வரூபம் -REMIX

மேலே கண்ட பாடலின் REMIX இது .பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் தெரிய வில்லை



துப்பாக்கி எங்கள் தோளிலே

  • பென்னி தையல் ,கமல் பாடியுள்ளனர்  வைரமுத்து எழுதி உள்ளார் 
  • ஆங்கில பாடல் போல ஆரம்பிக்கிறது 

ரசித்த வரிகள் 
எங்களில் கையில் ஆயுதங்கள்  இல்லை
ஆயுதங்கள்  கையில் எங்கள் உடல் உள்ளது



அணு விதைத்த பூமியிலே :

  • கமல் ஹாசன் நிகில் பாடியுள்ளனர் கமல்  எழுதி உள்ளார் 
  • மெல்லிய சோக பாடல் இது 

WINDOWS-8 பற்றி அறிய ஆவலா ?கீழே கிளிக்குங்கள் 

Thursday, December 6, 2012

SUPER SINGER T-20 எப்படி ?-ஓர் அலசல் ..


விஜய் டிவியில் SUPER SINGER JUNIOR-3 முடிந்து சில மாதங்களுக்குள்  SUPER SINGER சீனியர் ஆரம்பிப்பதற்கு மாற்றாக   SUPERSINGER T-20 என்ற ஒரு நிகழ்ச்சியை தற்காலிகமாக நடத்தி கொண்டிருக்கிறது .அந்த நிகழ்ச்சி எப்படி என்பதே இந்த பதிவு



நிகழ்ச்சி எப்படி ?


  • மா.கா.பா வுடன் இந்த முறை திவ்ய தர்ஷினி நிகழ்ச்சியை இணைந்து தொகுத்து வழங்குகிறார் .முதலில் திவ்ய தர்ஷினி மட்டுமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சில வாரங்களுக்கு பின்பு மா கா பா இணைந்தார் 
  • ஒவ்வொரு அணிக்கும் தனி தனி நிறங்களாய் கொண்ட அணியாய் பிரித்துள்ளனர் 

  • சூப்பர் சிங்கர் சீனியர் ,ஜூனியரில் பாடிய பெரும்பான்மையானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர் 
  • T-20 கிரிக்கெட் இல் வழங்க படும் விருதுகளை போல இதிலும் தரப்படுகிறது .அதிக மதிப்பெண்கள் பெற்ற தனி நபருக்கு ORANGE CAP வழங்கப்படுகிறது 
  • இரு இரு அணிகளாக மோதுகின்றன .போட்டி தொடங்க TOSS போட்டு பார்க்கப்படுகிறது 
  • பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதணும் ஜட்ஜ் ஆக  மாறிவிட்டார் இந்த நிகழ்ச்சியில்  ...
மொத்தத்தில் சீனியர், ஜூனியர் இருவரும் இணைந்து பாடுவதால் நிகழ்ச்சி கலகலப்பாக தான் இருக்கிறது .திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் இதை காணலாம் ..

Monday, December 3, 2012

WINDOWS 8 -APPLICATIONS,மற்றும் வசதிகள் ஓர் அலசல்


WINDOWS 8 ஓர் APPLICATION கடை என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு APPLICATION கள் நிறைந்து   காணப்படுகிறது .NOKIA வின் OVI STORE போன்று ..
WINDOWS 8 APPLICATION மற்றும் GAME களை தரவிறக்க மைக்ரோசாப்ட் மெயிலில் உறுப்பினராகி முந்தைய பதிவில் சொன்னது போல  செய்து கொள்ளுங்கள் .இந்த பதிவு சில அவசிய மற்றும் சிறப்பான APPLICATION களை குறிப்பிடுகிறது .



WINDOWS STORE

  • இது தான் அனைத்துக்கும் முன்னோடி .உங்களுக்கு தேவையானஅனைத்தையும் இதில் பெறலாம் .
  • ஏகப்பட்ட FREE APPLICTION ,GAME கள் நிரம்பி  கிடைக்கின்றன.பதிவிறக்க MICROSOFT MAIL இல் உறுப்பினராதல் அவசியம்


READER
  • ADOBE READER க்கு மாற்றாக WINDOWS 8 இல் இணைந்துள்ள புதிய வசதி இது .
  • PDF FILE களைமுழு அளவில் திரை முழுவதும் நிரப்பி காண்பிக்கிறது .ADOBE READER யை விட சிறப்பான ஓன்று 
  •  பெரிதாக்கி காட்டும் வசதியும் இருக்கிறது .PRE-LOADED ஆக இணைக்கபட்டிருக்கிறது .இல்லையெனில் WINDOWS STORE மூலமாகவும் பதிவிறக்கலாம் 

INTERNET EXPLORER 10
  • BROWSER உலகில் புதியது என நினைக்கிறேன் .WINDOWS 8 க்கு என்றே பிரத்யேகமாய் அமைக்கபட்டு இருக்கிறது .இதை பெற INTERNET EXPLORER BROWSER ஐ நீங்கள் DEFAULT BROWSER ஆக தேர்ந்து எடுத்திருக்க வேண்டும் இல்லையெனில் IE9 ஆகவே காட்சி அளிக்கும் .
  • முழு திரையில் இணையத்தில் உலவ சிறப்பானதாக இருக்கிறது .இணைய வேகம் சிறப்பாக இருந்தால் இதனை சிறப்பாக பயன்படுத்தலாம்.தொடு திரை கணினியில் மிக சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
  •  இணைய தள முகவரியை ப்ரௌசெர்  கீழ் டைப் செய்யும் படி அமைக்க பட்டு இருக்கிறது
IE 10 இல் எனது தளம் ..

GOOGLE
  • உங்கள் கணினி WINDOWS 8 இருக்கிறது  என தெரிந்ததும்  GOOGLE தளத்தை திறந்தால் அதில் WINDOWS 8 காண பிரத்யேக  GOOGLE APPLICATION யை பதிவிறக்க வழி சொல்லும் .அதை பதிவிறக்கி முழுமையான சிறப்பான பலனை  பெறலாம் முழு திரையில் ..

VIDEO,MUSIC
  • நாம் தேர்ந்தெடுக்கும் வீடியோ ஆடியோ FILE களை இயக்க இனி VLC MEDIA PLAYER யும் WINAMP யையும் நாட வேண்டிய அவசியம் இல்லை அதற்கு என்றே தனியாக APPLICATION விண்டோஸ் 8 இல் உருவாக்கபட்டுள்ளது .
  •  விண்டோஸ் 8 பதிவிறக்கியவுடன் ஒரு VIDEO FILE யை திறக்கும் போது எதை கொண்டு இயக்க விரும்புகிறீர்கள் என கேட்கும் அதில் VIDEO வை தேர்ந்து எடுத்தால்  இந்த APPLICATION யை பெறலாம்
OFFICE 365
WINDOWS 8 க்கு என்றே அமைக்கபட்டுள்ள OFFICE இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம் .இதில் உள்ள அம்சங்கள்
WORD 2013,EXCEL 2013,POWERPOINT 2013,ONE NOTE 2013மற்றும் பல ..

 முந்தைய பகுதிகள் 





Sunday, November 18, 2012

WINDOWS 8 வாங்கிய பின் செய்ய வேண்டியது என்ன ?

இந்த பதிவை படிக்கும் முன் WINDOWS 8 வாங்குவது பற்றிய எனது முந்தைய பதிவை WINDOWS 8- வாங்கும் முன் செய்ய வேண்டியது என்ன ?ஓர் அலசல்  படித்து விட்டு வாருங்கள் இப்பதிவு WINDOWS 8 வாங்கிய பின் செய்ய வேண்டியவைகளை குறிப்பிடுகிறது



WINDOWS 8 வாங்கி இன்ஸ்டால் செய்த பிறகு நீங்கள் உங்கள் கணினிக்கு அமைத்த PASSWORD ஐ கொண்டு உள்நுழையுங்கள் .

PICTURE PASSWORD
WINDOWS 8 இல்  உள்ள புதிய அம்சம் இது இதன் மூலம் நீங்கள் ஒரு படத்தை தேர்ந்து எடுங்கள் அதில் வட்டம் நேர்கோடு வரையுங்கள் எந்த இடத்தில்  வரைகிறோம்  என்பதை அதன் அளவை நினைவில் கொள்ளுங்கள் .


கணினியில் வலது மூலையில் கர்சரை கொண்டு சென்றால் கீழ்க்கண்டதை   போன்று வரும் .அதில் தேவையானதை தேர்வு செய்யலாம்


.
இடது மூலையில் கர்சரை கொண்டு சென்றால் இயக்கத்தில் உள்ள APPLICATION களை காட்டும் அதில் RIGHT CLICK செய்து CLOSE செய்யலாம்


MICROSOFT MAIL இல் உறுப்பினராவது பல வசதிகளை தரும் .உறுப்பினர் ஆகி கொண்டு வலது மூலையில் கர்சரை கொண்டு கீழே SETTINGS செல்லுங்கள் அங்கு  CHANGE PC SETTINGS செல்லுங்கள்



அங்கு SWITCH TO MICROSOFT ACCOUNT என்பதை தேர்வு செய்யுங்கள் .உங்கள் MICROSOFT MAIL PASSWORD கொண்டு உள்நுழையுங்கள்  அவ்வளவு தான் இனி உங்கள் கணினி க்கு மைக்ரோசாப்ட் MAIL PASSWORD  கொண்டு நுழையலாம் .இதன் மூலம் பல GAMES ,APPLICATION பதிவிறக்க முடியும்
\

மொழி பிரச்சனை 

கணினியை அதன்  பிறகு மீண்டும் துவங்குகையில் இணைய இணைப்பு MBLAZE,AIRCEL TONGLE போன்றவை மூலம் பெற்று இருந்தால் YOUR PC IS OFFLINE PLEASE ENTER OLD PASWORD என்று காட்டும் அப்போது மொழியை ENGLISH(UK) இல் இருந்து ENGLISH(US) க்கு மாற்றுங்கள் இப்போது எந்த பிரச்சனையும் இருக்காது .

APPLICATION  TILE 

WINDOWS 8 SCREEN இல் APPLICATION கள் TILES போன்று பதியபட்டிருக்கும் அதில் RIGHT CLICK செய்து சிறிதாக்கி அல்லது பெரிதாக்கி கொள்ளலாம் .APPLICATION களை DRAG செய்து நமக்கு விருப்பபடி வைத்து கொள்ளலாம்


WINDOWS 8 இல் LOCKCREEN ,START SCREEN  என்ற இரண்டு உள்ளது அதில் நமது விருப்பட்ட படங்களை வைத்து கொள்ளலாம்

இதற்கு முந்தைய பகுதி :






விரைவில் 

  • WINDOWS 8 வசதிகள் ஒரு விரிவான அலசல் 

Sunday, November 11, 2012

WINDOWS 8- வாங்கும் முன் செய்ய வேண்டியது என்ன ?ஓர் அலசல்

WINDOWS 8 பற்றி இணையத்தில் படித்ததில் இருந்து அதை பயன்படுத்த ஆசை உண்டானது .WINDOWS  8 பற்றியும் அதன் வசதிகள் பற்றியும் மேலும் எனது  சுக துக்க அனுபவங்கள் பற்றியும் எழுதலாம் என நினைக்கிறேன்  .

இப்பதிவின் நீளம் கருதி தொடராக அடுத்தடுத்து வெளியிட உள்ளேன் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது


WINDOWS 8 வாங்கும்முன்..


  • MICROSOFT  இன் மெயிலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.இது பல APPLICATION,GAMES யை தரவிறக்க உதவும் 
  • விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் எதுவும் அழியாது. 
  •  மற்ற விண்டோஸ் வெர்சன்களில் இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும்.
  • WINDOWS 8 வாங்கும் முன் உங்கள் கணினி அதற்க்கு ஏற்றதா என கண்டறிய இந்த WINDOWS 8 UPGRADE ASSISTANT தரவிறக்கி கொள்ளுங்கள் .இது உங்கள் கணினி ஏற்றதா எவை விண்டோஸ் 8ஏற்று  கொள்ளாது  என காட்டும் .
  • பின்னர் WINDOWS 8 வாங்க CREDIT CARD ,PAYPAL  மூலம் இணையத்தில் பெறலாம் 
  • விண்டோஸ் 7 PC யை ஜூன் 2 ,2012 க்கு பிறகு வாங்கி இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் WINDOWS 8க்கு மாற   699 ரூபாய் செலுத்தினால் போதும்    (You must purchase a qualifying Windows 7 PC between 2 June 2012 and 31 January 2013 to be eligible for this offer. The last day to register and order your Windows 8 upgrade is 28 February 2013.)
  • மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்
  • இந்த நாட்களில் கணினி வாங்காதவர்கள் ரூபாய் 1990 செலுத்தி வாங்கலாம் 

சுக துக்க அனுபவங்கள் 
  • WINDOWS 8 UPDATE செய்ய முடிவு செய்திருந்தால் அதை டவுன்லோட் செய்ய உங்கள் இணைய இணைப்பு சிறப்பாக இருந்தால் நல்லது .இல்லையேல் 2 நாட்களுக்கு மேல் கூட ஆகலாம் .மின் இணைப்பும் அவசியம் (எனக்கு அப்படி தான் ஆனது )
  • இல்லையேல் 2GB FREE DOWNLOAD க்கு RECHARGE செய்யவும் .குறைந்தது 6 மணி நேரத்தில் DOWNLOAD ஆகும் 
  • மிக மெதுவான இணைய இணைப்பால் எனக்கு 2 நாட்கள் பிடித்தது தரவிறக்க  !
மேலும் சுக துக்க அனுபவங்கள்  அடுத்தடுத்த பகுதிகளின் இறுதியில் ..


  • பகுதி -2 :

WINDOWS 8 வாங்கிய  பிறகு செய்ய வேண்டியது என்ன ?-மற்றும் அனுபவங்கள் 


  • பகுதி -3

WINDOWS 8 இன் சிறப்பம்சங்கள்  ஓர் பார்வை 


  • பகுதி -4





  • பகுதி -5