Tuesday, December 6, 2016

அம்மா -ஓர் கவிதாஞ்சலி !..




என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

தைரியத்தின் மறுபெயர்
தமிழகத்தின் திருஉயிர்
சமரசம் செய்து கொள்ளா
தலைவி நீ !


அரசியல் வெற்றிடம் இங்கே
அதை நிரப்புவார் எங்கே ?
எதிர்த்தோர் மனதிலும் 
ஓர் இடம் அனைவர் 
நெஞ்சிலும் நீங்கா இடம்!

என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

-முதல்வரின் மறைவிற்கு எனது கவிதாஞ்சலி


Wednesday, April 9, 2014

கோச்சடையான் -எங்கே ரஜினி ? ஓர் அலசல்


கோச்சடையான் தலைவரின் நடிப்பில் (?)அடுத்து  வர இருக்கும் படம் .ஆனால் அதில் ரஜினி நடித்திருக்கிறாரா என்பது அதன் trailor மற்றும் teaser பார்த்தாலே புரிந்திருக்கும் .மே 1 ரீலீஸ் என்பது புதிய தகவல்

என்ன தான் தொழில்நுட்ப புதுமை என்றாலும் எந்திரனை ஏற்று  கொள்ள முடிந்தது .அதில் ரஜினி தெரிந்தார் .ஆனால் இந்த படம் முழுவதும் ரஜினி நடிக்காதது போலவே இருக்கிறதே!முழுவதும் அணைத்து பாத்திரங்களும் animation வடிவிலயே அமைக்கப்பட்டு இருக்கிறது .

உதாரணத்திற்கு கீழே உள்ள படங்களை பாருங்கள் .அதில் எங்கே ரஜினி தெரிகிறார் .அனிமேஷன் ரஜினியின் அப்பட்டமாக தெரிகிறது

கோச்சடையான்,kochadaiyan,rajini,ரஜினி

கீழே உள்ள வீடியோவை பாருங்கள் .அதில் ரஜினியை அடையாளம் கண்டுபிடியுங்கள்



மேலே கண்ட TRAILOR இல் ரஜினி ரசிகர்கள் ஆறுதல் பட்டு கொள்ள கூடிய ஒரே அம்சம் தலைவரின்  குரல் தான் அந்த கம்பீர குரலுக்காக வேணும் இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வருவார்கள் என நினைத்தாரோ ரஜினி மகள்

கே.எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் இருந்து விலகிய போதே பலருக்கு புரிந்திருக்கும் இப்படம் ரஜினி படம் அல்ல அனிமேசன் படம் என்று ..

ரஜினி ஒரு பாடல் பாடியதாக அதிகம் விளம்பரப்படுத்தபட்டது.ஆனால் அவர் பாட வில்லை .வசனம்  பேசி இருக்கிறார் .

மொத்தத்தில் இது ரஜினி படம் இல்லை என்பதே உண்மை ஆனாலும்அனிமேசன் படம் பார்க்கவும் ரஜினி ரசிகன் முயல்வான் .ஆனால் மற்ற ரசிகர்கள் பார்ப்பார்களா? என்பது கேள்விகுறி தான் .

Saturday, December 21, 2013

பிரியாணி -" லெக் "பீஸ் கொஞ்சம் அதிகம் தான்

கார்த்தியின் முந்தைய படங்களின் மீதான நம்பிக்கையால் இந்த படத்தை பார்க்க போவதில் அவ்வளவு நாட்டம் முதலில் வர வில்லை .இருப்பினும் வெங்கட் பிரபு ஏதாவது பண்ணுவார் என்ற நம்பிக்கையில் போய் மாட்டி கொண்ட படம் இது


Sunday, December 8, 2013

"புது யுகம்" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..

நீண்ட நாட்களாக draft இல் தூங்கி கொண்டு இருந்த ஒரு பதிவு இது .புது யுகம் ஆரம்பித்த புதிதில் எழுதிய பதிவு .தற்போது தான் முழுமைபடுத்த முடிந்தது .புதிய தலைமுறை தொலைக்காட்சியிலிருந்து புறப்பட்டு இருக்கும் இந்த தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளில் இருந்து எவ்விதம் வித்தியாசம் பெறுகிறது என் பார்வையில் இங்கே .ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன்னோட்டமாக சிலர் பேச்சு வழக்கில் பேசுவது புதிது

Sunday, October 20, 2013

சரவணன் மீனாட்சி முடிந்ததா ?.....ஓர் அலசல்

சரவணன் மீனாட்சி

விஜய் டிவி சீரியல்கள் இளைஞர்களையும் பார்க்க வைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை அதிலும் இளைஞர்களை திக்கு முக்காட வாய்த்த சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி என்பதை மறுப்பதற்கில்லை.அந்த சீரியல் சமீப காலமாய்  எப்பொழுது முடியும் என ஏங்க வைத்தது.

Wednesday, October 9, 2013

ICE COFFEE செய்வது எப்படி பட விளக்கத்துடன் ஓர் அலசல் ..

ICE COFFEE,COFFE ICE CREAM

FACEBOOK இல் உலவி கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது தான்  இந்த ICE COFFEE.செய்முறை விளக்கங்கள் இல்லாவிடினும் படத்தை வைத்தே முயற்சித்து பாப்போம் என தோன்றியது .இனி விளக்கம் கீழே



தேவையானவை :

COFEE அதிகம் போட்டு விட்டால் கவலை வேண்டாம் அப்படியே அதை  ICE COFFEE ஆக மாற்றி விடலாம் .ICE BAR,FRIDGE,மற்றும் COFFEE இருந்தால் போதும்

எவ்வாறு செய்வது ?

COFFEE ICECREAM செய்வது எப்படி ?

COFFEE யை நன்றாக ஆற விடவும் .ஆறிய  பின்பு ICEBAR இல் ஊற்றவும் .சில மணி நேரங்களில் COFFEE  ஐஸ்  ரெடி .அதை அப்படியே சாப்பிட்டால் COFFEE ICECREAM  சாப்பிட்ட உணர்வு ஏற்படும் .காபி குடிக்கும் உணர்வு ஏற்படும் போது இதில் ஒரு கட்டியை  சாப்பிட்டாலே போதும்

 ICE COFFEE செய்வது எப்படி ?

பாலை கொதிக்க வைத்த  பின்னர் மிதமான சூட்டில் FRIDGE  இல் வைத்துள்ள ICEBAR இல் உள்ள COFFEE ஐஸ் கட்டிகளை உங்கள் தேவைகேற்ப இடுங்கள் .ஜில் ICECOFFE  READY.குளிர்ச்சியாகவும் அருமையாகவும் இருக்கும் .

கொசுறு :

இதே போல் MANGO ICECREAM செய்வதற்கு SLICE யை  ICEBAR இல் ஊற்றி வைத்தால் போதும் .இவை இரண்டும் நான் செய்து பார்த்து சாப்பிட்டு மகிழ்ந்த பிறகே இங்கே பதிகிறேன் .

உங்கள் பார்வைக்கு :

Monday, September 23, 2013

அஜித்தின் ஆரம்பம் பாடல்கள் எப்படி ஒர் அலசல் ..


ஆரம்பம்,அஜித்,AARAMBAM


அஜித்தின் ஆரம்பம் பட பாடல்கள்  சமீபத்தில் வெளியிடப்பட்டது .மொத்தம் 5 பாடல்கள் .பாடல்கள் பற்றிய எனது எண்ணமும் பாடல் கேக்க இணைப்பும்
கீழே



அடடா ஆரம்பமே ...

 சங்கர்  மகாதேவன் கணீர் குரலில் லயிக்கிறது   யுவன்  ராஜா இசை.துவக்க . பாடலாக இருக்கும்  என நினைக்கிறேன்.மற்றபடி  எதுவும் இல்லை .அஜித் ரசிகர்களுக்கு  பிடிக்கும்

ஆரம்பம்,அஜித்,AARAMBAM

*******************************************************************************
என் பியூசும்  போச்சு 

கார்த்திக், ரம்யா  பாடி உள்ளனர் .காதல் பாடல் .வித்தியாசமான காதல் பாடல் என்பது  கீழே உள்ள வரிகளை படித்தாலே புரியும்

முடியாதுன்னு சொல்ல முடியாது 
முடியாதுன்னு சொல்ல கூடாது 

 ராமன் நான் என்று  சொல்ல மாட்டேன் 
ஆனா உன்ன  தாண்டி செல்ல மாட்டேன் 

உன்ன நிலவுன்னு  ரீலா விட்டேன் 
உலக   அழகின்னு பொய்யா சொன்னேன் 
லவ் யு டார்லிங் ...

friend பேருல   ரூமா போட்டேன் 
அங்க இங்கன்னு தொடவா செய்தேன் 
லவ் தான்    கேட்டேன் 

ஆரம்பம்,அஜித்,AARAMBAM

****************************************************************************
ஹரே ராமா 

தன்வி ,கோபாலன் பாடியுள்ளனர் .டூயட் பாடல் மற்றபடி பெரிதாய் ஒன்றும் இல்லை இப்பாடலில் ..

ஆரம்பம்,அஜித்,AARAMBAM
*******************************************************************************
மேல வெடிக்குது 

ஸ்வேதா மேனன் ,விஜய் ஜேசுதாஸ் பாடி உள்ளனர் .இதுவும் மேலே உள்ள பாடல் போல தான்
ஆரம்பம்,அஜித்,AARAMBAM

***************************************************************************
ஸ்டைலிஷ் தமிழச்சி 

மாஞ்சி ருப்பா பேன்ட் பாடி உள்ளனர் .தமிழ் எங்கே என்று தேடும் பாடல் .முக்கால்வாசி ஆங்கிலம் கலந்த பாடல் பெயரில் தான்  தமிழச்சி பெரிதாய் ஒன்றும் இல்லை .

ஆரம்பம்,அஜித்,AARAMBAM

மொத்தத்தில்  என்னை பொறுத்தவரை கொஞ்சம் சுமார் தான் ஆரம்பம் பாடல்கள்

Friday, August 23, 2013

தலைவா உருவானது எப்படி? -ஓர் அலசல்



தலைவா விமர்சனங்கள் தாறுமாறாக திரைமணத்தில் படித்து இருப்பீர்கள்

.இது ஒரு வித்தியாசமான  விமர்சனம் .தலைவா எப்படி உருவானது கீழே

படியுங்கள்



தலைவா சமைத்த கதை.

தேவையான படங்கள் 

தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்
நாயகன் - ஒரு கிலோ
சர்க்கார் - அரை கிலோ
பாம்பே -1 துண்டு
தேவர்மகன் - 6 பல்
இந்திரா - ஒரு தேக்கரண்டி
பில்லா - அரை கப்
புதிய பறவை - கோபால் கோபால்மிக்ஸ் ஒரு டீஸ்பூன்
பொல்லாதவன் - தேவையான அளவு


கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து

 வதக்கவும்.இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன்

சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .பொன்னிறமாக வரும் 


போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில்

 வேகவைக்கவும்.


நன்றாக வதங்கியதும் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் நாயகன்


துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.நாயகன் வெந்ததும் அரைத்த


 சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் பொல்லாதவன்

தூவி இறக்கவும். தலைவா ரெடி.இந்த டிஸ்ஸை நீங்கள் விரும்பிய


திரையரங்கில் சாப்பிட்டு சாகலாம்.



மேலும் பல படிக்க FACEBOOK  இன் இந்த பக்கத்தில் இணைந்து  கொள்ளுங்கள்



Sunday, August 18, 2013

இணையத்தில் ஒரே நாளில் 10$ சம்பாதிப்பது சாத்தியமா ?-PROOF உடன் சாத்திய கூறுகள்


இணையத்தில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல .PTC  PAID TO CLICK தளங்கள் ஒன்றும் கொட்டி கொடுத்து விடுவதில்லை .பல போலியான தளங்களும் இருக்கின்றது .ஆனால் இத்தளம் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது .

வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது .இத்தளம் மூலம் இதுவரை 44$ க்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன் .PROOF  கீழே

Friday, August 9, 2013

தலைவாவும் FACEBOOK கலாட்டாக்களும் ...


விஜயின் தலைவா ரீலீசா இல்லையா குழம்பி தவிக்கும் சாதாரண ஜனங்களும் தலைவா TWITTER ,FACEBOOK இல்  படும் பாடுகளை ரசிக்க தான் செய்வர் .சில FACEBOOK  கலாட்டாக்கள் இங்கே