Thursday, January 31, 2013

TWITTER இல் விஸ்வரூபம் படும் பாடு ..


மத சார்பற்ற மாநிலம் தேடி போவேன் தமிழகம் இல்லை என்றால் என்ற கமலின் பேட்டி கண்ட போது  அவரது ரசிகர்கள் இல்லாதவர்களும் வருத்தபடுவார்கள் என நினைக்கிறேன் .

இந்த விஷயம் பற்றி இணையத்தில் தேடிய போது  TWITEER  இல் இந்த பக்கத்தில்  ஒரு கூட்டமே கும்மி அடித்து கொண்டு இருப்பதை கண்டேன் .


பல ரசிக்க தக்க  கமலுக்கு ஆதரவு அளிக்கும் TWEET  கள்  நிரம்பி வழிகிறது .அதில் எனக்கு பிடித்தவை இங்கு 


sateesh botta ‏@bkrsatish
With #viswaroopam its proved that censor has nothing to do except certifying as U or A. They are bunch of jokers as per Tamilnadu Govt



  1. 10h
    penathal suresh ‏@penathal
    Classic lose-lose Situation: #Viswaroopam Kamal loses money, Muslim outfits lose credibility, JJ loses respect, commonman loses a movie

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் தடை நீங்கியது ..அரசு பிடிவாதம் தொடர்கிறது




செய்தி :
  • விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்கி இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது உயர்நீதிமன்றம்
  • விஸ்வரூபம் திரைபடத்தை நாளை திரையிடலாம் என அறிவிப்பு



அரசு தொடர்ந்து பிடிவாதம் :

  • தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி க்கு வழங்காமல்  விஜய் டிவிக்கு வழங்கியது காரணமா ?
  • நாளை காலை 10.30 மணி வரையாவது நிறுத்தி வைக்கலாமா என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.காலை 5 மணிக்கே படத்தை  திரையிட்டு விடுவார்கள் என்பதால் இந்த கேள்வி
  • 10.30 am வரை தடை பிறப்பித்தால் மேல்முறையீடு செய்து தடையை நீட்டிக்க அரசு எண்ணுகிறது

(எனக்கு தெரிந்து கமல் ஜெ.யை சந்தித்து  காலில் விழுந்தால் போதும்  திரையிடலாம்  என தோன்றுகிறது ?

உங்கள் கருத்து என்ன ?

உங்கள் பார்வைக்கு :














Tuesday, January 22, 2013

GOOGLE+ FOLLOWERS WIDGET யை EDIT செய்ய வேண்டுமா ?

GOOGLE + FOLLOWER WIDGET
இன்று காலை BLOGGER DASHBOARD இல் உலவி கொண்டிருக்கும் போது தற்செயலாக GOOGLE+ FOLLOWER WIDGET யை நமது தளத்திற்கு ஏற்றபடி  EDIT செய்யும் வசதி இருப்பதை அறிந்தேன் .தெரியாத அன்பர்களுக்காக இந்த பதிவு



முதலில் பிளாக்கர் DASHBOARD இல் LAYOUT பகுதிக்கு செல்லுங்கள் அங்கு GOOGLE FOLLOWER WIDGET யை EDIT இல் கிளிக் செய்யுங்கள் .இதுவரை இணைக்காதவர்கள் ADD GADGET சென்று இணைத்து கொள்ளுங்கள்

GOOGLE + FOLLOWER WIDGET

  • அங்கு DEFAULT ஆக SIZE என்பதில் AUTOMATIC என்று இருக்கும் .அதை MANUALLY SPECIFY என்று மாற்றி உங்கள் தளத்தின் SIDEBAR அளவுக்கு ஏற்ற மாதிரி  HEIGHT மற்றும் WIDTH உள்ளிடுங்கள்
  • பின்புலம் DEFAULT ஆக DARK TEXT ON LIGHT BACKGROUND ஆக இருக்கும் .பின்புலம் கருப்பாக வேண்டும் எனில் கீழே படத்தில் குறிப்பிட்டபடி  செய்யுங்கள் SAVE செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் .இனி உங்கள் தளத்துக்கு ஏற்றபடி GOOGLE+ FOLLOWER WIDGET இருக்கும் 



GOOGLE + FOLLOWER WIDGET

உங்கள் பார்வைக்கு :



Monday, January 21, 2013

அனுஷ்காவும் அலெக்ஸ் பாண்டியனும் ...



ரஜினி நடித்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரில் ஓர் படம்   நல்லா தான்  இருக்கும் என்று படம் பார்க்க போனால் வருவியா வருவியா என குத்து குத்தி வெளியே அனுப்புகிறார்கள் .சிவகாசி ,வேட்டைக்காரன் ரக விஜய்க்கு போட்டியாக உருவெடுத்து வருகிறார் கார்த்தி

கதை 
மாற்றான் படத்தில் தடை செய்யப்பட்ட மருந்து போல இங்கேயும் ..அந்த மருந்தை அனுமதிக்க முதல்வரின் கையெழுத்துக்காக அவளது மகளை கடத்த கடத்தல் காரன் கார்த்தியிடம் ஒப்படைக்கிறார்கள் .

அவரும் சில இரவுகள் அனுஷ்காவை பத்திரமாக வைக்கிறார் காட்டில் ஓர் வீட்டில் .திரும்ப ஒப்படைக்க போகும் போது அனுஷ்கா அந்த மருந்தை பற்றி சொல்ல நல்லவனாகி  முதல்வரிடம் அனுஷ்காவை எப்படி ஒப்படைக்கிறார் என்பது தான் கதை 

அனுஷ்கா :

  • அனுஷ்கா ரசிகர்களுக்கு கண்கொள்ள காட்சியாக கார்த்தி அனுஷ்காவை கடத்தும் காட்சி இருந்திருக்கும் .
  • அனுஷ்கா கார்த்தியின் சட்டையை போட்டு இருக்கும் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்து.
  • ஏகபட்ட உயரத்தில் இருந்து விழும் கார்த்திக்கு ஒன்றும் ஆகவில்லை .அனுஷ்கா மட்டும் மூலிகை சிகிச்சை எடுக்கிறார் 
  • அனுஷ்கா- கார்த்தி காதல் காட்சிகள் அவ்வளவாக இல்லை 
ALEX PANDIYAN-KARTHI

அலப்பரைகள் :

  • தூரத்து சொந்தம் என்று கார்த்தியை சந்தானத்தின் அம்மா அறிமுகபடுத்தியும் அவரது தங்கைகளை வைத்து காமெடி என்ற பெயரில் செய்யும் கூத்து ரொம்ப அதிகம் 
  • கார்த்தி யார் என்பதை  தெரிந்த சந்தானத்தின் அம்மாவே மகள்களை கார்த்திக்கு எண்ணை தேய்த்து விட வைக்கும் இடம் எல்லாம் ஐயோ ரகம் 
  • எண்ணை தேய்த்து விடுவதும் காம விளையாட்டுகள் விளையாடுவதுமாக போகிறது காமெடி காம நெடி

மொத்தத்தில் நேரம் போக வில்லை எனில் அனுஷ்கா ரசிகர்  எனில் இப்படத்தை பார்க்க முற்படலாம் 

உங்கள் பார்வைக்கு :




Saturday, January 19, 2013

பவர் ஸ்டாரின் பவர் -லட்டு தின்ன ஆசை



பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் அச்சு அசல் ரீமேக்  .ஹிந்தி ஆசிரியர்க்கு பதில் பாட்டு வைத்தியர் .கராத்தே மாஸ்டருக்கு பதில் டான்ஸ் மாஸ்டர் ,நாயகின் அம்மாவுக்கு வீட்டு வேலை செய்யும் கதாபாத்திரம் அப்படியே சேது வாக பாக்கியராஜ் வேடத்தில் ..


மூன்று வாலிபர்கள் ஒரு பொண்ணை காதலிக்கும்  அதே கதை சற்று மாறுபட்ட  கதாபாத்திரங்களில்  ..

  • என்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என  பவர் அடிக்கும் லூட்டி கலக்கல்
  • பவர் காட்டும் ஒவ்வொரு முகபாவனைக்கும் நமக்கு சிரிப்பு வருகிறது.
  • சந்தானம் பவாரை கலாய்த்து அடிக்கும் வசனங்களுக்கு பவரை பார்க்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது (சந்தானத்தையும் தான் )
  • நாயகி விசாகா தமிழ் சினிமா கதாநாயகிகள் பண்ணுவதை விட அதிகமாகவே பண்ணி இருக்கிறார் அழகாவும் இருக்கிறார்

  • இந்த படத்தின் உண்மையான நாயகன் பவர்ஸ்டார் என்று தான் நினைக்கிறேன் .
  • பவரை கலாய்த்து ஒரு பாட்டு சந்தானத்துக்கே பாதகமாய் அமைந்து விட்டது என நினைக்கிறேன் 
  • சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார் 
  • சந்தானத்துக்கு மட்டும் தனி பாட்டு காதலை சொல்வதற்கு !.
சந்தானம் அவர் மனதில் உள்ளதை எல்லாம் வசனங்களாக அள்ளி தெளித்துள்ளார்

உதாரணத்துக்கு பவர் ஸ்டாரை பார்த்து சந்தானம் பேசும் சில வசனங்கள் 
  • நான்லாம் காமெடியன்னு தெரிஞ்சு இருக்கேன் நீ காமெடியன்னு  தெரியாமா காமெடி பன்ற 
  • நானும் எத்தன நாலா தான் அடுத்தவன் காதல ஊட்டி  வளக்குறது நானும் டூயட் பாடனும் 

மொத்தத்தில் இன்று போய் நாளை வா படம் பார்க்கதாவர்களுக்கு இந்த படம் கலக்கலோ கலக்கல் .பார்த்தவர்களுக்கோ கலக்கல் .சிரித்து சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம்





Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் DTH இல் முதலில் ஒளிபரப்பானால் பதிவுலகத்தின் நிலை ?



விஸ்வரூபம்  திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே DTH  இல் ஒளிபரப்பானால் பதிவுலகில் என்ன நடக்கும் என்பது பற்றிய எனது கற்பனை இந்த பதிவு


இவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே .நடக்க வாய்ப்பு உண்டு !

  • DTH இல் திரைப்படம் வெளியான  அன்றே  இரவு 12 மணிவாக்கில் விஸ்வரூபம் வீழ்ந்ததா ?,விஸ்வரூபம் -எழுச்சி  என்று பல திரை விமர்சனங்கள் போட்டி போட்டி கொண்டு பதிவுலகில் வெளியிடப்படலாம் 
  • அடுத்தநாள்  திரையரங்கில் பார்த்து அரக்க பறக்க விமர்சனம் போடுவோர்கள் இனி டிவியில் பார்த்து எழுத உந்த படலாம் .ஏன்என்றால் அதற்க்கு முன்பே  விமர்சனங்கள் வந்து தமிழ் மணம் திரட்டியில் திரைமணத்தில் சூடான இடுகைகளில் வந்து விடும் 
  • பிரபல பதிவர்களும் என்ன செய்ய DTH இல் பார்த்து விமர்சனத்தை முதலில் போடுவோம் என நினைக்க வாய்ப்பு உண்டு .
  • விமர்சனம் எழுதும் பல பதிவர்களின் தூக்கம் கெட வாய்ப்பு உண்டு .படம் முடிந்து விமர்சனத்தை டைப் செய்து பதிவாக போட வேண்டுமே 
  • விமர்சனம் படிக்க காத்து கிடக்கும் பதிவர்கள் காலையிலே இணையத்தை நோண்டினால் ஏகபட்ட விமர்சனங்கள் திரைமணம் திரட்டியை  ஆக்கிரமித்து கொள்ள வாய்ப்பு உண்டு:
 UPDATE:விஸ்வரூபம் வெளியீடு 25 தேதிக்கு  தள்ளி போகிறது .திரையரங்கில் தான் முதலில் வெளியிடப்படும் .DTH இல் மறுநாள் வெளியிடபடும்

உங்கள் பார்வைக்கு :




Sunday, December 30, 2012

தமிழ் சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்கள் 2012


2012 இல் பல தமிழ் படங்கள் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்து உள்ளது .அவற்றில் நான் ரசித்த பார்த்த படங்கள் பற்றிய எனது எண்ணங்கள் கீழே

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காதலில் சொதப்புவது எப்படி :

  •  நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு   வாழ்த்துக்கள் பாலாஜி. 
  • ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள்  என்பதே கதை.
  • நெகடிவ் க்ளைமாக்ஸ் இல்லை.சுவிட்சர்லாந்து டூயட் இல்லை.தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை உடைத்து எரிந்திருக்கிறது  இப்படம்.
  • "இத சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா!"என அமலாபால் சித்தார்த்திடம் சொல்லும் அழகே தனி!
  • இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் ஈ 

  • நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து  வில்லனை பழிவாங்குவது தான்  கதை 
  • ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா  கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால்  மனித இனம் படும் சின்ன  சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
  • இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
  • இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

VIJAY SETHUPATHI
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

  • தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை கிழித்தெறிந்த படம் .முக்கால்வாசி படத்தில் காதாநாயகி இல்லை.
  • தலையில் அடிபட்டதால் கடந்த ஒரு வருடத்தில் நடந்தைவை அனைத்தும் மறந்த நாயகனுக்கு அவன் திருமணமும் மறந்து விடுகிறது .அவனது நண்பர்கள் அதை மறைத்து  திருமணத்தை எப்படி நடத்தினார்கள் என்பது தான் கதை .
  • நட்பின் பெருமையை சொல்லும் படம் 

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    உங்கள் பார்வைக்கு :



    Saturday, December 29, 2012

    சதை தின்னும் மிருகமா நீ ?-18+


    சதை தின்னும் மிருகமா நீ
    பிணம் தின்னும் கழுகா நீ
    மனிதன் இல்லையா நீ !
    சதைக்கு  அலைவதேன் ?

    மரண தண்டனை உனக்கு
    தீர்வாகுமா ?-கற்பழிக்க துடிக்கும்
    உன் ஆண் உறுப்பை
    அறுத்து எரிய வேண்டாமா ?
    சதை தின்ன அலையும்
    மனிதனல்லவா நீ !

    செய்தி :டெல்லியில் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் மரணம்

    உங்கள் பார்வைக்கு :


    Tuesday, December 25, 2012

    WINDOWS 8 க்கு பிரத்யேக START MENU இப்போது ..

    WINDOWS-8 START MENU

    WINDOWS 8 க்கு உரிய சிறப்பே அதன் APPLICATION  TILES  போல  பதிக்க  பட்டு இருப்பது தான் .ஆனால் எப்போதும் போல START  MENU  இல்லையே WINDOWS 8 இல் என கவலைபடுபவர்களுக்கு இந்த பதிவு



    POKKI 

    • POKKI  என பெயரிபட்டுள்ள இந்த APPLICATION  START  MENU  இல்லையே என கவலைப்படுவர்களுக்கு ஒரு தீர்வு .
    • விண்டோஸ் 7 START  MENU  வில் என்னவெல்லாம் உள்ளதோ அது எல்லாம் இதில் உள்ளது .இதை இன்ஸ்டால் செய்வதால் WINDOWS 8 இன் அம்சங்கள் ஏதும் பாதிக்கபடுவதில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு 


    POKKISTORE :


    • இந்த START  MENU  வில் இணைந்துள்ள கூடுதல் அம்சம் இது .இது WINDOWS  STORE  போன்ற ஒரு  APPLICATION கடை .பல விலை கொடுத்து வாங்க கூடிய மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன .ANGRYBIRDS  GAME  முழுத்திரையில் விளையாட இங்கு பதிவிறக்கி கொள்ளலாம் 


    • இதை DOWNLOAD  செய்ய இங்கு செல்லுங்கள் 


    • FREEMAKE  VIDEO  CONVERTOR  வைத்திருப்பவர்கள் அந்த மென்பொருளை UPADATE  செய்தால் போதுமானது .இந்த மென்பொருள் இணைந்தே  தரப்படுகிறது .
    உங்கள் பார்வைக்கு :


    Sunday, December 23, 2012

    நமது தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க ..


    கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கிவிட்டது.நமது தளத்தில் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு . 

    புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக .. 


      இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்


    முதலில் பிளாக்கர் சென்று

    ப்ளாக்கரின் புதிய தோற்றத்தில் BLOGGER>>>LAYOUT>>>ADD A GADGET>>HTML JAVASCRIPT தேர்வு செய்யவும்
    (பழைய தோற்றத்தில் DESIGN>>PAGE ELEMENTS>>ADD A GADGET 
    செல்லவும் .அங்கு HTML JAVASCRIPT  தேர்வு செய்யவும்) .

    பின்பு கீழே   உள்ள படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களின் IMAGE  URL  யை COPY செய்யவும்  (படங்களின் மீது RIGHT CLICK செய்து  COPY IMAGE LOCATION தேர்வு  செய்யவும் )














    பின்பு பின்வரும் கோடிங்கில் IMAGE LINK 1 மற்றும்  IMAGE LINK 2 என்ற  இடங்களில்  அதனை   PASTE செய்யவும்  SAVE செய்யவும்  .

    <div style='position: fixed; top: 0%; left: 0%;'/>
    <a href="http://kavithaiprem.in/" target="_blank"><img alt="கிறிஸ்துமஸ்" title="கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் " src="IMAGE LINK 1></a>
    </div>
    <div style='position: fixed; top: 0%;right: 0%;'/>
    <a href="http://kavithaiprem.in/" target="_blank"><img alt="கிறிஸ்துமஸ்"title="கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் "
     src="IMAGE LINK 2></a>
    </div>



    Blog Tips
    இனி  உங்கள்  தளத்தின்  இருபுறமும்   உங்களுக்கு  பிடித்த  கிறிஸ்துமஸ்  படங்கள் ,வாழ்த்துக்கள்  ஜொலிக்கும் .  

    குறிப்பு :மேலே உள்ள படங்கள் 150 *100  அளவில் சுருக்கப்பட்டவை .உங்களுக்கு வேறு ஏதேனும் படங்களை இணைக்க விரும்பினால் 150 *100  அளவில் சுருக்கி இணைக்கவும்.உங்கள் தளத்திற்கு ஏற்றபடி இதன் அளவை மாற்றி கொள்ளவும்